குன்னூர் பகுதியில் ரேஷன் கடைக்கு பூமிபூஜை

நகரமன்ற துணைத்தலைவருமான பா.மு.வாசிம்ராஜா கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குன்னூர் பகுதியில் ரேஷன் கடைக்கு பூமிபூஜை
Published on

ஊட்டி,

குன்னூர் மவுண்ட்பிளசண்ட் 2-வது வார்டு பகுதியில் நீலகிரி எம்.பி ராசாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில், ரேஷன் கடை அமைப்பதற்காக பூமிபூஜை நடந்தது.

நகர செயலாளரும், 2-வது வார்டு நகரமன்ற உறுப்பினருமான ராமசாமி தலைமை தாங்கினார்.மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளரும், நகரமன்ற துணைத்தலைவருமான பா.மு.வாசிம்ராஜா கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில்நகர துணை செயலாளர் முருகேசன், பொருளாளர் ஜெகநாத்ராவ், மாவட்டபிரதிநிதி மணிகண்டன், குன்னூர் எம்.எல்.ஏ தொகுதி ஒருங்கிணைப்பாளரும், கிளை கழக செயலாளருமான அல்போன்ஸ்மணி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சையத்மன்சூர், ராமன், கோவர்த்தனன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com