search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettupalayam"

    • மர்மநபர்கள் நகையை திருடி சென்று விட்டனர்.
    • மர பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகையை திருடி சென்று விட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை சிவன் புரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி விஜய ராணி(66). இவர் தனது தம்பி வீட்டுக்கு கடந்த 22-ந் தேதி மாலை 6 மணிக்கு சென்று விட்டு 23-ந் தேதி காலை 9 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு மர பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்கச்செயின், 9 பவுன் கம்மல் ஆகியவை மாயமாகி இருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நகையை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காரமடை இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹிம் வழக்கு பதிவு செய்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றார்.

    • சித்தா டாக்டர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்ப கவுண்டர் மகன் பாலசுப்பிரமணியம்(56). விவசாயி.

    இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி தனது மாடுகள் மீது ஆசிட் வீசியதாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இந்த புகாரின் மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் 3.30 மணிக்கு மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் பாலசுப்பிரமணியம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மேட்டுப்பாளையம் பங்களா மேடு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன்(51), அவரது மகன் சேதுபதி (35) ஆகியோர் பாலசுப்பிரமணியத்தை தகாத வார்த்தையால் திட்டினர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர்.இதுகுறித்து பாலசுப்பிரமணியம் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பாலசுப்பிரமணியத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவிச்சந்திரன் சித்தா டாக்டர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் சேதுபதி மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளான ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் சேதுபதி ஆகியவரை தேடி வருகின்றனர்.

    • 84 ஊராட்சி செயலாளர்களை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
    • பொதுமக்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பலர் ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் மீது பொதுமக்கள், அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்த ஓராண்டு காலமாக மாவட்ட கலெக்டருக்கு மனுக்களை அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கோவை மாவட்டத்தில் உள்ள 84 ஊராட்சி செயலாளர்களை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டார். இதில் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த செயலா ளர்களும் பணியிடமா ற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அன்னூர் ஒன்றிய பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    இது போன்ற நடவடி க்கையில் ஈடுபட்ட மாவட்ட கலெக்டருக்கு காரமடை வழிக்காட்டி அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    • அன்னூர் சாலையில் தாளத்துறை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்
    • 16 கிராம் எடையுள்ள ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் நேற்று சிறுமுகை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் பொருட்டு அன்னூர் சாலையில் தாளத்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக 2 இரு சக்கர வாகனத்தில் வந்த மேட்டுப்பாளையம் சேரன் நகர் 2 பகுதியை சேர்ந்த ெசபாஸ்டியன் (21), சிறுமுகை அருகே அன்னூர்‌ சாலை டி.ஆர்.எஸ். ஹவே சிட்டி பகுதியை சேர்ந்த மார்சல் (22), சேரன் நகரை சேர்ந்த விஜய் ஆனந்த் (19) ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அவர்களிடம் 16 கிராம் எடையுள்ள ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூர் பகுதியில் இருந்து இந்த போதை மாத்திரைகளை வாங்கி வந்ததாக கூறியுள்ளனர்.

    மேலும் இதனை இவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து பயன்படுத்த ஒன்றாக சென்றுள்ளனர். இதையடுத்து சிறுமுகை போலீசார் இவர்கள் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    மேட்டுப்பாளையம், -

    மேட்டுப்பாளையம் கோட்டத்திற்குட்பட்ட பவானி பேரேஜ் , மருதூர் துணை மின் நிலையம் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பவானி மேரேஜ் 1, சுக்குகாப்பி கடை, சமயபுரம், ராமேகவுண்டன்புதுார், பத்திரகாளியம்மன் கோவில் பகுதிகள், நெல்லித்துறை, தேக்கம்பட்டி, நஞ்ஜேகவுண்டன்புதூர், கெண்டேபாளையம், தொட்ட தாசனுார், மற்றும் குந்தா பீடரில் உள்ள குடிநீர் இணைப்புகள் மற்றும் அதில் உள்ள மின்நுகர்வோர்கள்.

