search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Odisha train accident"

    • கடந்த 2-ந்தேதி நடந்த ஒடிசாவில் ரெயில் விபத்தில் 288 பேர் பலியாகினர்.
    • ரெயில்வே அதிகாரிகள், மாநில அரசின் உதவியுடன் அந்த ரெயில் பெட்டியை ஆய்வு செய்தது.

    புவனேசுவரம் :

    ஒடிசாவில் பாலசோர் அருகே கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயில், மற்றொரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் மோதி நேரிட்ட சங்கிலித்தொடர் விபத்தில் 288 பேர் பலியாகினர். இந்த உடல்கள் கைப்பற்றப்பட்டன. அடையாளம் காணப்பட்ட உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அடையாளம் காண முடியாமல் சிதைந்து போன உடல்கள், மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

    இந்த நிலையில், அங்கு விட்டுச்செல்லப்பட்டுள்ள யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயிலின் பெட்டியில் இருந்து பிண வாடை வீசுவதாகவும், இன்னும் அதனுள் உடல்கள் கிடப்பதாகவும் சம்பவம் நடந்த பாகாநாகா பஜார் ரெயில் நிலையம் அருகே வசிப்பவர்கள் கூறினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றிய புகார் எழுந்து, ரெயில்வே அதிகாரிகள், மாநில அரசின் உதவியுடன் அந்த ரெயில் பெட்டியை ஆய்வு செய்தது.

    அதைத் தொடர்ந்து தென் கிழக்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி கூறும்போது, "அந்த ரெயில் பெட்டியில் மனித உடல்கள் இல்லை. அழுகிய முட்டைகளைத்தான் பார்த்தோம். அந்த ரெயிலில் பார்சல் பெட்டியில் 3 டன் முட்டைகள் எடுத்து வரப்பட்டன. எல்லா முட்டைகளும் அழுகிப்போய் விட்டன.

    அந்த நாற்றம்தான் வந்துள்ளது. அந்த முட்டைகளை 3 டிராக்டர்கள் மூலம் விபத்து நடந்த இடத்தில் இருந்து அகற்றி விட்டோம்" என குறிப்பிட்டார்.

    • ஒடிசாவின் பாலசோரில் 3 ரெயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் பலியானார்கள்.
    • விபத்தில் சிக்கியிருந்த உடல்கள் பகாநகா பஜார் கிராமத்தில் உள்ள பள்ளிக் கூடத்தில் வைக்கப்பட்டன.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ம் தேதி 3 ரெயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    ரெயில் பெட்டிகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்புப் படையினர் அகற்றியதும், அந்த உடல்கள் விசாரணைக்காக பகாநகா பஜார் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பள்ளியின் 3 அறைகளில் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பள்ளி அறை ஒன்றிலேயே பிரேத பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    மூன்று அறைகளில் வைக்கப்பட்டிருந்த உடல்கள் 2 நாட்கள் அங்கேயே இருந்தன. பிறகுதான் அவை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பல உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    தற்போது அந்தப் பள்ளியில் சிறப்பு பரிகார பூஜை கள் நடந்து வருகின்றன. 100-க்கும் மேற்பட்ட உடல்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்த அறை களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. புனித குளங்களில் இருந்து நீர் எடுத்து வந்து தெளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, வரும் 16-ம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளிக்கு அனுப்ப தயக்கம் தெரிவித்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட உடல்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளில் அவர்களது கெட்ட ஆவி சுற்றுமோ என்று பயப்படுகிறார்கள். இது மாணவர்கள் மத்தியிலும் மிகுந்த பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து அந்தப் பள்ளியின் நிர்வாகக் குழு கூடி ஆலோசனை நடத்தியது. பெரும்பாலான பெற்றோர்கள் கூறுகையில், ரெயில் விபத்தில் பலியானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த அறைகள் கொண்ட கட்டிடத்தையே இடித்து விடலாம் என தெரிவித்தனர். பள்ளி நிர்வாகக் குழுவும் அதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானம் பாலசோர் மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர் உயரதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார். அவர்கள் ஒப்புதல் வழங்கினர்.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்கள் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பள்ளிக் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் இன்று தொடங்கின. முதல் கட்டமாக மேற்கூரைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    • ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள்.
    • செந்தில்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ரெயில் விபத்து குறித்து மத உணர்வை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் குமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த வக்கீல் செந்தில்குமார் என்பவர் கருத்து பதிவு செய்திருந்தார்.

