search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைகள் பெயர்ந்து காணப்படும் சுனாமி குடியிருப்புகள்
    X

    மேற்காரை பெயர்ந்த நிலையில் காணப்படும் குடியிருப்பு.

    காரைகள் பெயர்ந்து காணப்படும் சுனாமி குடியிருப்புகள்

    • மேல்தல கான்கிரீட்டுகள் சிதைந்து கம்பிகளும் சிமெண்ட் காரைகளுமே எஞ்சியுள்ளது.
    • அத்தியாவசிய பொருட்களை மட்டும் வைத்துவிட்டு வெளிப்புறத்தில் தடுப்புகள் அமைத்து வசித்து வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வானகிரி மீனவர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர் கடலோர பகுதியிலிருந்து மீனவ குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அருகிலேயே சுனாமி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு அரசின் சார்பாக 725 சுனாமி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

    இந்த வீடுகள் கட்டப்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உட்புற மேல்தல கான்கிரீட்டுகள் சிதைந்து கம்பிகளும் சிமெண்ட் காரைகளுமே எஞ்சியுள்ளது.

    மேலும் அவ்வப்பொழுது சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் அச்சமடைந்த மீனவர்கள் வீட்டின் உள்ளே அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வைத்துவிட்டு வெளிப்புறத்திலேயே தடுப்புகள் அமைத்து தனியாக வசித்து வருகின்றனர்.

    தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சிதிலமடைந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டுமென மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×