    மருதூர் துணை மின்நிலையம்: காரமடை லாரி உரிமையாளர் பங்கிற்கு தென்புரம் உள்ள பகுதிகள் முழுவதும், சின்ன காரனூர், சர்வால் பீடர் கண்ணார்பாளையம் ரோடு மட்டும், அர்ச்சனா கார்டன், எஸ்.ஆர்.எஸ்.ஐ பீடரில் படியனூர் வாட்டர் பம்பு அவுஸ் வரை மற்றும் காரமடை மேற்கு பகுதிகளான குந்தா காலனி, திம்மம்பாளையம், புங்கம்பாளையம், செல்லப்பனுார், மருதூர் , தேவனாதபுரம், சுள்ளி பாளையம், புஜங்கனுார், பிளிச்சி கவுண்டனூர், கணுவாய் பாளையம், தாயனூர், தோலம்பாளையம், பணப்பாளையம், சீளியூர், நீலாம்பதி, மேல்பாவி, சாலைவேம்பு, கண்டியூர், வெள்ளியங்காடு, ஆதிமாதையனூர், சுண்டக்கொரை, முத்துக்கல்லூர், பில்லூர் குடிநீர், வெள்ளியங்காடு குடிநீர், நெல்லித்துறை குடிநீர், தேக்கம்பட்டி குடிநீர் காரமடை, தேக்கம்பட்டி குடிநீர் இணைப்புகள் போன்ற இடங்களில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மேட்டுப்பாளையம் மின் செயற் பொறியாளர் தெரிவித்தார்.

    • தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக அவரது அண்ணன் போலீசில் புகார் செய்தார்.
    • தொழிலாளியுடன் தங்கியிருந்த நண்பரை போலீஸ் ேதடுகிறது

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கீழ் பள்ளிவாசல் வீதியை சேர்ந்தவர் சையது முகமது மகன் முஸ்தபா (46). ஊட்டி டவுன் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.

    இவருடைய அண்ணன் ஜெய்னுதீன்(50). திருமணம் ஆகி தனியாக வாழ்ந்து வந்தார். அவ்வப்போது மேட்டுப்பாளையம் வந்து தங்கி கூலி வேலை செய்தார்.

    இந்தநிலையில் நேற்று காலை முஸ்தபாவின் உறவினர் அப்பாஸ் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உனது அண்ணன் ஜெய்னுதீன் இறந்துவிட்டதாகவும், அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் இருப்பதாக தகவல் அளித்தார்.

    உடனே முஸ்தபா மற்றும் அவருடைய அண்ணன் சலீம் ஆகியோர் மேட்டுப்பாளையம் வந்து அரசு மருத்துவமனை வந்து ஜெய்னுதீனின் உடலைப் பார்த்தனர்.

    அப்பாஸிடம் விசாரிக்கையில், ஜெய்னுதீன் கடந்த 7 ந் தேதி அவருடன் வேலை செய்யும் ஊட்டியை சேர்ந்த ஜெயராம் என்பவருடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருந்தார்.

    மது குடித்துவிட்டு இரவு 10 மணிக்கு படிக்கட்டு அருகே படுத்திருந்தவர் படியிலிருந்து புரண்டு கீழே விழுந்து பின்பக்க தலையில் அடிபட்டு இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த நிலையில் முஸ்தபா மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தனது அண்ணன் ஜெய்னுதீன் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மேட்டு ப்பாளையம் இ ன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெ க்டர்கள் செல்வநாயகம், முருகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயினுதியுடன் தங்கி இருந்த ஜெயராமனை தேடி வருகின்றனர். மேலும் ஜெய்னுதீன் சாவு இயற்கையானதா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    • கோவில் திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்பிரமணியர் சுவாமி கோவில் பவானி ஆற்றங்கரையில் உள்ளது.

