search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Station"

    • போலீஸ் இன்ஸ்பெக்டரை விட போலீஸ் மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது.
    • அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கான திட்டம் என்று கருத்து நிலவியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் போலீஸ் நிலையங்களை வாடகைக்கு எடுக்கலாம் என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. போலீஸ் நிலையத்துடன் இன்ஸ்பெக்டர் மோப்பநாய், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்டவைகளையும் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

    மேலும் ஒவ்வொரு வசதிக்கான கட்டண பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு போலீஸ் நிலையத்திற்கு ரூ12 ஆயிரம், வயர்லெஸ் கருவிகளுக்கு ரூ12ஆயிரத்து 130, மோப்ப நாய்க்கு ரூ7ஆயிரத்து 280, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ3 ஆயிரத்து 35 முதல் ரூ3ஆயிரத்து 340 வரை என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மொத்தமாக ஒரு போலீஸ் நிலையம், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், வயர்லெஸ் கருவிகள், மோப்பநாய் என அனைத்தும் சேர்த்து ரூ34 ஆயிரத்து 750 கட்டணமாக இருக்கிறது. இன்ஸ்பெக்டருக்கு பதிலாக சிவில் போலீஸ அதிகாரிக்கான கட்டணம் ரூ610 ஆகும்.

    காவல்துறை வெளியிட்டுள்ள இந்த பட்டிலின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டரை விட போலீஸ் மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது. ஆனால் அதற்கான காரணம் தெளிவாக கூறப்படவில்லை.

    காவல்துறையின் இந்த முடிவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அரசு அதிகாரிகள் சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

    அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கான திட்டம் என்று கருத்து நிலவியது. ஆனால் இது நிதிநிலையை உயர்த்துவதற்கான திட்டம் இல்லை என்றும், இது ஏற்கனவே உள்ள பழைய திட்டம் எனவும், புதிய கட்டணங்களுடன் தற்போது வெளிவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • பாட்டிலில் இருந்து மண்எண்ணைய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் செக்காங்க ண்ணி பகுதியைச் சேர்ந்தவர் ஜான்பென்னி(வயது 49). ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் பிரவீன்கு மார். இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து கடந்த மாதம்(ஆகஸ்டு) 11-ந் தேதி வெளியே வந்தார்.

    இந்த நிலையில் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் செல்போன் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக கூறி பிரவீன்குமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.

    தனது மகன் கைது செய்யப்பட்டதை அறிந்த ஜான் பென்னி கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த போலீசாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதில் பிரவீன் குமாருக்கு பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பதாகவும், அதனால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்து ள்ளனர். இதனால் மனம் உடைந்த ஜான் பென்னி தனது மகன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி போலீஸ் நிலையம் முன்பு தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்து மண்எண்ணைய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    இதனைக கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ஜான்பென்னியை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான் பென்னி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் போலீஸ் நிலையம் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    • நடமாடும் போலீஸ் நிலையம், ஜி-20 மாநாடு முடிவடைந்தபிறகும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் போலீஸ் நிலையம் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்காக ஒரு வேன், போலீஸ் நிலைய வடிவமைப்பில் மாற்றப்பட்டு உள்ளது. இதில் 5 பேர் உட்காருவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மற்றும் போலீசாருடன் சாதாரண போலீஸ் நிலையம் போல இது செயல்படும். இதில் இன்டர்நெட் வசதி மற்றும் மாநாட்டின் முக்கிய செய்திகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. 24 மணிநேரமும் செயல்படும் இது, எங்காவது அவசர நிலை ஏற்பட்டால் அங்கு உடனடியாக இந்த போலீஸ் நிலையம் சென்றடையும். இந்த நடமாடும் போலீஸ் நிலையம், ஜி-20 மாநாடு முடிவடைந்தபிறகும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அசோக்குமாரை, போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
    • மீண்டும் மீண்டும் தனது கைகளை கிழித்துக் கொண்டார்.

