search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Muthusamy"

    • நிர்ணயம் செய்யப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும்.
    • அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.

    ஈரோடு:

    ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

    டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    நிர்ணயம் செய்யப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும்.

    அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.
    • மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு , திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்த வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. வாய்க்காலை புனரமைக்க ஒருத்தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்தனர். அமைச்சர் முத்துசாமி இருதரப்பு விவசாயிகளையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். எனினும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.

    இந்நிலையில் கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டத்தை கைவிட கோரியும், விவசாயம் காக்க வேண்டியும், மண் கால்வாயிகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தி அரச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக விவசாயிகள் கடை வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டிருந்தனர்.

    அதன்படி இன்று காலையில் இருந்து அரச்சலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியான பிச்சாண்டாம் பாளையம், கருக்கம் பாளையம், வாய்க்கால் மேடு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து விவசாயிகள் மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அரச்சலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக ஆட்கள் நடமாட்டம் இன்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கீழ்பவானி வாய்க்காலில், பழைய கட்டுமானங்களில் உள்ள மராமத்துப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

    புதிதாக வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது. வாய்க்காலின் மண் கரை அப்படியே தொடர வேண்டும், கசிவுநீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று அரச்சலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் பல கோடி மதிப்பில் திட்டங்கள் உள்ளன.
    • பழைய குடியிருப்புகளை இடிக்கும் இடத்தில் நவீன குடியிருப்புகள் கட்டப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள கதிரம்பட்டி, வாவிகடை, சிலேட்டர்நகர், பெருந்துறையில் 3 இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் ரூ.15 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை, சாலை விரிவாக்கம் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

    அமைச்சர் சு.முத்துசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சாலை அமைப்பதற்கான பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு ஒன்றியத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 பணிகள், பெருந்துறையில் 3 பணிகள் என மொத்தம் 6 பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.15 கோடியே 75 லட்சம் மதிப்பில் இந்த 6 பணிகளும் நடைபெற உள்ளது. மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த திட்டம் இது. இன்னும் 6 மாதத்தில் முடிவடையும். மக்களுக்காக இதேபோல் இன்னும் ஏராளமான திட்டங்கள் உள்ளன.

    இதேப்போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் பல கோடி மதிப்பில் திட்டங்கள் உள்ளன. வீட்டு வசதி வாரியத்தில் 50 சதவீத காலி பணியிடங்கள் உள்ளன. இதில் வாரிசு அடிப்படையில் சில பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடங்கியுள்ளது. சர்வீஸ் கமிஷன் மூலம் இவை நிரப்பப்பட வேண்டும். அதற்கு சில கால அவகாசம் தேவைப்படுகிறது.

    வீட்டு வசதி வாரியத்தில் தமிழகம் முழுவதும் இடிந்து விழும் நிலையில் இருந்த 138 கட்டிடங்கள் கண்டறியபட்டு அதில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் 60 கட்டிங்கள் இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பழைய குடியிருப்புகளை இடிக்கும் இடத்தில் நவீன குடியிருப்புகள் கட்டப்படும். வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக சுயநிதி திட்டத்தின் கீழ் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட இடங்களில் வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டும் பணிக்கான சட்டத்திருத்தத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்த பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • பணிகள் 98 சதவீதம் முடிந்துள்ள நிலையில், நீரேற்று நிலையங்களில் ராட்சத மின் மோட்டார்களை இயக்கி குழாய் மூலம் தண்ணீரை கொண்டு செல்லும் சோதனை ஓட்டத்தை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
    • கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த கருத்து கேட்பு கூட்டத்திலும் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராய ன்பாளையத்தில் இருந்து பவானி ஆற்றின் உபரி நீரை ஆண்டுக்கு 1.5 டி.எம்.சி. அளவிற்கு குழாய் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நீரேற்று திட்டம் தான் அத்திக்கடவு- அவிநாசி திட்டம்.

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 1756 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலம் 106 கிமீ தொலைவிற்கு குழாய் அமைத்து 3 மாவட்டங்களில் உள்ள 1045 குளம் குட்டைகளை நிரப்பும் வகையில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இந்த திட்டத்திற்காக 6 இடங்களில் நீரேற்று நிலையங்களும. அமைக்கப்பட்டன. பணிகள் 98 சதவீதம் முடிந்துள்ள நிலையில், நீரேற்று நிலையங்களில் ராட்சத மின் மோட்டார்களை இயக்கி குழாய் மூலம் தண்ணீரை கொண்டு செல்லும் சோதனை ஓட்டத்தை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இந்த பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    இந்நிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கி அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த கருத்து கேட்பு கூட்டத்திலும் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார்.