    இக்கோவிலில் 1984-ம் ஆண்டு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சுப்ரமணியர், சிவன், அம்பாள் விக்கிரஹங்கள் புதிதாக பிரதிஷ்டம் செய்து திருவருள் கூட்டி உள்ளது.

    தற்போது கோவில் திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    தொடர்ந்து அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை புண்யாகவாசனம், தனபூஜை கணபதி மற்றும் நவகிரக ஹோமம், பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் தினமும் காலை, மாலை நேரங்களில் நடைபெற்றது.

    தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடந்தது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடந்தது.

    காலை 6.40 மணிக்கு கலசங்கள் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. 6.55 மணிக்கு மூலஸ்தான விமானம், பரிவார விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு மகாகும்பாபிஷகமும், 7.05 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமி முருகன், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    கோவில் கும்பாபிஷே கத்தை கோவை சீரவை ஆதினம் குமரகுருபர சுமாமிகள் செய்து வைத்தார்.கும்பாபிஷேக விழாவில் மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 7 மணிக்கு சுப்பிரமணிய முருகன் திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பவானி ஆற்றில் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என விசாரணை நடத்திவருகிறார்கள்.

    கோவை:

    மேட்டுப்பாளையம் ஆத்துப்பாலம் அருகே உள்ள நெல்லித்துறை பவானி ஆற்றில் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என விசாரணை நடத்திவருகிறார்கள். 

    • வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்படுவதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • மண்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது.

    இதில் 6 வார்டு பகுதியில் உருளைக்கிழங்கு, பூண்டு, பெரிய வெங்காயம், சாக்கு உள்ளிட்ட மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இதன்மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து உருளைக்கி ழங்கு, பூண்டு, பெரிய வெங்காயம் சாக்கு உ ள்ளிட்டவை ஏற்றுமதி, இறக்குமதி மேற்கொள்ள ப்படுகிறது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டுப்பாளையம் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பகுதிகளில் பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு வருகிறது.

    இதில் மேட்டு ப்பாளையம் உருளைக்கி ழங்கு மண்டி பகுதிகளில் பாக்குகார சாலை செல்லும் வழியில் உள்ள கிழங்கு மண்டி சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனை பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இச்சாலை வழியாக அனைத்து மகளிர் காவல் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மகாஜன பள்ளி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மக்கள் சென்று வரும் வழியாக உள்ளது. மேலும் நெல்லித்துறை சாலை வழியாக தினசரி நிலகீரி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய வாகனங்களில் எடுத்து செல்கின்றனர். இதுபோன்ற நேரங்களில் இச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்களும், வியாபா ரிகளும் பெரும் அலைச்சலுக்கு உள்ளாகி வருகின்றன. எனவே இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டியின் உபதலைவர் எம்.என்.கோபால், செயலாளர் பி.ரங்கசாமி ஆகியோர் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டி பகுதியில் தினசரி கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. இத ன்மூலம் ஆயிரக்க ணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உள்ளது.

    இப்பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் உருளைக்கிழங்கு மண்டி பகுதிகளில் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது.
    • மழைகாலங்களில் மின் வயர் அருந்து விழுந்தால் எவ்வாறு அதனை கையாள்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேம்பட்டியில் பிரசித்தி பெற்ற வனபத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு உள்ளூர் மக்கள் மற்றும் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் அருகில் உள்ள பவானி ஆற்றில் குளிக்க செல்கின்றனர். அவர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது.

    சில சமயங்களில் குளிக்க வரும் பக்தர்கள் தடுப்பு கம்பிகளை தாண்டி ஆழமான பகுதிக்கு சென்றுவிடுகின்றனர். அப்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பக்தர்கள் அடித்து செல்லப்படுகின்றனர்.

    இதனால் உயிரிழப்பும் ஏற்படும் சூழ்நிலையும் இருந்து வருகிறது. இதையடுத்து அதனை தடுக்கும் வகையில் வாருவாய் துறை சார்பில் விழிப்புணர் முகாம் நடத்தப்பட்டது.