    கடலூர்:

    காடாம்புலியூர் பேர்பெரியான்குப்பம் கந்தன் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் அசோக்குமார் (வயது 23) ரவுடி. அப்பகுதியில் நடைபெற்ற திருட்டு குறித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்த அசோக்குமாரை, போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது போலீசா ரிடம் வாக்குவாதம் செய்த அசோக்குமார், தான் வைத்திருந்த பிளேடால் கையை கிழித்து க்கொண்டார். சந்தேகத்தின் பேரில் என்னை கைது செய்ய துடிக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையம் முன்பு நின்று கூச்சலிட்டார். மேலும், பிளேடால் மீண்டும் மீண்டும் தனது கைகளை கிழித்துக் கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சைக்கு பின் அசோக்கு மாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 3 ஊராட்சிகளில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • பல்லடம் காவல் நிலையத்திற்கு 97 கிராமங்கள் மற்றும், பல்லடம் நகரம் ஆகியவை உள்ளடங்கியுள்ளது.

    பல்லடம்:

    பல்லடத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் உட்கோட்ட காவல்துறையில் பல்லடம், மங்கலம், காமநாயக்கன்பாளையம், அவினாசி பாளையம், மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் என 5 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் பல்லடம் காவல் நிலையத்திற்கு 97 கிராமங்கள் மற்றும், பல்லடம் நகரம் ஆகியவை உள்ளடங்கியுள்ளது. இந்த நிலையில் பல்லடம் நகரம், மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் வேகமான வளர்ச்சி அடைந்து மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதில் ஆறுமுத்தாம் பாளையம், கரைப்புதூர், கணபதிபாளையம், ஆகிய 3 ஊராட்சிகளில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    மேலும் இங்கு பனியன் நிறுவனங்கள், சாய ஆலைகள் அமைந்துள்ளதால் வட மாநிலத் தொழிலாளர்கள், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராமங்களில் ஏதாவது சம்பவங்கள் நடைபெற்றால் பல்லடம் காவல் நிலையத்தில் இருந்து அங்கு செல்வதற்கு தாமதமாகிறது.

    இதனால் குற்றவாளிகள் எளிதாக தப்பி விடுகின்றனர். மேலும் பல்லடம் காவல் நிலையத்தில் தினமும் சுமார் 10க்கும் குறையாமல் வழக்குகள் பதிவு செய்யப்படுவதால் போலீசாருக்கு வேலை பளு அதிகரித்துள்ளது. பணிச்சுமையால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலையும் உள்ளது. இதனால் பல்லடம் காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து அருள்புரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
    • கரடி கூடலூர் தாசில்தார் அலுவலகம் வழியாக கூடலூா் நகரில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்துக்குள் புகுந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அதிகமான வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தை, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த விலங்குகள் அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து வருகிறது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவதுடன், அங்குள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. அதோடு, சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கூடலூர் பகுதியை யொட்டிவனத் தில் இருந்து சம்பவத்தன்று இரவு கரடி ஒன்று வனத்தை விட்டு வெளியேறியது.

    அந்த கரடி கூடலூர் தாசில்தார் அலுவலகம் வழியாக கூடலூா் நகரில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்துக்குள் புகுந்தது.

    அங்கு அந்த கரடி வெகு நேரமாக சுற்றித் திரிந்துள்ளது. பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

    நகரின் மையப்பகுதியிலுள்ள போலீஸ் நிலைய வளாகத்துக்குள் கரடி நுழைந்திருப்பது அனைவரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    • வில்லியனூரில் பரபரப்பு
    • விடுதலை சிறுத்தை கட்சியினர் வில்லியனூர் போலீஸ் நிலையம் வந்து போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் புதுவை-விழுப்புரம் பைபாஸ் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 60 அடி உயரத்தில் விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பம் அமைக்கப்பட்டது.

    திருமாவளவனின் 60-வது பிறந்தநாளையொட்டி அமைக் கப்பட்ட கொடி கம்பத்தில் இன்று திருமாவளவன் கொடி ஏற்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பம் அனுமதி இல்லாமல் அமைக் கப்பட்டதாக கூறி தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் வில்லிய னூர் இன்ஸ்பெக்டர் வேலயன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று ஜேசிபி இயந்திரம் கொண்டு விசிக கொடி கம்பம் அடியோடு அகற்றப்பட்டது.

