search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nilgiirs"

    • இந்த விபத்தை தொடர்ந்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.
    • சாலையோரங்களில் இருபுறமும் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.

    ஊட்டி,

    தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த 60 பேர் கடந்த 30-ந் தேதி தனியார் பஸ் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் மாலையில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் என்ற இடத்தில் 9-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் தடுப்புச்சுவரில் மோதி 50 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்தை தொடர்ந்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளனர். விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் விபத்து நடந்த பகுதியில் தற்காலிகமாக நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

    இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யவேண்டும். விபத்து நிகழாத வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். சாலையோரங்களில் இருபுறமும் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வெடி மருந்து தொழிற்சாலை வளாகத்திற்குள்ளும் வனவிலங்குகள் இரவும் பகலும் தொடர்ந்து நடமாடி வருகின்றன
    • சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடப்பட்டும் எவ்வித பலனும் இல்லை.

     அருவங்காடு,

    குன்னூர் அருகே உள்ள அருவங்காடு பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 1100 குடியிருப்புகளும் உள்ளன.

    இதுமட்டுல்லாமல் இந்த தொழிற்சாலையின் கட்டுப்பாட்டின் கீழ் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை இயங்கி வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக வெடி மருந்து தொழிற்சாலை வளாகத்திற்குள்ளும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் காட்டெருமைகள், கரடி, சிறுத்தை ஆகிய வனவிலங்குகள் இரவும் பகலும் தொடர்ந்து நடமாடி வருகின்றன

    இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு மனு மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் கோரிக்கை விடப்பட்டும் எவ்வித பலனும் இல்லை.

    எனவே தாங்கள் இம்மனுவை பரிசீலனை செய்து 2 ஆயிரம் தொழிலாளிகள் மற்றும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அருவங்காடு வெடிமருந்து தொழில் ஒருங்கிணைந்த ஊழியர் நலச்சங்க பொதுச் செயலாளர் அசோகன் தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளார். 

    • அருகம்புல் சாற்றி மலர் அலங்காரம் செய்து அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள் திரளாக வந்து வழிபாடு

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள சக்திமலை முருகன் கோவிலில் பிரதோஷ நாளான நேற்று லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு, பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து பூஜை மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. மேலும் சிவபெருமானின் வாகனமான நந்திதேவருக்கும் எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் அருகம்புல் சாற்றி மலர் அலங்காரம் செய்து அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோத்தகிரி கடை வீதி மாரியம்மன் கோவிலில் உள்ள லிங்கேஸ்வரருக்கும் பிரதோஷ சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    • நகரமன்ற துணைத்தலைவருமான பா.மு.வாசிம்ராஜா கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    குன்னூர் மவுண்ட்பிளசண்ட் 2-வது வார்டு பகுதியில் நீலகிரி எம்.பி ராசாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில், ரேஷன் கடை அமைப்பதற்காக பூமிபூஜை நடந்தது.

    நகர செயலாளரும், 2-வது வார்டு நகரமன்ற உறுப்பினருமான ராமசாமி தலைமை தாங்கினார்.மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளரும், நகரமன்ற துணைத்தலைவருமான பா.மு.வாசிம்ராஜா கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில்நகர துணை செயலாளர் முருகேசன், பொருளாளர் ஜெகநாத்ராவ், மாவட்டபிரதிநிதி மணிகண்டன், குன்னூர் எம்.எல்.ஏ தொகுதி ஒருங்கிணைப்பாளரும், கிளை கழக செயலாளருமான அல்போன்ஸ்மணி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சையத்மன்சூர், ராமன், கோவர்த்தனன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தேயிலை தோட்டத்தை ஒட்டி காட்டு யானை உலா வந்ததால், தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.
    • கும்கி யானை உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி பந்தலூர் அருகே காட்டு யானை வாகனங்களை வழிமறித்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வழிமறிப்பு காட்டு யானை பந்தலூர் அருகே சேரம்பாடி, சேரங்கோடு, படச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கட்டை கொம்பன் என்று அழைக்கப்படும் காட்டு யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. ரேஷன் கடைகள், வீடுகளை உடைத்து அட்டகாசம் செய்கிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் படச்சேரி பகுதிக்குள் யானை புகுந்தது. பின்னர் குடியிருப்பில் முகாமிட்டது.