    இதில் தீயனைப்பு துறை, மின்சார துறை, காவர் துறை, தேசிய பேரிடர் மேலான்மை மற்றும் மருத்துவத்துறை ஆகிய துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பவானி ஆற்றில் யாராவது அடித்து செல்லப்பட்டால் அவர்களை எவ்வாறு மீட்பது.

    மழைகாலங்களில் மின் வயர் அருந்து விழுந்தால் எவ்வாறு அதனை கையாள்வது, இதில் யாருக்காவது ஆபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

    இதற்கு கோவை மாவட்ட கோட்டாட்சியர் பூமா தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் பால முருகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்காக ஏற்படுகளை தாசில்தார் மாலதி செய்து இருந்தார்.

    • அன்னூரில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்
    • 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கோவை

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 17 சிறுமி. இவர் அன்னூரில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சிறுமி திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். அப்போது தர்மபுரி மாவட்டம் டி.ஆண்டியூரை சேர்ந்த பனியன் தொழிலாளி விக்ரம் (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகளை கண்டித்தனர். ஆனால் சிறுமி தொடர்ந்து வாலிபருடன் பழகி வந்தார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறிவிட்டனர்.

    பின்னர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிறுமி அன்னூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 25-ந் தேதி சிறுமி தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் சேலத்துக்கு சென்றார்.

    அவர் இது குறித்து தனது காதலன் விக்ரமுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக சேலத்துக்கு விரைந்து சென்று சிறுமியை தர்மபுரிக்கு அழைத்து சென்று அங்குள்ள ஒரு பெருமாள் கோவிலில் வைத்து சிறுமியை திருமணம் செய்தார். பின்னர் விக்ரம் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    மாயமான தங்களது மகை ள கண்டுபிடித்து தரும்படி சிறுமியின் ெபற்ேறார் ேமட்டுப்பாைளயம் ேபாலீசில் புகார் ெசய்தனர்.

    புகாரின் ேபரில் ேபாலீசார் வழக்குப்பதிவு ெசய்து சிறுமியின் ெசல்ேபாைன ைவத்து அவர் இருக்கும் இடத்ைத கண்டுபிடித்தனர்.

    பின்னர் ேபாலீசார் தர்மபுரிக்கு ெசன்று விக்ரமுடன் தங்கி இருந்த சிறுமிைய மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமிைய விக்ரம் பாலியல் பலாத்காரம் ெசய்தது ெதரிய வந்தது.

    இதைனயடுத்து ேபாலீசார் சிறுமிைய திருமணம் ெசய்து பாலியல் பலாத்காரம் ெசய்த விக்ரம் மீது ேபாக்ேசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு ெசய்தனர். பின்னர் அவைர ேகார்ட்டில் ஆஜர்படுத்தி ெ ஜயிலில் அைடத்தனர்.

    • தொழிலாளிக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர்.
    • பெற்ற மகள் என்றும் பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுத்தார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பா ளையம் பகுதியை சேர்ந்தவர் 41 வயது தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர்.

    இவரது 2-வது மகள் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது முதல் மகள் மற்றும் கடைசி மகள் அவர்களது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். 2 மகள் மட்டும் பெற்றோருடன் இருந்து வந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி கோபித்து கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்றார்.

    சம்பவத்தன்று தொழிலாளியின் 2-வது மகள் 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது வீட்டுக்கு வந்த சிறுமியின் தந்தை திடீரென சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுத்தார். பின்னர் மகளிடம் , நடந்ததை யாரிடமும் செல்ல கூடாது என மிரட்டி அங்கிருந்து சென்றார்.

    இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று சிறுமி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் சென்றார்.அங்கு போலீசாரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதார். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுமியிடம் இருந்து புகார் பெற்றனர்.

    இதையடுத்து போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிறுமியின் வீட்டுக்கு சென்று அங்கு இருந்த ெதாழிலாளியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    ×