search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Station"

    • போலீசார் பற்றாக்குறையால் குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை பிடிப்பதும், குற்றங்கள் ஏற்படும் முன்பு தடுப்பதும் தற்போது பெரும் சவாலாக மாறி இருக்கிறது.
    • பணியமர்த்தப்பட்ட போலீசார், டி.எஸ்.பி, அலுவலகம், தனிப்படை என மாற்று பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. கும்மிடிப்பூண்டி, காட்டுப்பள்ளி, மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் தனியார் நிறுவனங்கள்அதிகரித்து வரும் நிலையில் பொன்னேரி பகுதிகளில் வெளியூர்களில் இருந்து குடியேறும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக தற்போது வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் அதிகமானோர் வசித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களாக பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. போலீசார் பற்றாக்குறையால் குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை பிடிப்பதும், குற்றங்கள் ஏற்படும் முன்பு தடுப்பதும் தற்போது பெரும் சவாலாக மாறி இருக்கிறது.

    பொன்னேரி காவல் நிலைய எல்லையான, 8 கி.மீ., சுற்றளவு பகுதிக்குள், 15 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய 44 பெரிய கிராமங்கள், 22 சிறு கிராமங்கள் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகள், ஆண்டார் குப்பம் மேட்டுப்பாளையம், ஆசான புதூர், பெரும்பேடு குப்பம். ஏலியம்பேடு, உள்ளிட்ட சுமார் 80 கிராமங்கள் வருகின்றன.

    பொன்னேரி போலீஸ் நிலையத்தில், ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்இன்ஸ்பெக்டர், 33 காவலர்கள் பணியில் இருந்தனர். ஆனால் தற்போது ஒரு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு), ஒரு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் 4 காவலர்கள் என, மொத்தம், 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இங்கு பணியமர்த்தப்பட்ட போலீசார், டி.எஸ்.பி, அலுவலகம், தனிப்படை என மாற்று பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    போலீஸ் பற்றாக்குறையால், பொன்னேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு, குற்றசம்பவங்கள், சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே போலீஸ் பற்றாக்குறையை நீக்கி, இரவு ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • உளுந்தூர்பேட்டை யிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ளது போக்குவரத்து போலீஸ் நிலையம்.
    • 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை யிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ளது போக்குவரத்து போலீஸ் நிலையம். இந்நிலையில் இன்று காலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் போலீஸ் நிலையத்திலிருந்து அலுவலக பணி காரணமாக வெளியில் சென்றனர். அப்போது 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது. அப்போது பணியில் இருந்த போலீசார் இதனை பார்த்து உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 அடி நீள சாரை பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

    • மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2017-ம் ஆண்டு வட்டிக்கு பணம் வாங்கினேன்.
    • பஞ்சாயத்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என கூறி வீட்டை காலி செய்யாமல் இருந்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள டி.வி. பத்தூதர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி அமுதா (40). இவர் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:- நாங்கள் இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள். அதே ஊரை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2017-ம் ஆண்டு வட்டிக்கு பணம் வாங்கினேன். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தி அசல் வட்டியுடன் சம்பந்தப்பட்ட நபரிடம் பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன். அந்த நபர் பாண்டு பத்திரத்தை திருப்பி கொடுக்கவில்லை.

    இந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக குடும்பத்துடன் வெளியூர் சென்று கூலி வேலை செய்து வந்தேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார். அமுதா வெளியூர் சென்ற நேரத்தில் அந்த நபர் வீட்டின் பூட்டை உடைத்து அபகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.இது தொட ர்பாக கடந்த மாதம் 22-ந் தேதி கருவேப்பிலங்குறிச்சி போலீசில் அமுதா புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அந்த நபர் ஊரில் பஞ்சாயத்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என கூறி வீட்டை காலி செய்யாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அமுதா மற்றும் அவரது உறவினர்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையம் முன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அங்கு வந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

    • குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய வாகனங்களை நிறுத்துவதற்காக தனி வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • உள்ளாட்சி நிர்வாகம் சீர்படுத்த வேண்டும் என காவல் நிலையத்திற்கு வருவோர் கோரிக்கை விடுத்தனர்.

    சூலூர்,

    சூலூர் காவல் நிலைய வளாகத்தில் குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய வாகனங்களை நிறுத்துவதற்காக தனி வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு எப்போதும் 30 கார்கள், 50 பைக்குகளை பார்க்க முடிகிறது.

    சூலூரை சேர்ந்த சிலர் போலீஸ் நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு வெளியூருக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் காவல் நிலையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லை.

    சூலூர் காவல் நிலைய வளாகத்தில் கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலையமும் இயங்கி வருகிறது. இங்கு வரும் புகார்தாரர்கள் வாகனங்களை நிறுத்த இடம் தேடி அலைவது வாடிக்கையாக உள்ளது.