    இதையடுத்து அந்த பகுதியில் இருந்த மின் கம்பம் மீது மரத்தை சாய்த்து போட்டது. இதில் மின்கம்பம் உடைந்து சேதமடைந்தது.

    மேலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு சேரங்கோடு அருகே பந்தலூர்-சேரம்பாடி சாலையில் உள்ள காப்பி காடு பகுதியில் காட்டு யானை சாலையில் முகாமிட்டு, வாகனங்களை வழிமறித்தது.

    னத்துறையினரை துரத்தியது தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் உத்தரவின்படி, வனவர் ஆனந்த், வனகாப்பாளர் ஞானமூர்த்தி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து யானையை விரட்ட முயன்றனர். அப்போது ஆக்ரோஷம் அடைந்த யானை வனத்துறையினரை சிறிது தூரம் துரத்தி தாக்க முயன்றது.

    இதனால் வனத்துறையினர் ஓட்டம் பிடித்தனர். பின்னர் அவர்கள் கூச்சலிட்டு யானையை விரட்டினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேயிலை தோட்டத்தை ஒட்டி காட்டு யானை உலா வந்ததால், தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானை அட்டகாசம் செய்து வருவதால், கும்கி யானை உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அக்கம்பக்கத்தினர் மீட்டு சுல்த்தான்பத்தேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
    • அம்பலமூலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி,

    நீலகிரி பந்தலூர் பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 56). இவர் கூடலூர் அருகே தேவர்சோலை மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் விஜயகுமார் பிதிர்காடு வனத்துறை அலுவலகத்திற்கு முன்பு தேவாலயத்தை ஒட்டியுள்ள மின்மாற்றியின் மீது ஏறி மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு விஜயகுமார் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சுல்த்தான்பத்தேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து மின்வாரியத்துறை அதிகாரிகள், அம்பலமூலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அங்கக முறையில் காபி சாகுபடி மற்றும் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்த செயல்முறை விளக்கம்
    • கடினமாலா, அரக்கோடு பகுதியை சேர்ந்த 50 விவசாயிகள் கலந்துகொண்டனர்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டார தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆகியவை சார்பில் ஆத்மா திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு மாநிலஅளவிலான சிறுதானிய பயிர்களின் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி நடைபெற்றது. இதில் கடினமாலா, அரக்கோடு பகுதியை சேர்ந்த 50 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்களுக்கு சிறுதானிய பயிர்களான தினை, சாமை, கேழ்வரகு அங்ககமுறை சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் தினை, சாமை மதிப்பு கூட்டுதல், அங்கக முறையில் காபி சாகுபடி மற்றும் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்த செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

    • மேளதாளங்களுடன் சீர்வரிசை எடுத்து வந்தனர்
    • கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்

    ஊட்டி,

    ஊட்டி சீனிவாச பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கி ழமை தோறும் சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை கள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒருபகுதியாக புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடத்துவது என கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

    இதன்படி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தம்பதி சமேதராய் அருள்பாலித்த சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்-வழிபாடுகள் நடத்தப்பட்டன. முன்னதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருக்கல் யாண வைபவத்துக்காக மேளதாளத்துடன் சீர்வரிசை தட்டுகள் எடுத்து வந்திருந்தனர்.

    தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க இறைவனுக்கு திருக்கல்யா ணம் நடைபெற்றது. அப்போது கோவிந்தா... கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தர்கள் மனமு ருக வழிபட்டனர். தொடர்ந்து சீனிவாச பெரு மாள் தம்பதி சமேதராக பக்தர்களுக்கு அருள்பா லித்தனர்.

