search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prisoner"

    கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது.
    கோவை:

    திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 56). கொலை வழக்கு ஒன்றில் கைதான இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை ராமசாமிக்கு மாரடைப்பு ஏற்பட் டதாக கூறி அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் இயற்கை மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், ராமசாமியின் உடல் பிரேத பரிசோதனையின் போது பின்தலை உள்பட சில இடங்களில் காயம் இருந்தது தெரிய வந்தது. இதையறிந்த போலீசார் சிறைக்கு சென்று ராமசாமியுடன் தங்கி இருந்த சக கைதிகளான ரமேஷ்(30), சுப்பிரமணி(32) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது சிறையில் சக கைதி ரமேஷ் என்பவருக்கும் ராமசாமிக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது தெரிய வந்தது. ரமேஷ் மீது ஏற்கனவே சிறை ஊழியரை தாக்கியதாக புகார் உள்ளது. எனவே முன்விரோதம் காரணமாக ராமசாமியை ரமேஷ் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, கைதி மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அறிக்கை கிடைத்ததும் அதை வைத்து மாஜிஸ்திரேட்டு விசாரணை அறிக்கை தருவார். அந்த அறிக்கையில் அடிப்படையில் தான் இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்படுமா? என்பதை கூற முடியும் என்றனர்.
    கோவை மத்திய சிறையில் ஆயுள் கைதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி(வயது 56).

    இவர் அப்பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ராமசாமி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இன்று அதிகாலை 3.40 மணிக்கு இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் அலறித் துடித்தார். சத்தம் கேட்டு ஜெயில் ஊழியர்கள் ஓடிச்சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அளித்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவில் மரண தண்டனை கைதி ஒருவர் தனது மரணத்தை தானே தேர்வு செய்ததன் அடிப்படையில் அவருக்கு மின் அதிர்ச்சி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. #AmericaPrisoner #Prisoner
    நாஸ்வில்லே:

    அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்த டேவிட் ஏர்ல் மில்லர், 1981-ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 36 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பின்னர் நேற்றுமுன்தினம் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்தன. டென்னிசி மாகாணத்தை பொறுத்தமட்டில் பொதுவாக விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றுவது வழக்கம். இது நீடித்த மற்றும் மிக வேதனையான மரணத்தை தரும். எனவே விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றினால் தனக்கு வலி அதிகம் இருக்கும் என கூறிய டேவிட் ஏர்ல் மில்லர், தன்னை மின்சார நாற்காலியில் அமர வைத்து, உடலில் மின்சாரத்தை பாய்ச்சி மரண தண்டனையை நிறைவேற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    அவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டது. அதன்படி நேற்றுமுன்தினம் மாலை உள்ளூர் நேரப்படி 7.25 மணிக்கு தலைநகர் நாஸ்வில்லேவில் உள்ள சிறைச்சாலையில் டேவிட் ஏர்ல் மில்லரை மின்சார நாற்காலியில் அமர வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    இது அங்கு முதல் முறை அல்ல. கடந்த 2013-ம் ஆண்டு சகோர்ஸ்கி என்கிற கைதி, இதே போன்று தனக்கு விஷ ஊசி வேண்டாம் என்றும் மின்சாரத்தை பாய்ச்சி மரண தண்டனையை நிறைவேற்றும் படியும் கேட்டார். அதன்படியே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.  #AmericaPrisoner #Prisoner
    தூத்துக்குடியில் கைதி மர்மமான முறையில் இறந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தூத்துக்குடி:

    மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது42). இவரை கஞ்சா பதுக்கி வைத்து விற்றதாக மெஞ்ஞானபுரம் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைந்தனர்.

    சிறையில் இருந்த பரமசிவத்துக்கு திடீர் என்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் பரமசிவம் பரிதாபமாக இறந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. 