    இதுதொடர்பாக தக்கலை போலீசார் செந்தில்குமார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து செந்தில்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒடிசாவின் பாலசோர் எனும் இடத்தில் 3 ரெயில்கள் மோதிக்கொண்டன.
    • இந்த கோர விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர்.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவின் பாலசோர் எனும் இடத்தில் 3 ரெயில்கள் மோதிக்கொண்ட மிக கோரமான விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்னாயக் ரூ.5 லட்சமும், பிரதம மந்திரி ரூ.2 லட்சமும், ரெயில்வே அமைச்சகம் ரூ.10 லட்சமும் நிவாரணம் அறிவித்துள்ளனர். விபத்திற்கான காரணத்தை கண்டறிய சி.பி.ஐ. ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ரெயில் விபத்தில் இறந்தவர்களின் பெயரில் போலியாக வரும் நிவாரண கோரிக்கைகளை கண்டறிந்து அவற்றை கோருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒடிசா தலைமை செயலாளர் பி.கே.ஜெனா இந்திய ரெயில்வே, ஒடிசா போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே, இந்த நிவாரணத்தை பெறுவதற்காக தன் கணவர் என வேறு ஒருவரின் சடலத்தை அடையாளம் காட்டிய பெண், போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.

    ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தின் மனியாபந்தா எனும் இடத்தைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி தத்தா. இவரது கணவர் பிஜய் தத்தா.

    ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் கீதாஞ்சலி தத்தா, தன் கணவரான பிஜய் தத்தா உயிரிழந்ததாக கூறி, இறந்தவர்களின் சடலங்களில் கணவரது உடல் என ஒரு சடலத்தை அடையாளம் காட்டினார். அவர் சமர்ப்பித்த ஆவணங்களை சரிபார்த்தபோது, அவை போலியானவை என தெரிய வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    கடந்த 13 வருடங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்வதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், அந்த பெண்மணியின் கணவர் பிஜய் தத்தா, தன் மனைவியின் மீது போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் பொது பணத்தை அபகரிக்க முயற்சி செய்ததற்காகவும், உயிரோடு உள்ள தன்னை ரெயில் விபத்தில் மரணம் அடைந்ததாக கூறியதற்காகவும் கீதாஞ்சலி மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளார். காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு பயந்து கீதாஞ்சலி தலைமறைவாகியுள்ளார்.

    • விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
    • சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும்.

    ராயபுரம்:

    வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்வுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

    ஒரு இந்தியக் குடிமகனாகவும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்னும் நிலையிலும் பல உயிர்களை இழந்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்று, துயரமுடன் இருக்கும் இந்த வேளையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த பேரிடரால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்திலும் பங்கேற்கின்றேன்.

    இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும் செய்ய தயாராக உள்ளேன். வழக்கம் போல, இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, மாநில அரசும், விபத்து ஏற்பட்ட பகுதி வாழ் கிராமங்களும் ஓடோடி வந்து முதலில் உதவிகரங்கள் நீட்டி உள்ளனர்.

    இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, விரைந்து செயல்படுவது எப்படி என்று மீட்புக்குழு வினருக்கு, ரயில்வே துறையின் வழிகாட்டுதல் முறைப்படி, அவர்களுக்கு தக்க பயிற்சிகள் காலமுறைப்படி வழங்கப்பட்டுள்ளதா, என்பதை தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு வேளை இல்லையெனில், அவர்களுக்கு தக்க பயிற்சிகள் வழங்க ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும். அதிக மக்கள் பயணம் செய்வதால், இந்த மார்க்கத்தில் உள்கட்டமைப்பை உடனடியாக வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் பயனாளிகள், கோரமண்டல் விரைவு ரயிலில் வருவதால், அதிகப்படியான பயனாளிகள் முன்பதிவு செய்வதாலும், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அதிகமான அளவில் பயனாளிகள் பயணிப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த மார்க்கத்தில் மேலும் சில புதிய ரயில்களை விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பலரது உடல்கள் சிதைந்த நிலையில் உள்ளன. இதனால் அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
    • உடல்கள் அழுகி வருவதால் எம்பாமிங் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் ஷாலி மாரில் இருந்து கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவில் சரக்கு மற்றும் ஹவுரா-பெங்களுரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீது மோதி கவிழ்ந்தது. இந்த கோர சம்பவத்தில் 288 பேர் பலியானார்கள்.

