மேட்டுப்பாளையத்தில் வாலிபர் பிணமாக மீட்பு

பவானி ஆற்றில் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என விசாரணை நடத்திவருகிறார்கள்.
மேட்டுப்பாளையத்தில் வாலிபர் பிணமாக மீட்பு
Published on

கோவை:

மேட்டுப்பாளையம் ஆத்துப்பாலம் அருகே உள்ள நெல்லித்துறை பவானி ஆற்றில் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என விசாரணை நடத்திவருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com