search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "barricades"

    • யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க ஏற்பாடு
    • தண்டவாளத்தின் கீழ்பகுதியில் யானைகள் எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கவும் முடிவு

    கோவை,

    கோவை மதுக்கரை அருகே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ரெயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க தண்டவாளத்தின் ஓரத்தில் 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு இரும்பு கம்பிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    கோவை புறநகர் பகுதியான மதுக்கரை கேரளா -தமிழகம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் வனப்பகுதி. இந்த வனப்பகுதி வழியாக கேரளா- தமிழகத்தை இணைக்கும் ரெயில் தண்டவாளம் செல்கிறது.

    மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை பகுதியில் ரெயில்வே தண்டவாளங்கள் உயரமாக இருப்பதால் வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள் தண்டவாளங்கள் மீது ஏறி கடந்து செல்கிறது. ரெயில் வரும் நேரங்களில் யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் நடந்து வருகிறது.

    யானைகள் ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் தண்டவாளத்தின் கீழ் பகுதியில் யானைகள் எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க ப்பட்டு உள்ளது. இதன் வழியாக யானைகள் எளிதாக கடந்து செல்கின்றன.

    இந்த திட்டம் வெற்றி பெற்றால் மற்றொரு சுரங்க பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் 12-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மதுக்கரையில் இருந்து எட்டிமடை வரை காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களை நாசம் செய்து வருகின்றது. இதற்கு யானைகள் தண்டவாளத்தை கடந்து வர வேண்டியது உள்ளது. எனவே யானைகள் தண்டவாளத்தை கடந்து வருவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இது குறித்து வன அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுக்கரை அருகே உள்ள குடோன் பகுதியில் இருந்து எட்டிமடை வரை 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்டவாளத்தை ஒட்டி பழைய தண்டவாள இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஆய்வு பணி தற்போது நடந்து வருகிறது.

    ஏற்கனவே மதுக்கரை பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது.

    எனவே புதிதாக மேலும் தடுப்புகள் அமைப்பதற்கு எவ்வளவு செலவாகும் என அறிக்கை அரசுக்கு சமர்ப்பித்து உள்ளோம். தமிழக அரசின் உத்தரவு வந்த உடன் நிதி ஒதுக்கப்பட்டதும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×