search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்புகள்"

    • யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க ஏற்பாடு
    • தண்டவாளத்தின் கீழ்பகுதியில் யானைகள் எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கவும் முடிவு

    கோவை,

    கோவை மதுக்கரை அருகே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ரெயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க தண்டவாளத்தின் ஓரத்தில் 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு இரும்பு கம்பிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    கோவை புறநகர் பகுதியான மதுக்கரை கேரளா -தமிழகம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் வனப்பகுதி. இந்த வனப்பகுதி வழியாக கேரளா- தமிழகத்தை இணைக்கும் ரெயில் தண்டவாளம் செல்கிறது.

    மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை பகுதியில் ரெயில்வே தண்டவாளங்கள் உயரமாக இருப்பதால் வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள் தண்டவாளங்கள் மீது ஏறி கடந்து செல்கிறது. ரெயில் வரும் நேரங்களில் யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் நடந்து வருகிறது.

    யானைகள் ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் தண்டவாளத்தின் கீழ் பகுதியில் யானைகள் எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க ப்பட்டு உள்ளது. இதன் வழியாக யானைகள் எளிதாக கடந்து செல்கின்றன.

    இந்த திட்டம் வெற்றி பெற்றால் மற்றொரு சுரங்க பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் 12-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மதுக்கரையில் இருந்து எட்டிமடை வரை காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களை நாசம் செய்து வருகின்றது. இதற்கு யானைகள் தண்டவாளத்தை கடந்து வர வேண்டியது உள்ளது. எனவே யானைகள் தண்டவாளத்தை கடந்து வருவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இது குறித்து வன அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுக்கரை அருகே உள்ள குடோன் பகுதியில் இருந்து எட்டிமடை வரை 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்டவாளத்தை ஒட்டி பழைய தண்டவாள இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஆய்வு பணி தற்போது நடந்து வருகிறது.

    ஏற்கனவே மதுக்கரை பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது.

    எனவே புதிதாக மேலும் தடுப்புகள் அமைப்பதற்கு எவ்வளவு செலவாகும் என அறிக்கை அரசுக்கு சமர்ப்பித்து உள்ளோம். தமிழக அரசின் உத்தரவு வந்த உடன் நிதி ஒதுக்கப்பட்டதும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • இந்த விபத்தை தொடர்ந்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.
    • சாலையோரங்களில் இருபுறமும் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.

    ஊட்டி,

    தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த 60 பேர் கடந்த 30-ந் தேதி தனியார் பஸ் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் மாலையில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் என்ற இடத்தில் 9-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் தடுப்புச்சுவரில் மோதி 50 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்தை தொடர்ந்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளனர். விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் விபத்து நடந்த பகுதியில் தற்காலிகமாக நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

    இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யவேண்டும். விபத்து நிகழாத வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். சாலையோரங்களில் இருபுறமும் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சாலையில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    மதுரை

    மதுரை ஆண்டாள்புரம் பழைய மில்காலனி பகுதியை சேர்ந்தவர் ஏசு ராஜா. இவரது மகன் ரோகன் (வயது20). இவர் நேற்று நண்பர் ராதாகிருஷ் ணனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறபட்டார். ஆண்டாள்புரம் பாலத்தில் சென்றபோது தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பஸ்சின் கீழ் பகுதியில் சிக்கிய ரோகன் மீது டயர் ஏறி இறங்கியது.

    இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ராதா கிருஷ்ணனை அங்கிருந்த வர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் கொடூர விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்து நடந்த பகுதியில் அதிவேகத்தில் வாகனங்கள் செல்கின்றன. எனவே தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து இன்று காலை போக்குவரத்து போலீசார் விபத்து நடந்த சாைலயின் நடுவே தடுப்புகள் அமைத்த னர்.

    மேலும் குறிப்பிட்ட பகுதி களில் வாகனங்கள் மெது வாக செல்வதற்கும் நட வடிக்கை எடுத்தனர். விபத்து சிக்கி வாலிபர் இறந்த பிறகு போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது. மதுரை திருப்பரங்குன்றம் சாலை யில் தமிழ்நாடு பாலி டெக்னிக் கல்லூரி, மதுரா கல்லூரி மற்றும் முக்கிய நிறுவனங்கள், கோவில்கள் உள்ளன. இதனால் அந்த சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்கின்றனர். ஆனால் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்படா ததால் பொதுமக்கள் ஒரு வித பதட்டத்துடனே கடக்க வேண்டியுள்ளது.

    குறிப்பாக தமிழ்நாடு பாலிடெக்னிக் முன்புறம் உள்ள சாலை, ஆண்டாள் புரம் பகுதி, பழங்காநத்தம் சந்திப்பு போன்ற பகுதிகளில் அதிவேகமாக வரும் வாக னங்களுக்கு இடையில் பொதுமக்கள் உயிரை பண யம் வைத்து சாலையை கடக்க வேண்டியுள்ளது.

    எனவே மேற்கண்ட பகுதிகளில் விபத்துகள் நடக்காமல் இருக்க போலீ சார் வேகத்தடை மற்றும் தடுப்புகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பசுமலையில் உள்ள ஒரு பள்ளி முன்பும் தடுப்புகள் அமைத்து வாகன வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து உள்ளது.

    • 2 மாதங்களுக்கு முன்பு பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. 2 இடங்களிலும் இரட்டை பாலம் தலா ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டது.
    • இந்த பாலத்தில் இருசக்கர வாகனம் தவிர இதர வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகளை வைத்து அடைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரில் மிகவும் பழமை வாய்ந்த கல்லணைக் கால்வாயில் உள்ள இர்வீன் பாலம் மற்றும் கரந்தையில் உள்ள வடவாறு பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. 2 இடங்களிலும் இரட்டை பாலம் தலா ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டது.

    இதையடுத்து இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் கல்லணை கால்வாயில் கட்டப்பட்ட இரட்டை பாலத்தில் ஒரு பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பாலத்தில் இருசக்கர வாகனம் தவிர இதர வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகளை வைத்து அடைக்கப்பட்டன.

    இந்த நிலையில்மற்றொரு பாலத்தை கட்டும் பணியினை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்டப்பொறியாளர் ரேணுகோபால், உதவி பொறியாளர் சோபனா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ×