search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "municipality"

    • நவீன சுகாதார வளாகம் திறப்பு விழாவிற்கு சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு விருந்தினராக பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.

    சுரண்டை:

    கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் சுரண்டை பஸ் நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் நவீன சுகாதார வளாகம் திறக்கப்பட்டது. சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் முகம்மது சம்சுதீன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், பால் என்ற சண்முகவேல், தெய்வேந்திரன், நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஒப்பந்ததாரர் சவுந்தர் வரவேற்று பேசினார். பழனி நாடார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.

    விழாவில் முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் முத்துக்குமார்,ஆறுமுகசாமி,திமுக நிர்வாகிகள் பூல்பாண்டியன்,சுப்பிரமணயன், ஸ்டீபன் சத்யராஜ், அல்லா பிச்சை, பீர்முகமது,ஜோசியர் தங்க இசக்கி,தனலட்சுமி மாரியப்பன், காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.ஆர். பால்துரை, பிரபாகர், கஸ்பா செல்வம், ஆட்டோ செல்வராஜ்,ராஜன், சுரண்டை நகர் மன்ற உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன்,அமுதா சந்திரன், ராஜ்குமார்,உஷா பேபி பிரபு,வேல் முத்து, ராஜேஷ், அந்தோணி சுதா ஜேம்ஸ், செல்வி, சிவசண்முக ஞான லெட்சுமி,மற்றும் நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தனர்.
    • வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

    அனுப்பர்பாளையம் :

    திருமுருகன்பூண்டி நகராட்சி அவசரக்கூட்டம் நடந்தது. நகராட்சித் தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேஸ்வரி, கமிஷனர் முகமது சம்சுதீன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தனர். நகராட்சி தலைவர் பதில் அளித்து பேசிய போது, நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொது நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகள், சாக்கடை தெருவிளக்கு உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

    • பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
    • ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் ரூ.7 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளதாகவும்,கடை வாடகை உரிய காலத்திற்குள் செலுத்தாவிட்டால்,18 சதவீத தண்ட வட்டி சேர்த்து வசூலிக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி,ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பல்லடம் நகராட்சி 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள் 1,263 வணிக கட்டடங்கள், 546 தொழிற்கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளன. சொத்து வரி ரூ.2கோடியே99லட்சத்து 59 ஆயிரம், காலியிட வரி ரூ.5லட்சத்து65 ஆயிரம், தொழில் வரி ரூ.15லட்சத்து39 ஆயிரம், குடிநீர் கட்டணம் ரூ.1கோடியே63லட்சத்து12 ஆயிரம், கடை வாடகை ரூ.3கோடியே15லட்சத்து10 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    மேலும் பல்லடம் நகராட்சியில்,பஸ் நிலையம்,அண்ணா வணிகவளாகம் போன்றவற்றில் கடை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள் உரிய காலத்திற்குள் வாடகை செலுத்தாவிட்டால்,18 சதவீத தண்ட வட்டி சேர்த்து வசூலிக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவேபொதுமக்கள் வரி இனங்களை உடனடியாக செலுத்தி 18 சதவீத தண்ட வட்டி,குடிநீர் இணைப்பு துண்டிப்பு,ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக் கொள்ளவேண்டும். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிஎன் அர்பன் இ சேவை என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும் .அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பின்னர் பல்லடம்,கடைவீதியில் உள்ள கடைகளில், நகராட்சி ஆணையாளர் விநாயகம் தலைமையிலான அதிகாரிகள் வசூலில் ஈடுபட்டனர்.

    • தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து நகராட்சி மயானத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நகராட்சிக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் தனம், ஆணையாளர் முஸ்தப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகராட்சியின் 20-வது வார்டு கிழக்கு பாவடி தெரு பகுதியில் குப்பை அறைக்கும் கிடங்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டப்பட்டு அதற்கான பூமி பூஜை போடப்பட்ட போது அதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் விளைவாக நகராட்சி நிர்வாகம் இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு அதாவது மீண்டும் சின்னா–கவுண்டம்பட்டி பகுதியில் அமைப்பதாக உறுதி செய்து தீர்மானிக்கபட்டது.

    அதனை தொடர்ந்து நகராட்சி மயானத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நகராட்சிக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பேசிய 7-வது வார்டு உறுப்பினர் தேன்மொழி, 3-வது வார்டு உறுப்பினர் குமரேசன் ஆகியோர் நகராட்சி பகுதியில் சாக்கடை மற்றும் மழை நீர் அதிக அளவில் தேங்குவதால் கொசு, கிருமிகளால் வைரஸ் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளோம்.

