என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் மருத்துவமனைகள்
- ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 70 ஐசியு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
- அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் 50 பேர் கொண்ட மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டன. விபத்தில் 261 பேர் பலியாகியுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். சுமார் 16 மணி நேரம் நடைபெற்ற மீட்பு பணிகள் இன்று காலை 11 மணியளவில் நிறைவடைந்தன.
விபத்தில் சிக்கிய 2 ரெயில்களிலும் 132 தமிழக பயணிகள் பயணம் செய்தனர். இதில் 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிக்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 70 ஐசியு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் 50 பேர் கொண்ட மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.