    இதுபற்றி தட்டப்பாறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பரமசிவம் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    வேலூர் ஜெயிலில் அடைக்கபட்டுள்ள பெண் கைதி முத்துலட்சுமிக்கு இன்று ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

    வேலூர்:

    ஜெயிலில் குழந்தையுடன் அடைக்கபட உள்ள பரிதாப நிலைக்கு தள்ளபட்ட முத்துலட்சுமி மாமனாருடன் உல்லாசமாக இருப்பதில் இடையூராக இருந்ததாக நினைத்து அவரது கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 6 வயது சிறுமி கொலையில் தண்டனை பெற்றுள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை அடுத்த ஜடையன்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிகவுண்டர் (வயது 66). இவரது மகன் கோபாலகிருஷ்ணன்(35). லாரி டிரைவர். இவரது முதல் மனைவி தீபா. கடந்த 2011-ம் ஆண்டு இறந்துவிட்டார்.

    இவர்களுக்கு 6 வயதில் மகள் இருந்தார். இந்த நிலையில் கோபாலகிருஷ்ணனுக்கும், முத்துலட்சுமிக்கும் இரண்டாவதாக திருமணம் நடந்தது. கோபாலகிருஷ்ணன் லாரி டிரைவராக வேலை செய்து வந்ததால், அடிக்கடி வெளியூர் சென்றுவிட்டு, மாதத்திற்கு ஒருமுறை மட்டும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

    இதனிடையே பழனிகவுண்டருக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு, இருவரும் வீட்டிலேயே உல்லாசமாக இருந்துள்ளனர்.

    அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பழனிகவுண்டர், முத்துலட்சுமி இருவரும் உல்லாசமாக இருந்த போது, கோபாலகிருஷ்ணனின் முதல் மனைவியின் 6 வயது மகளால் தங்கள் சந்தோசத்திற்கு இடையூறு ஏற்படும் என்று முத்துலட்சுமி கூறினார்.

    இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது 6 வயது பேத்தியை தூக்கி சென்று அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் வைத்து பழனிகவுண்டர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதில் கதறி மயங்கிய நிலையில் இருந்த அந்த சிறுமியை, முத்துலட்சுமி துணியால் சுற்றி கொடுக்க, அந்த சிறுமியை பழனிகவுண்டர் தூக்கி சென்று அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் வீசி கொலை செய்தார்.

    இது குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து, பழனிகவுண்டர் மற்றும் அவரது மருமகள் முத்துலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கில் கடந்த 10-ந் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அதில் பேத்தி என்றும் பாராமல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக பழனி கவுண்டருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அபராதமாக ரூ. 5 ஆயிரமும், உடந்தையாக இருந்த முத்துலட்சுமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. இரண்டாயிரத்து 500 அபராதமும் விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

    அப்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்த முத்துலட்சுமி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்தது.

    புழல் ஜெயிலில் குடிநீர் தொட்டியின் மீது ஏறி கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    செங்குன்றம்:

    சென்னை, பாரி முனையை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கார்த்திக் (28). இவர்மீது பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. கடந்த மே மாதம் கார்த்திக்கை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    நேற்று இரவு ஜெயில் அறைக்குள் செல்லாமல் கார்த்திக் வெளியே நின்றார். இதனை சிறைக் காவலர் ஒருவர் கண்டித்து சில வார்த்தைகளால் திட்டினார்.

    இதனால் மனவேதனை அடைந்த கார்த்திக் சிறை வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். அவர் பைப் வழியாக ஏறிய போது திடீரென வழுக்கி கீழே விழுந்தார்.

    இதில் அவரது விலா எலும்பு முறிந்தது. வலியால் அலறி துடித்த அவரை ஜெயில் சூப்பிரண்டு செந்தாமரைக் கண்ணன் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு கார்த்திக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்கு ஏதுவாக கைதி ஒருவரின் ஜாமீன் வழக்கை நள்ளிரவில் விசாரித்து தீர்ப்பை ஐகோர்ட்டு நீதிபதி வழங்கியுள்ளார். #HighCourtJudge #bail
    சென்னை:

    சென்னை ராயுபுரத்தைச் சேர்ந்தவர் டேவிட்சன். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தாக்கிய வழக்கில் கடந்த 23-ந் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் டேவிட்சனின் தந்தை விஜயகுமார் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக டேவிட்சனை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி டேவிட்சனின் உறவினர்கள் வக்கீல் ஏ.கே.கோபாலை அணுகினர்.

