search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரமண்டல் விரைவு ரெயில் விபத்து"

    • ஒடிசா ரெயில் விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன்.
    • மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட வெங்கடேசனை பாராட்டுகிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஒடிசா ரெயில் விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன்.

    உரிய நேரத்தில் அவர் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டுகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குறிப்பிட்ட ஒரு பெட்டியில் மட்டும் 40 உடல்கள் மீட்கப்பட்டன.
    • மின்சாரம் தாக்கியதால் தான் 40 பேர் உயிரிழந்து இருப்பதாக கருதப்படுகிறது.

    ஒடிசா:

    ஒடிசாவில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தை சந்தித்தபோது 278 பயணிகள் உயிரிழக்க நேரிட்டது. பெரும்பாலானவர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. பலருக்கு உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு பெட்டியில் மட்டும் 40 உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களது உடலில் எந்த காயமும் இல்லை. சிறு ரத்த துளிகூட வெளியேறவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் 40 பேரும் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.

    கோர மண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் தரம் புரண்டபோது எதிர்திசையில் வந்த பெங்களூரு-அவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது. அப்போது ரெயில்வே மின்கம்பங்கள் சாய்ந்தன. அதில் இருந்த மின்சாரம் தாக்கியதால் தான் 40 பேர் உயிரிழந்து இருப்பதாக கருதப்படுகிறது.

    • 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • ரெயில்வே உயர்மட்ட குழு ஏற்கனவே தொழில் நுட்ப கோளாறு தொடர்பாக ஆய்வு நடத்தி சேகரித்த தகவல்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது.

    பாலசோர்:

    ஒடிசா மாநிலத்தில் 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    1,175 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் சுமார் 900 பேர் சிகிச்சை முடிந்து அனுப்பப்பட்டு விட்டனர். மீதமுள்ளவர்களுக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சென்னை-மேற்கு வங்காளம் இடையே இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில்தான் அதிகபட்ச சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டு உள்ளது. மக்கள் மத்தியில் நீங்காத அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விபத்து எப்படி நேர்ந்தது என்பது தொடர்பாக முதலில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியானது.

    ரெயில்வே உயர்மட்ட குழு நடத்திய முதல் கட்ட விசாரணையில், "பகா நகர் பஜார் ரெயில் நிலையத்துக்கு முன்பு பிரதான ரெயில் பாதையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் தொடர்ந்து செல்ல பச்சை நிற சிக்னல் வழங்கப்பட்டது. திடீரென அது மாற்றப்பட்டதால் பக்கவாட்டில் உள்ள மற்றொரு தண்டவாளத்துக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியது என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ரெயில்கள் மோதலுக்கு மனித தவறு காரணமா? அல்லது சிக்னல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா? என்ற கேள்விக்குறி எழுந்தது. இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், "விபத்தின் பின்னணியில் சதி வேலை இருக்கக்கூடும்" என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

    இதில் உண்மையை கண்டு பிடிப்பதற்காக சி.பி.ஐ. விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்து இருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் இதுவரை நடந்துள்ள பெரிய ரெயில் விபத்துக்கள் அனைத்தையும் ரெயில்வே உயர்மட்ட குழுதான் விசாரித்துள்ளது. தற்போதுதான் முதல் முறையாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

    ரெயில்வே உயர்மட்ட குழு ஏற்கனவே தொழில் நுட்ப கோளாறு தொடர்பாக ஆய்வு நடத்தி சேகரித்த தகவல்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை இன்று தொடங்கினார்கள்.

    3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான கோர சம்பவத்துக்கான விடையை தேடி இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு உள்ளனர்.

    • ரெயில் சேவையில் சில மாற்றங்களை செய்து தென்னக ரெயில்வே அறிவிக்கிறது.
    • இன்று காலை 10 மணிக்கு புர்லியாவில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் செல்லும் வாரம் இருமுறை அதிவேக விரைவு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஷாலிமார்-சென்னை கோரமண்டல் விரைவு ரெயில், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக விரைவு ரெயில் ஆகியவை கடந்த 2-ந் தேதியன்று ஒடிசா பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே விபத்தில் சிக்கின. எனவே ரெயில் சேவையில் சில மாற்றங்களை செய்து தென்னக ரெயில்வே அறிவிக்கிறது.