    எனவே இந்த நிலைமை பொதுமக்களுக்கும் வந்து விட கூடாது என்பதால் சுகாதார பணிகளை தீவிர படுத்தவேண்டும் என்றனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் 4 பேரை தவிர மற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், மன்றத்தில் மொத்தம் 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பாம்புக்கடி, நாய்க்கடி உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு உரிய மருந்துகள் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
    • கொமரலிங்கத்தில், 96 குடும்பங்களுக்கு வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டது.

    உடுமலை:

    விவசாய தொழிலாளர்கள் சங்கம் மடத்துக்குளம் தாலுகா மாநாடு கணியூரில் நடந்தது. இதில் கொமரலிங்கத்தில், 96 குடும்பங்களுக்கு வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் நிலத்தை அளந்து கொடுக்காததைக்கண்டித்து, தாலுகா அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது.

    மடத்துக்குளம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவும், கொமரலிங்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, அவசர முதல் உதவி சிகிச்சை, பாம்புக்கடி, நாய்க்கடி உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு உரிய மருந்துகள் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

    கணியூர், சங்கராமநல்லூர், மடத்துக்குளம் ஆகிய பேரூராட்சிகளில் நகர்ப்புற வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தவும், மடத்துக்குளம் ஒன்றியத்திலுள்ள, அனைத்து ஊராட்சிகளிலும் வேலைத்திட்டத்தில் வேலை கேட்பவர்களை அலைக்கழிக்காமல், வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மேலூர் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
    • நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலூர்

    மேலூர் நகராட்சி கூட்டம் தலைவர் முகமது யாசின் தலைமையில் நடந்தது. இதில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலூர் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மலம்பட்டி ஊரணியில் நடைபெற்று வரும் பூங்கா பணிக்கு கூடுதலாக நிதி ஒதுக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    2-வது வார்டு அ.ம.மு.க. உறுப்பினர் ஆனந்த் மேலூர் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்கள் வயர்லையன் பதிப்பதற்காக பள்ளங்களை தோண்டுவதால் குடிநீர் உடைப்பு ஏற்பட்டு ரோட்டில் பல இடங்களில் தண்ணீர் வீணாக செல்கிறது என்று தெரிவித்து, சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் நடமாடும் வண்டியினை வழங்கிடவும் கோரிக்கை விடுத்தார்.

    மதுரை எம்.பி. வெங்கடேசன் முயற்சியால் மேலூர் அரசு கலைக்கல்லூரியில் வருகிற 8-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த வாழ்வாதார முகாமை தங்கள் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை பங்கேற்க வைத்து பயன்பெற செய்யுமாறு நகர் மன்ற தலைவர் முகமது யாசின் கவுன்சிலர்களை கேட்டுக்கொண்டார்.

    இந்த கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன், ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், சுகாதார ஆய்வாளர் சரவணன், நகர அமைப்பு ஆய்வாளர் சரவணகுமார், மேலாளர் தியாகராஜன், இளநிலை அலுவலர் ஜோதி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலரை பொதுமக்கள் பாராட்டினர்
    • மாடித்தோட்டம் குறித்து பயிற்சி

    திருச்சி

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதி இல்லத்தரசிகள், பெண்களின் நன் மதிப்பைபெற்ற பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல் அமீது காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிபவர் ச.சாகுல் அமீது இவர் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன் ஆலோசனைப்படியும் மற்றும் பேரூராட்சித் தலைவர் சங்கீதாசுரேஷ், துணைத் தலைவர் சுதாசிவ செல்வராஜ் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பேரூராட்சி பணியாளர்கள் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் இவர்களின் முழு ஒத்துழைப்புடன் காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதி இல்லத்தரசிகள் பயன் பெறும் வகையில் முதல் முதலில் கால் மிதியடிகள் தயாரிக்கும் பயிற்சி முகாமை பேரூராட்சி வளாகத்தில் இல்லத்தரசிகளுக்கு பயிற்சி வழங்கி அவர்கள் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்ள வழிவகை செய்தார்.

