மேட்டுப்பாளையம் அருகே 14 பவுன் தங்க நகைகள் திருட்டு

மர்மநபர்கள் நகையை திருடி சென்று விட்டனர்.மர பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகையை திருடி சென்று விட்டனர்.
மேட்டுப்பாளையம் அருகே  14 பவுன் தங்க நகைகள் திருட்டு
Published on

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை சிவன் புரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி விஜய ராணி(66). இவர் தனது தம்பி வீட்டுக்கு கடந்த 22-ந் தேதி மாலை 6 மணிக்கு சென்று விட்டு 23-ந் தேதி காலை 9 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு மர பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்கச்செயின், 9 பவுன் கம்மல் ஆகியவை மாயமாகி இருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நகையை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காரமடை இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹிம் வழக்கு பதிவு செய்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com