    அதன்படி, சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து 5-ந் தேதி (இன்று) இரவு 7.20 மணிக்கு புறப்படும் ஹவுரா அதிவிரைவு மெயில் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு புர்லியாவில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் செல்லும் வாரம் இருமுறை அதிவேக விரைவு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    அந்தவகையில் 123 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், 56 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்றும் ரெயில்வே துறை அறிவித்து உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 21 வருடங்களில் நான்கு முறை விபத்தை சந்தித்துள்ளது
    • இந்த முறை இரண்டு ரெயில்களுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹனாகா பகுதியில் நடைபெற்ற மிகப்பெரிய விபத்தில் 3 ரெயில்கள் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த ரெயில் விபத்துக்கு முக்கிய காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது கோரமண்டல் ரெயில் மோதி பெட்டிகள் தடம் புரண்டதுதான் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கோரமண்டல் ரெயில் விபத்துக்குள்ளாவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் மூன்று முறை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுவரை 21 தற்போது நடைபெற்றது 4-வது முறையாகும்.

    2002-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி நெல்லூர் மாவட்டம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 8 பெட்டிகள் தடம் புரண்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. சுமார் 100 பேர் காயம் அடைந்தனர். நெல்லூர் அருகே மோசமான மெயின் லைன் காரணமாக விபத்து நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

    2009-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி ஒடிசா மாநிலம் ஜாஜ்புர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தண்டவாளம் மாறும்போது விபத்துக்குள்ளானது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 16 பயணிகள் உயிரிழந்தனர். சுமார் 200 பேர் காயம் அடைந்தனர். அதிவேகமாக சென்ற நிலையில் தண்டவாளம் மாறியதால் ரெயில் இன்ஜின் தலைகீழாக கவிழ்ந்தது.

    2011-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி நெல்லூர் மாவட்டம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் 32 பயணிகள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

    தற்போது 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ந்தேதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பயணிகள் ரெயில் விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 280-ஐ கடந்துள்ளது.

    இதில் உள்ள விசித்திரமான விசயம் என்னவெனில் இந்த விபத்துக்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமையிலேயே நடந்துள்ளது. ஒருவேளை கோரமண்டல் ரெயிலுக்கும் வெள்ளிக்கிழமையும் ஆகாமல் இருக்குமோ?.

    எதுவாக இருந்தாலும் தொழில்நுட்பமும், மனிதத் தவறும் நடைபெறாமல் இருந்தால விபத்துக்களை தடுக்கலாம்.

    • காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 6 மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • மீட்கப்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஒடிசாவில் இருந்து 131 பயணிகள் சிறப்பு ரெயிலில் இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தனர். அவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

    இந்நிலையில், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஒடிசாவுக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 6 மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் வந்தவர்களில் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 8 பேர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    மீட்கப்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

    யாருக்கும் தீவிர சிகிச்சைக்கான பெரிய பாதிப்புகள் இல்லை.

    305 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். 205 படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதுவரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை என தெரிவித்தார்.

    • ஒடிசாவில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் 131 பயணிகள் இன்று அதிகாலை சென்னை வந்தனர்.
    • அவர்களை மா.சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

    சென்னை:

    கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்தில் சிக்கியது. இந்த கோர 288 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே, தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை சென்டிரல், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் ரெயிலில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஒடிசாவில் இருந்து 131 பயணிகள் சிறப்பு ரெயிலில் இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

    சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் ரயில்வே துறை மூலம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    பயணிகளை அவர்களது வீடுகளுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்கள், டாக்சிகள் மற்றும் பேருந்துகள் அணிவகுத்து நின்றன.

    • இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
    • விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒடிசாவில் விபத்து நடைபெற்ற இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    விபத்து நடந்த இடத்தில், தடம் புரண்ட ரயில்களின் இடிபாடுகள் மற்றும் சிதைந்த பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து நகர்த்தப்படுவதால், மறுசீரமைப்பு பணிகள் இரவு வரை தொடர்ந்து வருகின்றன.

    இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், ஒடிசாவின் பாலசோரில் ரெயில் விபத்து நடந்த இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனித சக்தியுடன் அயராது உழைத்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது ஏழுக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், 2 விபத்து நிவாரண ரெயில்கள், 3-4 ரெயில்வே மற்றும் சாலை கிரேன்கள் முன்கூட்டியே சீரமைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்புப் பணிகளை ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.

    • ஒடிசா ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது.
    • ரெயில் விபத்து காரணமாக இதுவரை 90 ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது

    புதுடெல்லி

    ஒடிசாவில் நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே, ஒடிசா ரெயில் விபத்து காரணமாக இதுவரை 90 ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது என ரெயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 46 ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதுடன்,11 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் போராடிய மீட்புக்குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், துன்பத்திலும் மக்களின் தைரியம் ஊக்கமளிக்கிறது. துன்பங்களை எதிர்கொண்டாலும் நமது தேசத்தின் மக்கள் காட்டிய தைரியமும் கருணையும் ஊக்கமளிக்கிறது. விபத்து நடந்தவுடன் ஏராளமான மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ரத்த தானம் செய்ய வரிசையில் நின்றனர்.