    இதனால் காட்டுப்புத்தூர் பகுதி இல்லத்தர சிகள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். அது மட்டுமல்லாமல் மாடித்தோட்டம், வீட்டு தோட்டம் அமைக்க காட்டுப்புத்தூர் பகுதி இல்லத்தரசிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்ட இல்லத்தரசிகளுக்கு விதைகள், இயற்கை உரம் ஆகியவற்றை இலவசமாக வழங்கி பயிற்சி வழங்கப்பட்டது.

    காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதி இல்லத்தரசிகள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் செயல் அலுவலர் ச.சாகுல்அமீதின் இந்த செயல்பாட்டினால் காட்டுப்புத்தூர் பகுதி இல்லத்தரசிகள் பெண்கள் ஆகியோரின் நன்மதிப்பை செயல் அலுவலர் ச.சாகுல் அமீது பெற்றுள்ளார்.மேலும் பொதுமக்கள் பெண்கள் இல்லத்தரசிகள் அவரை பாராட்டி வருகின்றனர்.

    • காரமடை நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
    • நகராட்சியில் உள்ள பகுதிகளில் அரசு நிலங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்

    காரமடை நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் உஷா வெங்கடேஸ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ஆணையாளர் பால்ராஜ், துணைத்தலைவர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

    ராம்குட்டி (திமுக): நகராட்சியில் உள்ள பகுதிகளில் அரசு நிலங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    இதனை ஆய்வு செய்து தற்போதுள்ள நகராட்சிக்கு சொந்தமான இடங்களை வேலிகள் அமைத்து அந்த இடங்களில் அப்பகுதி மக்களுக்கு விளையாட்டு மைதானம் மற்றும் பூங்கா, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சித்ரா(திமுக): எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் ெரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் சப்வே உள்ளது. அங்கு வாகனம் சென்று வர முடியாத நிலையில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு பல்வேறு சர்ம வியாதிகள் ஏற்பட்டு வருகிறது. இதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவிதா (மதிமுக): எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் தெருவிளக்கு, குடிநீர்குழாய் சீரமைப்பு, உள்ளிட்ட பணிகளை செய்து தரக்கோரி கடந்த 7 மாத காலமாக கூறி வருகிறேன். இதுகுறித்து சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் மெத்தன போக்காக உள்ளன. பெயரளவிற்கு கூட யாரும் வந்து பார்த்தது இல்லை. மேலும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் பணிகள் எடுத்தும் எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. தவறும் பட்சத்தில் எனது வார்டுக்குட்பட்ட பொதுமக்களை திரட்டி நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

    மஞ்சுளா(திமுக): அரங்கநாதர் கோவிலில் வாரந்தோறும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அன்று மட்டும் கூடுதலாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    27 வார்டு வனிதா (அதிமுக): எனது வார்டுக்குட்பட்ட ஆர்.வி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் செல்ல போதிய வடிகால் கால்வாய் அமைக்காததால் குளம் போன்று கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு சரும நோய்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால் பழுதுநீக்க நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தால் ஊழியர்கள் ரசீது இருந்தால் மட்டுமே குழாய்களை பழுது பார்க்க முடியும் என கூறி வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விக்னேஷ்(பாஜக): காரமடை நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. சாலையோரம் மற்றும் நடை பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனை உடனடியாக நகராட்சி நிர்வாகம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    ஆணையாளர் பால்ராஜ்: குடிநீர் தெருவிளக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே மேம்பாலம் சப்வே பகுதியில் ரயில்வே கட்டுப்பாட்டு துறையில் உள்ளதால் அதனை அகற்ற ெரயில்வே மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது என்றார்.

    • கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
    • தமிழக அரசின் உத்தரவின் படி ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.

    நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, சுகாதார அலுவலர் இளங்கோ, நகரமைப்பு அலுவலர் காஜா மைதீன், ஆய்வாளர் கிருஷ்ணகுமார், மேலாளர் சண்முகவேல் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரேவதி பாலிஸ்வரன், பூங்கோதைதாஸ், சுபா ராஜேந்திர பிரசாத், தனலெட்சுமி, பாலசுப்பிரமணியன், வளர்மதி, மாலதி, சந்திரா, முருகன், முகையதீன் கனி, மீராள் பீவி, திவான் மைதீன், வேல்சங்கரி, சங்கரநாராயணன் பாத்திமா பீவி, நிலோபர், பீரம்மாள், அக்பர் அலி, யாசர்கான், முகமது அலி, மகேஸ்வரி, துர்காதேவி, முகமது முகைதீன், ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரி, முத்துலெட்சுமி, சுந்தரமகாலிங்கம், தங்கராஜ், செய்யதலி பாத்திமாஆகியோர் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.


