search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டை மீட்டு தரக்கோரி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியல்விருத்தாசலம் அருகே பரபரப்பு
    X

    சாலை மறியல் நடைபெற்ற காட்சி.

    வீட்டை மீட்டு தரக்கோரி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியல்விருத்தாசலம் அருகே பரபரப்பு

    • மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2017-ம் ஆண்டு வட்டிக்கு பணம் வாங்கினேன்.
    • பஞ்சாயத்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என கூறி வீட்டை காலி செய்யாமல் இருந்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள டி.வி. பத்தூதர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி அமுதா (40). இவர் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:- நாங்கள் இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள். அதே ஊரை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2017-ம் ஆண்டு வட்டிக்கு பணம் வாங்கினேன். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தி அசல் வட்டியுடன் சம்பந்தப்பட்ட நபரிடம் பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன். அந்த நபர் பாண்டு பத்திரத்தை திருப்பி கொடுக்கவில்லை.

    இந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக குடும்பத்துடன் வெளியூர் சென்று கூலி வேலை செய்து வந்தேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார். அமுதா வெளியூர் சென்ற நேரத்தில் அந்த நபர் வீட்டின் பூட்டை உடைத்து அபகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.இது தொட ர்பாக கடந்த மாதம் 22-ந் தேதி கருவேப்பிலங்குறிச்சி போலீசில் அமுதா புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அந்த நபர் ஊரில் பஞ்சாயத்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என கூறி வீட்டை காலி செய்யாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அமுதா மற்றும் அவரது உறவினர்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையம் முன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அங்கு வந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

    Next Story
    ×