    இதனை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் வில்லியனூர் போலீஸ் நிலையம் வந்து போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில்  மீண்டும் விடுதலை சிறுத்தை கட்சியினர் வில்லியனூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    தொகுதி நிர்வாகிகள் தமிழ்வளவன், ஆதவன், ரவி, தமிழரசன், அரிமாதமிழன், தனுசு மற்றும் மாநில நிர்வாகிகள் செழியன், இன்பத்தமிழன் பாக்கியலட்சுமி, ஏழுமலை, எழில்மாறன் ஆகியோர் போலீஸ் நிலையத்தை திடீர் முற்றுகையிட்டு போலீசாரை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

    இன்னும் 2 நாட்களில் கொடி கம்பம் அமைக்க அனுமதி அளிக்காவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறிவிட்டு கலைந்து சென்றனர்.

    • மேலவளவு கிராம பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா அமைப்பது குறித்து போலீஸ் நிலையத்தில் ஆலோசனை நடந்தது.
    • சப்-இன்ஸ் பெக்டர் பிரகாஷ் தனிப் பிரிவு ஏட்டு ரஞ்சித் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மேலவளவு காவல் நிலை–யம். இதற்கு உட்பட்ட கிரா–மங்களில் குற்ற சம்பவங் களை தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக மேல–வளவு போலீஸ் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர்க–ளுடன் கலந்தாய்வுக்கூட்டம் மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் அ.வல்லாளப்பட்டி பேரூராட்சி சேர்மன் கும–ரன்,

    மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் மலைச்சாமி, கிடாரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா மதிவாணன், சேக்கிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பிரபு,அ.வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம், மேலவளவு சப்-இன்ஸ் பெக்டர் பிரகாஷ் தனிப் பிரிவு ஏட்டு ரஞ்சித் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.

    • இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் இணைந்து சுத்தம் செய்து சுகாதாரமாக பேணி காத்து வருகின்றனர்.
    • இந்த செயலை காவலர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, அன்னூர், பில்லூர் ஆகிய 5 காவல் நிலையங்கள் உள்ளது.

    இதில் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் மேட்டுப்பாளையம் நகரின் மத்தியில் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் ஏதாவது புகார் கொடுக்க வேண்டும் என்றால் இங்கு தான் வருவார்கள்.

    இந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக கடந்த ஓராண்டுக்கு முன்பு நவநீதகிருஷ்ணன் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து சுத்தம் மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தான் மற்றும் தன்னை சுற்றி இருப்பவர்கள் எப்போதும் சுத்தம், சுகாதாரத்துடன் இருக்கவே விரும்புகிறார்.

    இவர் இங்கு வந்ததில் இருந்து போலீஸ் நிலையத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துள்ளார்.

    அதன்படி தினமும் காலையில் காவலர்களின் ரோல் கால் முடிந்தவுடன் காவலர்கள் குடியிருப்பு பகுதி மற்றும் போலீஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் இணைந்து சுத்தம் செய்து சுகாதாரமாக பேணி காத்து வருகின்றனர்.

    மேலும் போலீஸ் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் விழிப்புணர்வு ஓவியங்கள், போலீஸ் நிலையத்தை பூங்கா போல் அமைத்து உள்ளனர்.

    புகார் அளிக்க வரும் பொது மக்களுக்கு அமர்வதற்கு இருக்கை, மேலும் காவலர்கள் குடியிருப்பில் உள்ள குழந்தைகள் விளையாடுவதற்காக மைதானம் ஆகியவையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு ள்ளது.

    இவருடைய இந்த செயலை காவலர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    • இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • 9 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

    திருவனந்தபுரம்:

    போலீஸ் நிலையம் என்றாலே அங்கே குற்றவாளிகளை மிக கடுமையாக நடத்தும் மன நிலை, அதிக சத்தம் போட்டு மிரட்டுவது போன்றவற்றை சினிமாவிலும், நேரிலும் பார்த்து இருப்போம். ஆனால் காக்கி சீருடை அணிந்தவர்கள் மனதில் ஜாலியான பல விஷயங்கள் ஒளிந்திருப்பது யாருக்கும் தெரிந்திருக்காது. இந்தநிலையில் கேரளாவில் போலீஸ் நிலையத்திலேயே கோழிக்கறி சமைத்து ஆசையாக பரிமாறிய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் இலவம்திட்டா போலீஸ் நிலையத்தில் போலீசார் சீருடை அணிந்த நிலையில் கோழிக்கறி குழம்பு, மரவள்ளிக்கிழங்கு களி போன்றவற்றை சமைத்து ருசித்து சாப்பிட்டனர். அத்துடன் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பரப்பினர்.

