search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் சுவாமி கோவில்  கும்பாபிஷேகம்
    X

    மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    • கோவில் திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்பிரமணியர் சுவாமி கோவில் பவானி ஆற்றங்கரையில் உள்ளது.

    இக்கோவிலில் 1984-ம் ஆண்டு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சுப்ரமணியர், சிவன், அம்பாள் விக்கிரஹங்கள் புதிதாக பிரதிஷ்டம் செய்து திருவருள் கூட்டி உள்ளது.

    தற்போது கோவில் திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    தொடர்ந்து அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை புண்யாகவாசனம், தனபூஜை கணபதி மற்றும் நவகிரக ஹோமம், பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் தினமும் காலை, மாலை நேரங்களில் நடைபெற்றது.

    தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடந்தது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடந்தது.

    காலை 6.40 மணிக்கு கலசங்கள் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. 6.55 மணிக்கு மூலஸ்தான விமானம், பரிவார விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு மகாகும்பாபிஷகமும், 7.05 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமி முருகன், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    கோவில் கும்பாபிஷே கத்தை கோவை சீரவை ஆதினம் குமரகுருபர சுமாமிகள் செய்து வைத்தார்.கும்பாபிஷேக விழாவில் மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 7 மணிக்கு சுப்பிரமணிய முருகன் திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×