    இதில் 205 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. 83 பேர் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளது.

    பலரது உடல்கள் சிதைந்த நிலையில் உள்ளன. இதனால் அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. ரெயிலில் பயணம் செய்து மாயமாகி உள்ளவர்களை உறவினர்கள், பிணவறையில் உள்ள உடல்களை பார்த்து தேடி வருகிறார்கள்.

    இந்நிலையில் பலியானவர்கள் உடல்களை பாதுகாக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள். உடல்கள் அழுகி வருவதால் எம்பாமிங் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் பிரபாஸ் ரஞ்சன் திரிபாதி கூறும்போது, 'சிறந்த முறையில் எம்பாமிங்கை 6 முதல் 12 மணி நேரத்தில் செய்யப்பட வேண்டும். இறந்த பிறகு 12 மணி நேரத்துக்கும் மேலாக எம்பாமிங் செய்தாலும் அதற்கு பலன் இல்லை. மேலும் உடல்கள் சேதமடைந்துள்ளதால் எம்பாமிங் செய்வது மிகவும் கடினம்' என்றார்.

    இதையடுத்து டி.என்.ஏ. பரிசோதனை கடந்த 5-ந்தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பலியானவர்களின் உடல்களில் எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரிகளுடன் பொருத்தி பார்க்கும் பணி நடந்து வருகிறது.

    பலியானவர்களின் உடல்கள் குளிர்சாதன கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் உடல்கள் மோசமாக சிதைந்துள்ள நிலையில் அடையாளம் காண முடியாததால் உரியவர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • உயிரிழந்தோர் உடல்களை அடையாளும் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • அடையாளம் காணப்பட்ட உடல்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

    நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் 288 பேரை பலி கொண்டது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகளில் ஏராளமான சிக்கல்கள் எழுந்தது. அந்த வகையில், உயிரிழந்தோர் உடல்களை அடையாளும் காணும் பணியின் போது ஏற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

    ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள பள்ளி ஒன்றில் தான், உயிரிழந்தோர் உடல்கள் வைக்கப்பட்டு இருந்தன. கடந்த வெள்ளி கிழமை இரவு நடந்த கோர விபத்தில், மறுநாளான சனிக்கிழமை மாலை வரை மீட்பு பணிகள் நடைபெற்றன. பின் ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகள் துவங்கின. இதனிடையே உயிரிழந்தோர் உடல்களை அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வந்தன.

    அடையாளம் காணப்பட்ட உடல்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்றும் சடலங்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. பாலசோரில் உள்ள பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த உடல்களை மீட்பு படையினர் ஆய்வுக்காக எடுக்க சென்றனர். உடல்கள் வைக்கப்பட்ட அறையில், வேறு யாரும் இல்லை. இந்த நிலையில், உடலை எடுக்க வந்த மீட்பு படையினர் காலை திடீரென யாரோ பிடித்துள்ளனர்.

    சடலங்கள் வைக்கப்பட்ட அறையில், விபத்தில் உயிர்பிழைத்த நபர் அடைக்கப்பட்டிருந்துள்ளார். உயிர்பிழைத்த நபர் 35 வயதான ராபின் என்று விசாரணையில் தெரியவந்தது. சடலங்கள் மட்டுமே வைக்கப்பட்ட அறையில் மீட்பு படையினர் காலை உயிர்பிழைந்தவர் பிடித்ததால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு மெல்ல விழித்து எழுந்த ராபின், நான் உயிருடன் இருக்கிறேன், சாகவில்லை. தயவு செய்து எனக்கு தண்ணீர் கொடுங்கள் என கேட்டுள்ளார்.

