search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadaiyanallur"

    • விநாயகர் சதுர்த்தியை யொட்டி கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி, பா.ஜனதா மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
    • சுமார் 5 விநாயகர் சிலைகள் அரசு அனுமதித்த அளவை விட அதிக உயரம் கொண்டதாகவும், களிமண்ணுக்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருளால் தயாரிக்கப்பட்டதாகவும் இருந்துள்ளது.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி, பா.ஜனதா மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    நேற்று பெரும்பாலான சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது. அதில் சுமார் 5 விநாயகர் சிலைகள் அரசு அனுமதித்த அளவை விட அதிக உயரம் கொண்டதாகவும், களிமண்ணுக்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருளால் தயாரிக்கப்பட்டதாகவும் இருந்துள்ளது.

    இதையடுத்து அந்த சிலைகளின் குழு பொறுப்பாளர்கள் தலா 2 பேர் உள்பட 10 பேர் மீது கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
    • தமிழக அரசின் உத்தரவின் படி ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.

    நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, சுகாதார அலுவலர் இளங்கோ, நகரமைப்பு அலுவலர் காஜா மைதீன், ஆய்வாளர் கிருஷ்ணகுமார், மேலாளர் சண்முகவேல் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரேவதி பாலிஸ்வரன், பூங்கோதைதாஸ், சுபா ராஜேந்திர பிரசாத், தனலெட்சுமி, பாலசுப்பிரமணியன், வளர்மதி, மாலதி, சந்திரா, முருகன், முகையதீன் கனி, மீராள் பீவி, திவான் மைதீன், வேல்சங்கரி, சங்கரநாராயணன் பாத்திமா பீவி, நிலோபர், பீரம்மாள், அக்பர் அலி, யாசர்கான், முகமது அலி, மகேஸ்வரி, துர்காதேவி, முகமது முகைதீன், ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரி, முத்துலெட்சுமி, சுந்தரமகாலிங்கம், தங்கராஜ், செய்யதலி பாத்திமாஆகியோர் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.


    கூட்டத்தில் கடையநல்லூர் வட்ட பகுதிகளுக்குள் அதிக வழக்குகள் இருந்து வருவதால், தமிழக அரசின் உத்தரவின் படி ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்பதின் அடிப்படையில் கடையநல்லூர் வட்டத்திற்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைத்து தருவதற்கு தமிழக அரசை கேட்டுக் கொள்வது,

    அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மாணவியர் சேர்க்கையில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்ததை எடுத்து மாணவிகளின் நலன் கருதி நகராட்சி பகுதியில் மலம்பாட்டை சாலையில் இயங்கி வரும் பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியினை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட தமிழக அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும் கவுன்சிலர் முருகன் கொண்டு வந்த தீர்மானமான, நகர் மன்ற கூட்டம் அரங்கில் பழுதடைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பழைய நிழற்படத்தினை எடுத்துவிட்டு புதிய படம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    ×