search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness for devotees"

    • பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது.
    • மழைகாலங்களில் மின் வயர் அருந்து விழுந்தால் எவ்வாறு அதனை கையாள்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேம்பட்டியில் பிரசித்தி பெற்ற வனபத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு உள்ளூர் மக்கள் மற்றும் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் அருகில் உள்ள பவானி ஆற்றில் குளிக்க செல்கின்றனர். அவர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது.

    சில சமயங்களில் குளிக்க வரும் பக்தர்கள் தடுப்பு கம்பிகளை தாண்டி ஆழமான பகுதிக்கு சென்றுவிடுகின்றனர். அப்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பக்தர்கள் அடித்து செல்லப்படுகின்றனர்.

    இதனால் உயிரிழப்பும் ஏற்படும் சூழ்நிலையும் இருந்து வருகிறது. இதையடுத்து அதனை தடுக்கும் வகையில் வாருவாய் துறை சார்பில் விழிப்புணர் முகாம் நடத்தப்பட்டது.

    இதில் தீயனைப்பு துறை, மின்சார துறை, காவர் துறை, தேசிய பேரிடர் மேலான்மை மற்றும் மருத்துவத்துறை ஆகிய துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பவானி ஆற்றில் யாராவது அடித்து செல்லப்பட்டால் அவர்களை எவ்வாறு மீட்பது.

    மழைகாலங்களில் மின் வயர் அருந்து விழுந்தால் எவ்வாறு அதனை கையாள்வது, இதில் யாருக்காவது ஆபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

    இதற்கு கோவை மாவட்ட கோட்டாட்சியர் பூமா தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் பால முருகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்காக ஏற்படுகளை தாசில்தார் மாலதி செய்து இருந்தார்.

    ×