    ஊட்டி பெருமாள் கோவில் திருக்கல்யாணத்தில் சுற்றுவட்டார பகுதிக ளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசா தம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சீனி வாசபெருமாளின் திருவீதி உலா, கோலாகலத்துடன் தொடங்கியது. கோவில் முன்பு தொடங்கிய சுவாமிகள் ஊர்வலம் மார்க்கெட், லோயர்பஜார், பஸ் நிலையம், மெயின்ப ஜார், காபிஹவுஸ் சந்திப்பு வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அப்போது வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான பக்தர் கள் திரண்டு வந்து சுவாமி களை மனமுருக பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    • 50 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது
    • உரங்களின் சேமிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தகவல்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விபரம் பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 50 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

    கூட்டத்தில் கலெக்டர் அருணா பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் வேளாண்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேவை யான மரநாற்றுகள் குறித்து விவசாயிகள் கோரிக்கைக்கு இணங்க கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்ெகாள்ளப்படும்.

    அங்கக வேளாண்மை மூலம் அங்கீகரிக்கப்பட்ட இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    நீலகிரி கூட்டுறவு வணிக சங்கம் மூலம் உரங்களை சிறியளவில் சில்லரை விற்பனை மூலம் சிறு,குறு விவசாயிகளுக்கு 5 முதல் 10 கிலோ வரையிலான உரங்களை வழங்குமாறு கோரிய விவசாயிகளின் கோரிக்ைக குறித்து ஆய்வு செய்யப்படும்.

    மேலும் என்.சி.எம்.எஸ் மூலம் உரங்களிடம் சேமிப்பிடம் அமைப்பதற் கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. உழவர் கடன் அட்டைக்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப் பட்டு வருகிறது.

    விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், தோட்டக்க லைத்துறை இணை இயக்கு நர் ஷிபிலாமேரி, இணை இயக்குநர் (மருத்துவபணி கள்) பழனிசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சாம் சாந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கடை உரிமையாளர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதித்தனர்
    • காலாவதியான இறைச்சி பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்

    அருவங்காடு,

    குன்னூர் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் ஓட்டல்கள், பாஸ்ட்புட் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் தலைமை யிலான அதிகாரிகள் குன்னூரில் உள்ள பஸ் நிலையம், மார்க்கெட் பகுதி, பெட்போர்டு ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல், பாஸ்ட்புட் கடை, ஷவர்மா கடைகளில் ஆய்வு நடத்தினர்.

    இதில் கலப்பட தேயிலை தூள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள், கெட்டுப் போன மீன், கோழி இறைச்சி, தடை செய்யபட்ட பாலிதீன் பைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதித்தனர்.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். இச்சம்பவம் குன்னூர் மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது

    • சிம்ஸ்பூங்காவில் தொடங்கிய ஊர்வலம் லாஸ் நீர்வீழ்ச்சியில் முடிந்தது
    • விநாயகர் சிலை ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் அலகு குத்தி பறவைக்காவடியாக வாகனத்தில் வந்தார்

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் பல்வேறு இடங்களில் இந்துமுன்னணி சார்பில் 108 விநாயகர் சிலைகள் கடந்த 18-ந்ம்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அங்கு பக்தர்கள் வழிபாடு நடத்தி வந்தனர். இந்த நிலையில் விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் குன்னூரில் நேற்று நடைபெற்றது. சிம்ஸ்பூங்காவில் தொடங்கிய ஊர்வலம்பெட்போர்டு, மவுண்ட்ரோடு, பஸ்நிலையம் வழியாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாஸ் நீர்வீழ்ச்சியில் முடிந்தது. அங்கு 108 சிலைகளும் கரைக்கப்பட்டன.

    முன்னதாக விநாயகர் சிலை ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் அலகு குத்தி பறவைக்காவடியாக வாகனத்தில் வந்தது பொது மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குன்னூரில் விநாயகர்விசர்ஜன விழாவையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • கடந்த 18-ந்தேதி முதல் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு
    • ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு

    கோத்தகிரி,

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 18-ந்தேதி முதல் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர்.

    தொடர்ந்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட்டது.

    அப்போது இந்து முன்னணி சார்பில் 81 சிலைகளும், அனுமன்சேனா சார்பில் 32 சிலைகளும் கோத்தகிரியின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் உடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

    கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து துவங்கிய ஊர்வலம் காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பஸ் நிலையம், கடைவீதி, ராம்சந்த் வழியாக உயிலட்டி நீர்வீழ்ச்சியை வந்தடைந்தது. பின்னர் அவை நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன. முன்னதாக விநாயகர் சிலை ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ×