search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Kalanidhi Veerasamy"

  • விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
  • சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும்.

  ராயபுரம்:

  வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்வுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

  ஒரு இந்தியக் குடிமகனாகவும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்னும் நிலையிலும் பல உயிர்களை இழந்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்று, துயரமுடன் இருக்கும் இந்த வேளையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த பேரிடரால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்திலும் பங்கேற்கின்றேன்.

  இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும் செய்ய தயாராக உள்ளேன். வழக்கம் போல, இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, மாநில அரசும், விபத்து ஏற்பட்ட பகுதி வாழ் கிராமங்களும் ஓடோடி வந்து முதலில் உதவிகரங்கள் நீட்டி உள்ளனர்.

  இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.

  இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, விரைந்து செயல்படுவது எப்படி என்று மீட்புக்குழு வினருக்கு, ரயில்வே துறையின் வழிகாட்டுதல் முறைப்படி, அவர்களுக்கு தக்க பயிற்சிகள் காலமுறைப்படி வழங்கப்பட்டுள்ளதா, என்பதை தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு வேளை இல்லையெனில், அவர்களுக்கு தக்க பயிற்சிகள் வழங்க ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

  சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும். அதிக மக்கள் பயணம் செய்வதால், இந்த மார்க்கத்தில் உள்கட்டமைப்பை உடனடியாக வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் பயனாளிகள், கோரமண்டல் விரைவு ரயிலில் வருவதால், அதிகப்படியான பயனாளிகள் முன்பதிவு செய்வதாலும், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அதிகமான அளவில் பயனாளிகள் பயணிப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த மார்க்கத்தில் மேலும் சில புதிய ரயில்களை விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

  கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என்று வடசென்னை திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #KalanidhiVeerasamy
  சென்னை:

  வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஆர்.கே.நகர் தொகுதியில் வீடு வீடாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். இப்போது வீடு வீடாக வந்து உங்களிடம் ஆதரவு கேட்பது போல தேர்தலில் வென்றதும் உங்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை, கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். எனவே என்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் என கூறினார்.

  பிரசாரத்தின் போது அவருடன் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019 #KalanidhiVeerasamy
  வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வீதிதோறும் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். #DMK #LokSabhaElections2019

  சென்னை:

  வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வீதிதோறும் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை ஏராளமான பெண்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்து உங்களுக்கே எங்களின் ஆதரவு என்று மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

  கொளத்தூரில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று வீதி வீதியாக வேட்பாளர் கலாநிதி பிரசாரம் செய்தார். வாக்காளர்களிடம் பிரசாரம் செய்கையில் இந்த தொகுதி கழக தலைவர் ஸ்டாலினின் தொகுதி. இந்த தொகுதியில் தளபதி, மக்களின் தேவைகளை தேடி வந்து செய்து வருகிறார். தமிழகத்தில் தளபதி தலைமையில் ஆட்சி மலர வேண்டும். மத்தியில் நிலையான நல்லதொரு ஆட்சி அமைய வேண்டும். எனவே அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

  இவ்வாறு அவர் பேசினார். #DMK #LokSabhaElections2019

  வடசென்னை திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019 #DMK

  சென்னை:

  வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

  திரு.வி.க. பஸ் நிலையத்தில் திறந்த வேனில் பிரசாரம் செய்த பிறகு மு.க.ஸ்டாலின் வாகனத்தில் இருந்து இறங்கி வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

  நடைபெற இருக்கும் தேர்தல் இந்தியாவின்தலையெழுத்தை மாற்ற போகிற தேர்தல். எனவே உங்கள் வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்துங்கள். மோடி இந்தியாவில் இருப்பதே இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் தான் இந்தியாவை சுற்றி சுற்றி வருகிறார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களை பற்றி சிந்திப்பதில்லை. எனவே மத்தியில் நிலையான நல்லதொரு ஆட்சி அமைய தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து இந்த தொகுதியில் போட்டியிடும் படித்தவரும் மருத்துவருமான டாக்டர் கலாநிதி வீராசாமியை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

  இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #DMK

  ×