    போலீஸ் நிலையத்தின் அருகில் ஒன்றிய அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் சப் ரிஜிஸ்டர் அலுவலகம் ஆகியவை உள்ளன. இங்கு வருபவர்கள் வாகனங்களை காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி விட்டு செல்வதால் இடப் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே இதனை உள்ளாட்சி நிர்வாகம் சீர்படுத்த வேண்டும் என காவல் நிலையத்திற்கு வருவோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மேலும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு வருவோர் காவல் நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    • ராம்குமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருந்து வருகிறார்.
    • நேற்று முன்தினம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறு கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார்(வயது25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருந்து வருகிறார்.இவரும் அவரது பக்கத்து ஊரான வாணியம்பாளையத்தை சேர்ந்த நிர்மலா (22) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். நிர்மலாவின் பெற்றோர் மகளை காணவில்லை என்றும் ராம்குமார் கடத்தி சென்றதாகவும் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் இது குறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன நிர்மலாவை தேடி வந்தனர். இதற்கிடையில் காணாமல் போன நிர்மலா, ராம்குமார் உடன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார். புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கைதான இருவரும் பா.ம.க.வில் நிர்வாகிகளாக உள்ளனர்.
    • காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் இறந்த பின்னர் இவரது ஆதரவாளர்கள் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் ரவுடி ஸ்ரீதர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஸ்ரீதரின் படத்துடன் போலீஸ் நிலையங்களை குண்டுவைத்து தகர்க்கப் போவதாக பதிவிட்டு இருந்தனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் புவனேஸ்வரன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்ட உழகோல்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (19), மற்றும் அவருக்கு முகநூல் பக்கத்தில் பதிவை வெளியிட உதவிய கிதிரிப் பேட்டை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் ரோகித் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இருவரும் பா.ம.க.வில் நிர்வாகிகளாக உள்ளனர். இதுதொடர்பாக காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    • பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவிக்க அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து நின்று உள்ளனர்.
    • போலீசார் அவர்களை தடுத்து காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரும், அவரது 17 வயது மகளும், அவர்களுக்கு 2 நபர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவிக்க நேற்று மாலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து நின்று உள்ளனர்.

    அவர்கள் புகாரை நீண்ட நேரமாக விசாரிக்காததால், போலீஸ் நிலைய வளாகத்திலேயே திடீரென தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்குள் போலீசார் அவர்களை தடுத்து காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் தற்போது இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸ் நிலைய வளாகத்தில் தாயும் மகளும் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீஸ் நிலையங்களில் 2400 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்ட போலீசார் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 46 போலீஸ் நிலையங்கள், 11 போலீஸ் குடியிருப்புகள், 3 ஆயுதப்படை மைதானங்கள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் பலன் தரும் 600 மரக்கன்றுகள் உள்பட 2400 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது.விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    • மகளிர் போலீஸ் நிலையத்தை கடந்த 6-ந்தேதி காணொலி காட்சி மூலம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.
    • முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு போலீசாருக்கு இனிப்புகளை வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் காரையூர் உள்ளிட்ட 4 போலீஸ் நிலையம் இலுப்பூர் சப்-டிவிசன்களுக்கு உட்பட்டது. இந்தநிலையில் இப்பகுதி பெண்கள் தங்களது பிரச்சினை குறித்து மகளிர் காவல் நிலையம் செல்ல வேண்டுமானால் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் செல்லும் நிலை இருப்பாக கூறிவந்தனர். எனவே இந்த இலுப்பூரிலேயே அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அப்போது அமைச்சராக இருந்த டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை கடந்த 6-ந்தேதி காணொலி காட்சி மூலம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு போலீசாருக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் இலுப்பூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் குருபாபு, நகர செயலாளர் மணிகன்டன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர் பிறப்பித்தி ருந்தார்.
    • தாளவாடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்ய ப்பட்டுள்ளனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பொறுப்பேற்ற நாளிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி அதற்கென்று தனியாக போலீசாரை நியமித்து உள்ளார்.

    இதேபோல் டாஸ்மாக் கடைகள், பார்களையும் போலீசார் கண்காணிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த 12 போலீசார் அதிரடியாக தாளவாடி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பிறப்பித்திருந்தார்.

    அதன்படி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த கிரேடு–1 ஜெய சங்கர மூர்த்தி, மூர்த்தி, கருங்கல்பாளையம் கிரேடு–1 பால முருகன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் சித்தோடு கோபால், பவானி ரமேஷ், அம்மாபேட்டை முருகன், பவானிசாகர் முத்துமாணிக்கம், ஈரோடு டவுன் மதுவிலக்கில் ராஜேந்திரன், செந்தில், ஆசனூர் மதுவிலக்கு சாதிக் பாட்சா, தலைமை காவ லர்கள் கடத்தூர் தினேஷ் குமார், கடம்பூர் அசோக் ஆகிய 12 பேரும் தாளவாடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிட ப்பட்டுள்ளது. மேலும் நிர்வாக காரணத்திற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • புதிய போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு விழா நடந்தது.
    • சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் எதிரே 27 சென்ட் இடத்தில் ரூ.99 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிய நகர போக்குவரத்து காவல் நிலையம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்றது.

    கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய காவல் நிலையத்தை காணொலி காட்சி மூலம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய காவல் நிலையத்தில் விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் குத்துவிளக்கு ஏற்றி மரக்கன்றுகள் நட்டார். அப்போது ராஜபாளையம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு போக்குவரத்து காவலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என காவல்துறைக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் லாவண்யா, ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணாத்தாள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • க.பரமத்தியில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் திறக்கப்பட்டது.
    • முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

    கரூர்:

    பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டி தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற திட்டத்தின் கீழ் கரூர் ஊரக உட்கோட்டத்தில் க.பரமத்தியில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

    இதையொட்டி க.பரமத்தியில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. இ.சுந்தரவதனம் ரிப்பன் வெட்டி புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்து, காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டார். அரவக்கு றிச்சி டிஎஸ்பி முத்தமிழ்செல்வன், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரூபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரூபி பொறுப்பு இன்ஸ்பெக்டராக செயல்படுவார். கரூர் ஊரக உட்கோட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை, வேலாயுதம்பாளையம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணை இங்கு மேற்கொள்ளப்படும்.

    ×