search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் முற்றுகை
    X

    வில்லியனூர் போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய காட்சி.

    போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் முற்றுகை

    • வில்லியனூரில் பரபரப்பு
    • விடுதலை சிறுத்தை கட்சியினர் வில்லியனூர் போலீஸ் நிலையம் வந்து போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் புதுவை-விழுப்புரம் பைபாஸ் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 60 அடி உயரத்தில் விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பம் அமைக்கப்பட்டது.

    திருமாவளவனின் 60-வது பிறந்தநாளையொட்டி அமைக் கப்பட்ட கொடி கம்பத்தில் இன்று திருமாவளவன் கொடி ஏற்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பம் அனுமதி இல்லாமல் அமைக் கப்பட்டதாக கூறி தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் வில்லிய னூர் இன்ஸ்பெக்டர் வேலயன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று ஜேசிபி இயந்திரம் கொண்டு விசிக கொடி கம்பம் அடியோடு அகற்றப்பட்டது.

    இதனை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் வில்லியனூர் போலீஸ் நிலையம் வந்து போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் மீண்டும் விடுதலை சிறுத்தை கட்சியினர் வில்லியனூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    தொகுதி நிர்வாகிகள் தமிழ்வளவன், ஆதவன், ரவி, தமிழரசன், அரிமாதமிழன், தனுசு மற்றும் மாநில நிர்வாகிகள் செழியன், இன்பத்தமிழன் பாக்கியலட்சுமி, ஏழுமலை, எழில்மாறன் ஆகியோர் போலீஸ் நிலையத்தை திடீர் முற்றுகையிட்டு போலீசாரை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

    இன்னும் 2 நாட்களில் கொடி கம்பம் அமைக்க அனுமதி அளிக்காவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறிவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×