    • ஈரோடு மாநகராட்சி எல்லை பகுதி தேவை அடிப்படையில் வரிவுபடுத்தப்படும்.
    • புதிதாக ஈரோடு பகுதியில் துணை நகரம் அமைக்கலாமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் பன்னீர்செல்வம் பார்க்க அருகே கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை இன்று அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். எனவே எனக்கும் அந்த விருப்பம் உள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் புறநகர் பஸ்கள் வந்து செல்ல சோலார் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் அங்கு நிற்கும். இதேபோன்று சத்தி, கோபி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் நிற்க கனி ராவுத்தர் குளம் அருகே மற்றொரு பஸ் நிலையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக இடம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. அரசின் நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் இடம் வாங்கப்பட்டு அங்கும் பஸ் நிலையம் அமைக்கப்படும். எனவே ஒரே சமயத்தில் 2 தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. பின்னர் அவைகள் நிரந்தர பஸ் நிலைய கட்டிட வசதியுடன் அமையும்.

    அத்திக்கடவு -அவினாசி திட்ட பணிகளை வரும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிக்க அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    சென்னை கிளாம்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. அப்பணிகளை வரும் ஜனவரி 15-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகரம் அச்சரப்பாக்கம் மற்றும் அரக்கோணம் வரையும் விரிவுபடுத்தப்படுகிறது. இதனால் மக்களுக்கு பல அடிப்படை வசதிகள் உருவாகும். வளர்ச்சி மேலும் துரிதப்படும்.

    எனவே தற்போது சென்னையில் உள்ள சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் அலுவலகங்கள் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளிலும் புதிதாக உருவாக்கப்படும்.

    ஈரோடு மாநகராட்சி எல்லை பகுதி தேவை அடிப்படையில் வரிவுபடுத்தப்படும். புதிதாக ஈரோடு பகுதியில் துணை நகரம் அமைக்கலாமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆனால் ஏற்கனவே முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியபகுதியில் பல மனைகள் விற்பனையாகாமல் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேளம்பாக்கம் பஸ் நிலையம் கட்டிடமும் முடிவடையும் தருவாயில் உள்ளது.
    • பொங்கல் பண்டிகைக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    வண்டலூர்:

    பரனூர் சுங்கச்சாவடி அருகே சுமார் 2 ஏக்கர் 58 சென்ட் பரப்பளவில் ரூ.25 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 971 மதிப்பீட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 116 அறைகள் வருகின்றன. இதில் எல்.ஐ.ஜி. 26 அறைகளும், எம்.ஐ.ஜி. 90 அறைகளும் கொண்ட 13 தளங்கள் ஒரு பிரிவாகவும், 15 தளங்கள் ஒரு பிரிவாகவும் கட்டப்படுகிறது.

    புதிய கட்டிடப் பணிகளை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த கட்டிடத்தில் 80 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. வருகிற மார்ச் மாத இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. கட்டிடத்தின் அருகே உள்ள 13.73 ஏக்கர் பரப்பளவில் காலி மனைகளையும் 145 அறைகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும்.

    ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி 121 குடியிருப்புகளில் 61 குடியிருப்புகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து மறுசீரமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இதற்கான பணியும் நடந்து வருகிறது.

    ரெயில்வே துறையில் வாங்க வேண்டிய அனுமதியும் விரைவில் முறையாக பெற்று வருகிற மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். இதேபோல் கேளம்பாக்கம் பஸ் நிலையம் கட்டிடமும் முடிவடையும் தருவாயில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சஞ்சீவனா, ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், துணைத் தலைவர் ஆராமுதன், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், தலைமை பொறியாளர் சீனிவாச ராவ் உடன் இருந்தனர்.

    • சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
    • கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பிப்ரவரி மாதம் தான் முழு செயல்பாட்டுக்கு வரும்.

    சென்னை:

    சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது.