    ஐகோர்ட்டு விடுமுறை நாட்களில் அவசர மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வக்கீல், பதிவாளரை அணுகி அவசர நிலையை எடுத்துக்கூற வேண்டும். வக்கீலின் கோரிக்கை உடனடியாக விசாரிக்கப்பட வேண்டியதுதானா? என்பதை பதிவாளர் பரிசீலித்து தலைமை நீதிபதியிடம் எடுத்துக்கூறுவார். அதன்பின்பு, தலைமை நீதிபதியிடம் உரிய அனுமதி பெற்று ஏதாவது ஒரு நீதிபதி மூலம் விசாரணை நடத்த பதிவாளர் ஏற்பாடு செய்வார்.

    இளம் வக்கீலான ஏ.கே.கோபாலுக்கு இந்த விவரம் தெரியாததால் ஜாமீன் மனுக்களை விசாரித்து வரும் நீதிபதி ஜெகதீஷ்சந்திராவின் வீடு இருக்கும் ராஜா அண்ணாமலைபுரத்துக்கு சென்றார். அப்போது நீதிபதி வீட்டில் இல்லை என்றும், குடும்பத்தினருடன் வெளியில் சென்றிருப்பதாகவும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர்.

    இதனால் வக்கீல், நீதிபதியின் வீட்டு முன்பு காத்திருந்தார். இதற்கிடையே இரவு 10 மணிக்கு நீதிபதி வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பு, இளம் வக்கீல் ஒருவர் நிற்பதை பார்த்து விவரம் கேட்டார். அப்போது வக்கீல் கோபால், தனது கட்சிக்காரரான டேவிட்சன் என்பவரது தந்தை இறந்து போனதாகவும், இறுதி சடங்கில் கலந்து கொள்ள அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்ய வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    அப்போது நீதிபதி, பதிவாளர் மூலம் தான் இந்த மனுவை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். இந்த விவரம் தனக்கு தெரியாது என்று நீதிபதியிடம், வக்கீல் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து நீதிபதி ஜெகதீஷ்சந்திரா மனிதாபிமான அடிப்படையில் தலைமை நீதிபதியிடம் தொடர்பு கொண்டு உரிய அனுமதி பெற்று அந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அரசு வக்கீலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசு தலைமை குற்றவியல் வக்கீல் எமிலியாஸ் அறிவுறுத்தலின் பேரில் அரசு வக்கீல் முகமது ரியாஸ், டேவிட்சன் மீதான வழக்கு விவரங்களை போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்டு நீதிபதி வீட்டுக்கு வந்தார்.

    இதைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு நீதிபதி அந்த மனுவை விசாரித்தார். நள்ளிரவு 12.30 மணிக்கு விசாரணை முடிந்தது. இறுதியில், டேவிட்சனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். பொதுவாக ஐகோர்ட்டு உத்தரவு நகல் தட்டச்சு செய்து வழங்கப்படும். நள்ளிரவு நேரம் என்பதால் ஜாமீன் உத்தரவு நகலை தட்டச்சு செய்வதற்கு அலுவலர்கள் யாரும் இல்லை. இதனால் நீதிபதி தனது கைப்படவே ஜாமீன் உத்தரவை எழுதி அதை ஐகோர்ட்டு பணியாளர் மூலம் புழல் சிறை சூப்பிரண்டுக்கு அனுப்பி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை புழல் சிறையில் இருந்து டேவிட்சன் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுபோல் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குடும்பத்தினரின் ஜாமீன் மனுவை நீதிபதி ஜெகதீஷ்சந்திரா நள்ளிரவில் விசாரித்து தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    வேலூர் ஜெயிலில் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கைதி உடல்நலக்குறைவால் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 800 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. கடந்த வாரங்களில் 2 கைதிகள் திடீரென இறந்தனர்.

