search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி காவல்நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை- 36 பேர் பணியாற்றிய இடத்தில் 6 பேர் மட்டுமே இருக்கிறார்கள்
    X

    பொன்னேரி காவல்நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை- 36 பேர் பணியாற்றிய இடத்தில் 6 பேர் மட்டுமே இருக்கிறார்கள்

    • போலீசார் பற்றாக்குறையால் குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை பிடிப்பதும், குற்றங்கள் ஏற்படும் முன்பு தடுப்பதும் தற்போது பெரும் சவாலாக மாறி இருக்கிறது.
    • பணியமர்த்தப்பட்ட போலீசார், டி.எஸ்.பி, அலுவலகம், தனிப்படை என மாற்று பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. கும்மிடிப்பூண்டி, காட்டுப்பள்ளி, மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் தனியார் நிறுவனங்கள்அதிகரித்து வரும் நிலையில் பொன்னேரி பகுதிகளில் வெளியூர்களில் இருந்து குடியேறும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக தற்போது வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் அதிகமானோர் வசித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களாக பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. போலீசார் பற்றாக்குறையால் குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை பிடிப்பதும், குற்றங்கள் ஏற்படும் முன்பு தடுப்பதும் தற்போது பெரும் சவாலாக மாறி இருக்கிறது.

    பொன்னேரி காவல் நிலைய எல்லையான, 8 கி.மீ., சுற்றளவு பகுதிக்குள், 15 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய 44 பெரிய கிராமங்கள், 22 சிறு கிராமங்கள் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகள், ஆண்டார் குப்பம் மேட்டுப்பாளையம், ஆசான புதூர், பெரும்பேடு குப்பம். ஏலியம்பேடு, உள்ளிட்ட சுமார் 80 கிராமங்கள் வருகின்றன.

    பொன்னேரி போலீஸ் நிலையத்தில், ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்இன்ஸ்பெக்டர், 33 காவலர்கள் பணியில் இருந்தனர். ஆனால் தற்போது ஒரு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு), ஒரு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் 4 காவலர்கள் என, மொத்தம், 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இங்கு பணியமர்த்தப்பட்ட போலீசார், டி.எஸ்.பி, அலுவலகம், தனிப்படை என மாற்று பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    போலீஸ் பற்றாக்குறையால், பொன்னேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு, குற்றசம்பவங்கள், சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே போலீஸ் பற்றாக்குறையை நீக்கி, இரவு ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×