search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோரமண்டல் ரெயில் விபத்து: ஒடிசா முதல்வருடன் தமிழக முதல்வர் பேச்சு - தமிழ்நாடு அரசு உதவி எண்கள் அறிவிப்பு
    X

    கோரமண்டல் ரெயில் விபத்து: ஒடிசா முதல்வருடன் தமிழக முதல்வர் பேச்சு - தமிழ்நாடு அரசு உதவி எண்கள் அறிவிப்பு

    • தடம் புரண்ட ரெயில் மீது கோரமண்டல் ரெயில் மோதியதாக தகவல்
    • 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி

    கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரெயில் இன்று இரவு சுமார் 6.51 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பெங்களூருவில் இருந்து கொல்கத்தா சென்ற ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதன்மீது மோதி தடம் புரண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் பல பெட்டிகள் தடம் புரண்டதாக தெரிகிறது. காயம் அடைந்த 170-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா- சென்னை ரெயில் என்பதால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து ஒடிசா முதல்வரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விபத்து குறித்து கேட்டறிந்துள்ளார்.

    அப்போது தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு செய்யும் என ஒடிசா முதல்வரிடம் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அத்துடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழுவை ஒடிசா விரைய வலியுறுத்தியுள்ளார். இந்தக் குழு நாளை காலை விமானம் மூலம் ஒடிசா சென்றடைகிறது.

    இந்நிலையில், கோரமண்டல் ரெயில் விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.

    ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு சார்பில் 044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×