    அந்த வீடியோவில் கடைக்கு சென்று கோழி இறைச்சியை வாங்கியது முதல் வெங்காயம் வெட்டியது, இஞ்சி பூண்டு உரிப்பது, பின்னர் மசாலா போட்டு சமைப்பது, அவற்றை பரிமாறி சாப்பிடுவது போன்றவை பின்னணி பாடலுடன் சிறப்பாக எடிட் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் அந்த சாப்பாட்டை அதிகாரிகளுக்கு பரிமாறி கொண்டதும், ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டதும் வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தற்போதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமென்ட்களையும் பெற்றுள்ளது. சிலர் இந்த வீடியோவை பார்த்துவிட்டு போலீசாரை பாராட்டியும் வருகின்றனர். இந்த சம்பவம் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்தது என்று அதை போலீஸ் அதிகாரி ஒருவரே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    இந்தநிலையில் இந்த சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு தெற்கு மண்டல ஐ.ஜி. நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் 'போலீஸ் நிலையத்தில் பணியில் இருக்கும் போலீசார் எப்படி இந்த வேலையை செய்யலாம். இதை சமூக வலைத்தளங்களில் பரப்பிய காரணம் என்ன?. இதற்கு போலீஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

    • கார்த்தி (25). மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
    • அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கார்த்திக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பாக மாறியது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த செலவடை கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் கார்த்தி (25). மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    கள்ளத்தொடர்பு

    அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கார்த்திக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பாக மாறியது.

    இதையடுத்து கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண் கார்த்திக்குடன் ஊரைவிட்டு சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக பெண்ணின் உறவினர்கள் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    முற்றுகை

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இருவரையும் பிடித்து இன்று காலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர், ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆத்து பிள்ளையார் கோவிலில் வைத்து பெருமாளும், வர்ஷாவும் திருமணம் செய்து கொண்டனர்.
    • இன்ஸ்பெக்டர் வைரம், 2 வீட்டு பெற்றோரையும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்தார்.

    குனியமுத்தூர்,

    கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் பெருமாள் (வயது 25). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தினமும் மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையத்திற்கு உடற்பயிற்சி செய்ய செல்வது வழக்கம்.

    அப்போது கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, பெருமாளுக்கு உடற்பயிற்சி நிலையத்திற்கு வரும் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த வர்ஷா (19) என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    அடிக்கடி பார்த்து கொண்டதால் 2 பேரும் நட்பாக பேசி வந்தனர். நட்பு காதலாக மாறியது. 2 பேரும் பரஸ்பரம் தங்களது செல்போன் எண்ணை மாற்றி கொண்டு செல்போனிலும், அடிக்கடி நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தங்களது காதலை பெற்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் நாம் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளலாம் என காதல் ஜோடி முடிவு செய்தது.

    அதன்படி நேற்று வர்ஷா தனது தாயிடம் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றார். அவர் நேராக தனது காதலன் பெருமாளை சந்தித்து அவருடன் பேரூருக்கு சென்றார்.

    அங்குள்ள ஆத்து பிள்ளையார் கோவிலில் வைத்து பெருமாளும், வர்ஷாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவல் அறிந்தால் தங்கள் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் 2 பேரும் நேராக மதுக்கரை போலீஸ் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் வைரம், 2 வீட்டு பெற்றோரையும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்தார். இதை கேட்டதும் பதறி போன 2 வீட்டு பெற்றோரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    அங்கு தங்கள் பிள்ளைகள் மாலையும் கழுத்துமாக நிற்பதை பார்த்ததும் 2 வீட்டு பெற்றோருமே அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் பெண்ணிடம், வாலிபரின் பெற்றோர் அவரிடம் பேசி பார்த்தனர். ஆனால் 2 பேருமே நாங்கள் மேஜர் ஒன்றாகவே வாழ்வோம் என தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் 2 வீட்டு பெற்றோரிடம் எழுதி வாங்கி கொண்டு, பெண்ணையும், வாலிபரையும், வாலிபரின் பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×