    கூட்டத்தில் கடையநல்லூர் வட்ட பகுதிகளுக்குள் அதிக வழக்குகள் இருந்து வருவதால், தமிழக அரசின் உத்தரவின் படி ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்பதின் அடிப்படையில் கடையநல்லூர் வட்டத்திற்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைத்து தருவதற்கு தமிழக அரசை கேட்டுக் கொள்வது,

    அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மாணவியர் சேர்க்கையில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்ததை எடுத்து மாணவிகளின் நலன் கருதி நகராட்சி பகுதியில் மலம்பாட்டை சாலையில் இயங்கி வரும் பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியினை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட தமிழக அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும் கவுன்சிலர் முருகன் கொண்டு வந்த தீர்மானமான, நகர் மன்ற கூட்டம் அரங்கில் பழுதடைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பழைய நிழற்படத்தினை எடுத்துவிட்டு புதிய படம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    • செங்கோட்டை நகர்மன்ற கூட்டம் அதன் தலைவா் ராமலெட்சுமி தலைமையில் நடந்தது.
    • நகராட்சி பகுதியில் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன படுக்கை வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார மைய கட்டிடம் கட்ட நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தீர்மானம் கொண்டு வந்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகர்மன்ற கூட்டம் அதன் தலைவா் ராமலெட்சுமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பார்கவி, மேலாளா் ரத்தினம், பொறியாளா் சுரேஷ், கணக்கர் கண்ணன், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் செங்கோட்டை நகராட்சி பகுதியில் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன படுக்கை வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார மைய கட்டிடம் கட்ட நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தீர்மானம் கொண்டு வந்தார். ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதனைத்தொடா்ந்து நகரப்பகுதிகளில் தேவையான இடங்களில் புதிய மின்கம்பம் நட்டி தெருவிளக்கு அமைத்திடவும், குடிநீர், கழிவுநீர் ஓடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உறுப்பினா்கள் பேசினா். கூட்டத்திற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ரஹீம், முருகையா, பொன்னுலிங்ம், முத்துப்பாண்டி, வேம்புராஜ், ராம்குமார், இசக்கித்துரைபாண்டியன், சுடர்ஒளி, சந்திரா, பினாஷா, இச்சியம்மாள், பேபிரெசவுபாத்திமா உள்பட பலா் கலந்து கொண்டனா்.


    • கலை சிறப்புகள் மிகுந்த சலங்கையாட்டமும், வள்ளி கும்மியாட்டமும் நடந்தது.
    • சலங்கையாட்டம், வள்ளி கும்மியாட்ட நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    காங்கயம் :

    காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் சார்பில் என்.எஸ்.என். திருமண மகாலில் தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கலை சிறப்புகள் மிகுந்த சலங்கையாட்டமும், வள்ளி கும்மியாட்டமும் நடந்தது.

    அப்போது கலந்து கொண்ட காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்ற நிர்வாகிகளில் ஒருவரும், காங்கயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மனுமான மகேஸ்குமார் தனது மன்ற நிர்வாகிகளுடன் (ஆண்கள் மற்றும் பெண்களுடன்) சலங்கையாட்டம் ஆடினார். தொடர்ந்து கொடுவாய் வெற்றிவேலன் கலைக்குழுவின் தலைவர் குருவேலன் தங்கவேலன் தங்களது குழுவின் உறுப்பினர்களுடன் வள்ளி கும்மியாட்டம் ஆடினார்.

    அப்போது கலந்து கெரண்ட காங்கயம் நகராட்சி சேர்மன் சூர்யபிரகாஷ், காங்கயம் தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் என்.எஸ்.என்.தனபால் , செயலாளர் கங்கா சக்திவேல், பொருளாளர் பாலாஜி ரவிச்சந்திரன், காங்கயம் நகர , ஒன்றிய, வட்டார பகுதிகளின் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள் , சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்கள் சலங்கையாட்டம், வள்ளி கும்மியாட்ட நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.   

    • சாயல்குடி பேரூராட்சி சார்பில் தேசியக்கொடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடந்தது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேசிய கொடிகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர், இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி கண்ணப்பன் முன்னிலை வகித்தனர்.

    இதில் கவுன்சிலர்கள் ஆபிதா அனிபா அண்ணா, குமரையா, மாணிக்கவேல், அமுதா, கோவிந்தன், இந்திரா செல்லத்துரை உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

    ×