    இந்த சம்பவத்தால் அதிர்ந்த மீட்பு படையினர், மெல்ல உயிர்பிழைத்த நபர் அங்கிருந்து நகர முடியாமல் இருப்பதை பார்த்து அவருக்கு உதவினார். பிறகு மீட்பு படையினர் உயிர்பிழைத்த ராபினை வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவர் மேற்கு வங்க மாநிலத்தின் சர்னேகாளி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். விபத்தில் கால்களை இழந்த ராபின் உயிர்பிழைத்துள்ளார். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    • மக்கள் ரெயிலில் பயணம் செய்வதை பாதுகாப்பற்று உணர்வதால் முடிவு.
    • டிக்கெட்டுகள் ரத்து செய்வது அதிகரிக்கவில்லை. மாறாக, டிக்கெட் ரத்து குறைந்துள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். 1,175 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், சுமார் 900 பேர் சிகிச்சை முடிந்து அனுப்பப்பட்டு விட்டனர். மீதமுள்ளவர்களுக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து மக்கள் மத்தியில் நீங்காத அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் டிக்கெட்டுகளை ரத்து செய்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும், மக்கள் ரெயிலில் பயணம் செய்வதை பாதுகாப்பற்று உணர்வதால் அவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியது.

    இதற்கு ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "ஒடிசா ரெயில் விபத்துக்குப் பிறகு ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக காங்கிரஸ் கூறுவது முற்றிலும் தவறானது.

    டிக்கெட்டுகள் ரத்து செய்வது அதிகரிக்கவில்லை. மாறாக, 01.06.23 அன்று 7.7 லட்சமாக இருந்த டிக்கெட் ரத்து 03.06.23 அன்று 7.5 லட்சமாக குறைந்துள்ளது" என கூறியுள்ளது.

    • ஒடிசா ரெயில் விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன்.
    • மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட வெங்கடேசனை பாராட்டுகிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஒடிசா ரெயில் விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன்.

    உரிய நேரத்தில் அவர் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டுகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குறிப்பிட்ட ஒரு பெட்டியில் மட்டும் 40 உடல்கள் மீட்கப்பட்டன.
    • மின்சாரம் தாக்கியதால் தான் 40 பேர் உயிரிழந்து இருப்பதாக கருதப்படுகிறது.

    ஒடிசா:

    ஒடிசாவில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தை சந்தித்தபோது 278 பயணிகள் உயிரிழக்க நேரிட்டது. பெரும்பாலானவர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. பலருக்கு உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு பெட்டியில் மட்டும் 40 உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களது உடலில் எந்த காயமும் இல்லை. சிறு ரத்த துளிகூட வெளியேறவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் 40 பேரும் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.

    கோர மண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் தரம் புரண்டபோது எதிர்திசையில் வந்த பெங்களூரு-அவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது. அப்போது ரெயில்வே மின்கம்பங்கள் சாய்ந்தன. அதில் இருந்த மின்சாரம் தாக்கியதால் தான் 40 பேர் உயிரிழந்து இருப்பதாக கருதப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மம்தா பானர்ஜி விபத்தில் சிக்கி படுகாயமடைந்தர்வர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
    • மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடக்கம்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது.

    மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானார்ஜி செல்கிறார். ஹெலிகாப்டரில் புறப்பட்ட மம்தா சம்பட இடத்தில் நிலைமையை பார்வையிட உள்ளார்.பின்னர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தர்வர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

    • கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டபோது அந்த பகுதி முழுவதும் பலத்த சத்தம் கேட்டது.
    • விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர்.

    கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டபோது அந்த பகுதி முழுவதும் பலத்த சத்தம் கேட்டது. அதோடு பயணிகள் எழுப்பிய கூக்குரலம் அந்த பகுதி முழுவதும் எதிரொலித்தது.

    இதனை கேட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் விபத்து நடந்த பகுதிக்கு ஓடிவந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாலசோர் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தங்க இடம் கொடுத்ததோடு, அவர்களுக்கு உணவும் வழங்கினர். குழந்தைகளுடன் வந்த பயணிகள் பாலசோர் பகுதி மக்களின் அன்பில் நெகிழ்ந்தனர்.

    ×