    இந்த பஸ் நிலையம் எப்போது திறக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமியிடம் கேட்டபோது, வருகிற பிப்ரவரி மாதம் திறக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களுக்காக இந்த புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    பஸ் நிலைய பணிகள் தீபாவளிக்குள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் ஒரு சில பணிகள் முடிவடையாமல் உள்ளதால் பஸ் நிலையம் பிப்ரவரி மாதம் தான் முழு செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.

    • பன்னீர்செல்வம் பார்க் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டும் பணியை இன்று அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இதேபோல் காளை மாடு சிலை அருகேயும் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ரூ.51 கோடி மதிப்பில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. இந்த பணியை இன்று அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஈரோடு ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் பணி முடியும் தருவாயில் உள்ளது. ரூ.51 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 292 கடைகள் வர உள்ளது.

    இதேப்போல் 153 நான்கு சக்கர வாகனங்களும், 263 இரு சக்கர வாகனங்களும் நிறுத்த இடம் வசதி உள்ளது. மொத்தம் 3 லட்சம் சதுர அடியில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

    இங்கு துணி வாங்க வருபவர்கள் பஸ்சில் வந்து இறங்கி செல்வதற்கும், மீண்டும் துணிகளை வாங்கி திரும்பி செல்வதற்கும் சிரமம் இன்றி செல்லும் வகையில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    நமது மாவட்டத்தில் ஒவ்வொரு பணிகள் குறித்து ஆய்வு செய்யும் போது அது குறித்து முதல்-அமைச்சர் கேட்டு வருகிறார்.

    இந்த ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் ஏற்கனவே இருக்கும் வியாபாரிகளுக்கு முன்னு ரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்க அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறோம்.

    இதில் சில சட்ட சிக்கல்கள் பிரச்சி னைகள் உள்ளன. அவை நிவர்த்தி செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்ப டையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் காளை மாடு சிலை அருகேயும் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    இந்நிலையில் இன்று காரமடை அருகே அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து நானே சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்வேன். இதேபோல் பூந்துறை பகுதிகளிலும் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேசி சுமுகமான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜீ ஸ்கொயர் நிறுவனத்துக்கு அண்ணாமலை சொல்லியது போல் 8 நாளில் அனுமதி கொடுக்கப்படவில்லை.
    • குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

    சென்னை:

    ஜீ ஸ்கொயர் நிறுவன கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், கோவையில் 122 ஏக்கருக்கான அனைத்து ஒப்புதல்களையும் அந்த நிறுவனம் 8 நாட்களில் பெற்றுள்ளது என்றும் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

    இதுமட்டுமின்றி சி.எம்.டி.ஏ. செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சி.எம்.டி.ஏ.வில் கட்டிட பணிகளுக்கு அனுமதி வழங்குவதில் ஒற்றை சாளர முறையில் விரைந்து நிறைவேற்றுமாறு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் முதலில் சோதனை முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    கடந்த ஏப்ரல் 1 முதல் 30-ந்தேதி வரை ஒற்றை சாளர முறையில் அந்த பணிகள் சோதனைக்காக நடத்தப்பட்டது. மே 5-ந்தேதி முதல் 9-ந்தேதி அதை நிறுத்திவிட்டு 10-ந்தேதி முதல் அந்த பணிகள் ஆன்லைனில் கொண்டு வரப்பட்டது. கடந்த 27 நாட்களில் 92 மனுக்கள் அனுமதி கேட்டு சி.எம்.டி.ஏ.வில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே ஆன்லைனில் விண்ணப்பிப்பது 10-ந்தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. சி.எம்.டி.ஏ.வில் பொதுமக்களின் கால விரயத்தை தவிர்க்கவும், மனுதாரர்களின் அலைச்சலை தவிர்க்கவும் பணிகளை விரைந்து முடிக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு முன்பு அடுக்குமாடி கட்டிட அனுமதிக்கு அமைச்சர் கையெழுத்து போட வேண்டும்.

    இந்த நடைமுறையை மாற்றி இனிமேல் நேரடியாக சி.எம்.டி.ஏ. அலுவலகத்திலேயே அதிகாரிகள் அனுமதி வழங்கும் வகையில் அதிகாரம் வழங்கி உள்ளோம். கிராம பகுதிகளில் உள்ள நிலமாக இருந்தால் 5 ஏக்கர் என்று இருந்ததை 10 ஏக்கராக அனுமதித்து உயர்த்தி உள்ளோம். அதையும் அந்த மாவட்டத்திலேயே செய்து கொள்ளலாம்.