    மீட்புப் பணிகளை வலுப்படுத்திய பேரிடர் மீட்புக்குழு, காவல்துறை, தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். இரங்கல் தெரிவித்த உலகத் தலைவர்களின் வார்த்தைகள் துயரில் இருக்கும் குடும்பங்களுக்கு வலிமை தரும். உலகத் தலைவர்கள் அளித்த ஆதரவிற்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

    • ரெயில் விபத்து காரணமாக இதுவரை 90 ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • மேலும், ஒடிசா ரெயில் விபத்தால் 6 ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.

    புதுடெல்லி

    ஒடிசாவில் நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து காரணமாக அந்த வழியாகச் செல்லும் பல ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரெயில் விபத்து காரணமாக இதுவரை 90 ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என ரெயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 46 ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதுடன்,11 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேலும், ஒடிசா ரெயில் விபத்து காரணமாக 6 ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.

    மங்களூருவில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு சந்திரகாஞ்சி செல்லும் விவேக் விரைவு ரெயில், சென்னையில் இருந்து நாளை காலை 7 மணிக்கு ஷாலிமர் புறப்படும் கோரமண்டல் விரைவு ரெயில், சென்னையில் இருந்து நாளை காலை 8.10 மணிக்கு சந்திரகாச்சி புறப்படும் ஏ.சி. விரைவு ரெயில் உள்ளிட்ட 6 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    • ஒடிசா சென்ற பிரதமர் மோடி காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
    • மிகப்பெரிய ரெயில் விபத்தாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது

    ஒடிசா ரெயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப்பணி, சிகிச்சை பெறுதல் போன்ற வேலைகளில் அரசு இயந்திரம் துரிதமாக இயங்கி வருவதால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் எழுப்பவில்லை. ஆனால் விபத்து குறித்து பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

    இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய ரெயில்வே மந்திரி ஆகியோரிடம் கேட்க ஏராளமான கேள்விகள் உள்ளன என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் சீரமைப்பு பணியில் ஈடுபடுமாறு வலியுறத்தியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''ஒடிசா ரெயில் விபத்து மூலம் நாடு முழுவதும் பெரும் சோகம் ஏற்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் முடிந்த அளவிற்கு உதவி செய்ய வலியுறுத்தியுள்ளேன்.

    பல மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் ஒடிசா சென்றிருப்பார்கள் அல்லது விரைவில் சென்றடைவார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எங்களிடம் பிரதமர் மோடி மற்றும் ரெயில்வே மந்திரி ஆகியோரிடம் கேட்க ஏராளமான கேள்விகள் உள்ளன. ஆனால், மீட்பு மற்றும் நிவாரணம் தற்போது முக்கியம் என்பதால் கேள்விகள் காத்திருக்கின்றன.

    இந்த விபத்து எப்படி நடந்தது? யார் பொறுப்பு ஏற்பது என்பதை கண்டறிய வேண்டும் என்று பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன். நாம் அனைவரும் ஏற்கனவே பாதுகாப்பு பற்றி பேசுகிறோம். ஆனால், ரெயில்வே வரலாற்றில் இதுவரை நடைபெறாத நிகழ்வு தற்போது நடைபெற்றுள்ளது. ஆனால் இதுகுறித்து பின்னர் விவாதிக்கலாம். ஆனால், மத்திய அரசுடன் ஒன்றிணைந்து மக்களுக்க உதவி செய்யக் கூடிய நேரம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • இந்த நிகழ்வு அரசுக்கு மிக அபாயமானது
    • அனைத்து வகையான விசாரணைக்கும் உத்தரவு

    ஒடிசாவில் நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, நிவாரணம் அறிவித்தார். ஒடிசா அரசுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என அறிவித்தார்.

    இன்று காலை உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதன்பின் டெல்லியில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு விமானம் மூலம் விரைந்தார். அங்கிருந்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றடைந்தார். அங்கு விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

    அதன்பின் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    ரெயில் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள். இது ஒரு வலியை ஏற்படுத்தக் கூடிய சம்பவம். உயிரிழந்தவர்களை அரசு மீண்டும் கொண்டு வர முடியாது. ஆனால், அவர்கள் குடும்பத்தினரின் துக்கத்துடன் இருக்கும். இந்த விபத்து அரசுக்கு மிகவும் சீரியஸ் ஆனது. காயம் அடைந்து சிகிச்சை மேற்கொண்டு வரும் நபர்களை அரசு கை விட்டுவிடாது. ஒவ்வொரு வகையிலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டால் யாராக இருந்தாலும் தப்பிடவிட முடியாது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    ×