    இந்த நிலையில், கடந்த மாதம் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த சவுகத்அலி (வயது 51) சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் திடீரென பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயில் அதிகாரிகளும், பாகாயம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கமுதி அருகே வீடு புகுந்து 5 பவுன் நகைகளை திருடிய கொள்ளையனை சிறையில் அடைக்க அழைத்து செல்லும் வழியில் தப்பி ஓடிய கைதியை போலீசார் மடக்கிப்பிடித்தார்.
    கமுதி:

    கமுதி அருகே அபிராமம் போலீஸ் சரகம் தீர்த்தான் அச்சங்குளம் கிராமத்தில் வீடு புகுந்து 5 பவுன் நகைகளை திருடியதாக ஏனாதி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரை போலீசார் கைது செய்து முதுகுளத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    வழக்கு விசாரணைக்காக மகாலிங்கத்தை போலீசார் கமுதி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். பின்னர் முதுகுளத்தூர் சிறையில் அடைக்க கமுதி கோட்டைமேடு பஸ் நிறுத்தத்தில் காத்திருந்போது போலீசாரை ஏமாற்றி விட்டு மகாலிங்கம் தப்பி ஓடினார். போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மகாலிங்கத்தை விரட்டி பசும்பொன் விலக்கு சாலை அருகே மடக்கிப்பிடித்தனர். பின்னர் முதுகுளத்தூர் கிளை சிறையில் அடைத்தனர். இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    புழல் ஜெயில் வாசலில் போலீசாரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓடியது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்.
    செங்குன்றம்:

    சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27), கூலி வேலை செய்து வருகிறார்.

    ஆதம்பாக்கம் பகுதியில் நடந்த அடிதடி தகராறு தொடர்பாக கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை புழல் ஜெயிலில் அடைக்க அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் ஏட்டுகள் 2 பேர் கார்த்திக்கை ஆட்டோவில் ஏற்றி புழல் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர். இரவு 8.30 மணி அளவில் ஆட்டோ புழல் ஜெயில் வாசலை சென்றடைந்தது.

    அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கிய கார்த்திக் போலீஸ் ஏட்டுகள் இருவரையும் தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மையம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 16 சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. #IshaYogaCenter #IshaFreeYoga #YogaForPrisoners
    சென்னை:

    ஜூன் 21-ம்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நாசபை கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, ஈஷா யோகா மையம் சர்வதேச யோகா தினத்தை கடந்த 3 ஆண்டுகளாக வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், 4-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் ஈஷா யோகா மையம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 16 சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. கோவை, சென்னை, கடலூர், வேலூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள சிறைச்சாலைகளில் யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

    ஈஷா யோகா மையத்தால் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் கைதிகளுக்கு ‘உபயோகா’ எனப்படும் சக்திவாய்ந்த யோகாவை கற்றுக்கொடுக்க உள்ளனர்.

    இந்த யோகாவை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். மூட்டுகள் மற்றும் தசைகள் வலுப்பெறும். குறிப்பாக, சிறை கைதிகள் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த யோகா பயிற்சி மூலம் ஆயிரக்கணக்கான கைதிகள் பயன்பெற உள்ளதாக ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. #IshaYogaCenter #IshaFreeYoga #YogaForPrisoners
    கோவை ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னக்காளை(வயது 47).

    இவர் கடந்த 2006-ம் ஆண்டு அப்பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் நாமகிரிபேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சின்னக்காளைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    நேற்று இரவு ஜெயில் அறையில் சின்னக்காளைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் அலறித் துடித்தார்.

    சத்தம் கேட்டு அங்கு சென்ற ஜெயில் ஊழியர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

    இதுகுறித்து ஜெயில்சூப்பிரண்டு செந்தில்குமார் ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×