    அதேபோல் நகராட்சி பகுதிகளில் 2½ ஏக்கர் என்பதை 5 ஏக்கராக உயர்த்தி கொடுத்துள்ளோம். கட்டிட அனுமதிக்கு மாவட்ட அளவில் 15 ஆயிரம் சதுர அடிக்கு மட்டும் கொடுக்க முடியும். இப்போது அதை 40 ஆயிரம் சதுர அடியாக உயர்த்தி உள்ளோம்.

    ஒரு தனிநபர் கட்டிடம் கட்டும் போது கூட பல்வேறு பிரச்சினை ஏற்படுவது உண்டு. அதற்கு தீர்வுகாண சி.எம்.டி.ஏ.வில் பணிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. மக்களின் வசதிக்காக கோவை, ஓசூர், திருச்சி, மதுரை, சேலம், திருப்பூர், பகுதிகளிலும் சி.எம்.டி.ஏ. வர உள்ளது.

    சென்னை சி.எம்.டி.ஏ.வில் காலி பணியிடங்கள் நிறைய உள்ளது. இதனால் அதிக பணிச்சுமை உள்ளது. 37 சதவீதம் காலியிடங்கள் இருக்கிறது.

    இந்த காலியிடங்கள் ஒரு வருடத்தில் ஏற்பட்டதல்ல. இருக்கிற ஊழியர்களை வைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. காலி இடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கூறும்போது, 'சி.எம்.டி.ஏ.வில் புதிதாக சி.இ.ஓ. பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தவறான பார்வையாகும். சி.எம்.டி.ஏ.வில் 1978-ல் இருந்து சி.இ.ஓ. பதவி உள்ளது. இதுவரை அந்த பதவியில் 45 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியாற்றி உள்ளனர்.

    இப்போது 46-வது ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்த பதவியில் உள்ளார். இந்த பதவி அவசியமானது. அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2 ஆண்டாக சி.இ.ஓ. பணி நிரப்பப்படவில்லை.

    கே:-கோவையில் ஜீ ஸ்கொயர் நிறுவனத்துக்கு 122 ஏக்கர் நிலத்துக்கான அனைத்து ஒப்புதலையும் அந்த நிறுவனத்துக்கு 8 நாட்களில் சி.எம்.டி.ஏ. வழங்கி உள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்து இருக்கிறாரே?

    அமைச்சர் அமைச்சர் முத்துசாமி:- பிளான் அனுமதி என்பது 3 விதமாக உள்ளது. நில வகைப்பாடு மாற்றம், லே அவுட், கட்டிட அனுமதி. இதில் கோவையில் 122 ஏக்கருக்கான ஒப்புதலுக்கு சிவமாணிக்கம் என்பவர் 12.12.2019-அன்று சி.எம்.டி.ஏ.வில் விண்ணப்பம் செய்துள்ளார். அவருக்கு 28.1.2021 அன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது.

    இதைத்தான் அண்ணாமலை, நாங்கள் அனுமதி கொடுத்தது போல் பேசுகிறார். சி.எம்.டி.ஏ.வில் அனுமதி கேட்டு சிவமாணிக்கம் பெயரில் தான் விண்ணப்பம் வந்துள்ளது. ஜீ ஸ்கொயர் நேரடியாக விண்ணப்பிக்கவில்லை.

    இதைத்தான் ஜீ ஸ்கொயருடன் சம்பந்தப்படுத்தி அவர் பேசி உள்ளார். நிலம் அனுமதிக்கு பிறகு கூட ஜீ ஸ்கொயர் அதை வாங்கி இருக்கலாம்.

    அதே மனை பிரிவுக்கு இவர்கள் 12.12.2019-ல் மற்றொரு விண்ணப்பம் செய்ததின் பேரில் 30.3.2021-ல் டி.சி.டி.பி. அப்ரூவல் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஜீ ஸ்கொயர் நிறுவனத்துக்கு அவர் சொல்லியது போல் 8 நாளில் அனுமதி கொடுக்கப்படவில்லை. குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கவில்லை. எனவே அண்ணாமலை சொல்லி இருப்பது முழுக்க முழுக்க தவறு.

    இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.

    ×