search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelery stolen"

    • கஸ்தூரி தனது குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்றார்.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களும் சேகரிக்கப்பட்டது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் தொப்பம்பட்டி ஆனந்தா கார்டன், நியூ எக்ஸ்டென்ஸ் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி(வயது65). ஓய்வு பெற்ற ஆசிரியை.

    இவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து, இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் அந்த பகுதி யில் வசித்து வருகிறார்.

    கடந்த 26-ந் தேதி கஸ்தூரி தனது மகன் மற்றும் மருமகளுடன் தங்க ளது சொந்த ஊரான மதுரை கே.கே.நகரில் நடந்த உறவினர் ஒருவரின் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

    அங்கு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நேற்றிரவு தங்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சியான கஸ்தூரி மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததுடன் அதில் இருந்த துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    இதையடுத்து பீரோவில் வைத்துள்ள நகைகள் இருக்கிறதா என கஸ்தூரி தேடி பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 14 பவுன் வைர நெக்லஸ், 7½ பவுன் தங்க நெக்லஸ், கம்மல், வளையல் உள்பட மொத்தம் 28½ பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது.

    இவர்கள் ஊருக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அதன்பின்னர் உள்ளே நுழைந்து, நகையை கொள்ளையடித்து சென் றது தெரியவந்தது.

    இதுகுறித்து கஸ்தூரி துடியலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரை ந்து வநது விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களும் சேகரி க்கப்பட்டது. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்விபிடிக்கவில்லை.

    இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை கொள்ளையடித்து சென்ற வர்களை தேடி வருகின்ற னர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    • இதுகுறித்து ஆரோக்கியசாமி சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
    • இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கணபதி, தெய்வநாயகி நகர், 3-வது வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (56). இவர் தனது மனைவி மற்றும் மகன்கள் பிரேம், ஸ்டீபன் ஆகியோருடன் வசித்து வரு கிறார்.

    ஆரோக்கியசாமி கணபதி பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மகன்கள் வெள்ளக்கிணறு பகுதியில் டைல்ஸ் வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆரோக்கியசாமி சனிக்கிழமை வியாபாரம் முடித்து அன்று வசூலான பணத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து உள்ளார். அதன்பிறகு குடும்பத்தினருடன் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    பின்னர் இன்று அதிகாலை ஊர் திரும்பியபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். எனவே அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தார். அங்கு துணிமணிகள் இறைந்து கிடந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியசாமி பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த ரூ.1.72 லட்சம் மற்றும் 30 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஆரோக்கியசாமி சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆரோக்கியசாமி வீட்டில் கைரேகை பதிவுகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேக்கரி அதிபர் வீட்டுக்குள் எத்தனை பேர் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாக்கியலட்சுமி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
    • தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள சுண்டபாளையம் ஹரிஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் அன்பு சிவா. பேராசிரியர். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 42). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வழக்கம் போல தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    அவர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்து கம்மல், செயின், மோதிரம் உள்பட 12 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பாக்கியலட்சுமி கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைேரகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    கோவை,

    கோவை சாய்பாபா காலனியை அடுத்த ரமனகவுண்டர் லே அவுட்டை சேர்ந்தவர் நிர்மலா (வயது 44). பேராசிரியை. சம்பவத்தன்று இவர் தனது கணவருடன் அழகேசன் ரோடு முருகன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அவர்களுக்கு எதிரே வாலிபர் ஒருவர் ேமாட்டார் சைக்கிளில் வந்தார்.

    அந்த வாலிபர் திடீரென நிர்மலாவின் அருகில் வந்து அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகையை பறித்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கணவன்-மனைவி இருவரும் சத்தம் போட்டனர். அவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களது உதவியுடன் நிர்மலாவின் கணவர் அந்த வாலிபரை துரத்தி பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார்.

    பின்னர் இதுகுறித்து நிர்மலா சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை பூ மார்க்கெட்டை சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (48).கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஊக்கடம் மீன் மார்க்கெட் அருகே நடந்து சென்றார்.

    அப்போது அங்கு ேமாட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வழிப்பறியில் ஈடுப்பட்டது.உக்கடத்தை சேர்ந்த ரெஜின் (19), தோப்பு தோட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், தெற்கு உக்கடத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ரெஜினை சிறையில் அடைத்தனர். 2 சிறுவர்களையும், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    • மூதாட்டியிடம் பிரதமர் நிதி திட்டத்தில் உங்களுக்கு ரூ. 2 ஆயிரம் பணம் பெற்று தருகிறேன்
    • மூதாட்டியை ஏமாற்றி நூதனமாக நகை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை,

    சுங்கம் பைபாஸ் ரோடு கோபி நகரை சேர்ந்தவர் சுசீலா(வயது70). சம்பவத்தன்று இவர் லங்கா கார்னர் சிக்னல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் மூதாட்டியிடம் பிரதமர் நிதி திட்டத்தில் உங்களுக்கு ரூ. 2 ஆயிரம் பணம் பெற்று தருகிறேன் என ஆசை வார்த்தை கூறினார்.பின்னர் உங்களை போட்டோ எடுக்க வேண்டும் என கூறினார். மேலும் அருகே உள்ள ஸ்டூடியோவுக்கு செல்லலாம் என கூறி அந்த நபர் மூதாட்டியை தாமஸ் வீதிஅருகே அழைத்து சென்றார்.

    பின்னர் போட்டோ எடுக்கும் போது அதிகளவில் நகை அணிந்து இருந்தால் உங்களுக்கு பிரதமர் நிதி திட்டத்தில் பணம் கிடைக்காது என கூறி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின் மற்றும் 1 பவுன் தங்க கம்மலை கழட்டி அந்த நபர் வாங்கி கொண்டார். அதனை ஒரு பேப்பரில் சுற்றி மூதாட்டியிடம் கொடுத்து விட்டு இங்கேயே இருங்கள் வந்து விடுகிறேன் என கூறி விட்டு சென்று விட்டார்.

    நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகத்தின் பேரில், மூதாட்டி அவர் நகையை சுற்றி கொடுத்த பேப்பரை பார்த்த போது அதில் நகைகளுக்கு பதிலாக சிறிய கற்கள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை ஏமாற்றி நூதனமாக நகை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சீனிவாசன் கடந்த 24-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னைக்கு சென்றார்.
    • 12 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள குருசாமி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 57). ரியஸ் எஸ்டேட் புரோக்கர்.

    கடந்த 24-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னைக்கு சென்றார். அப்போது சீனிவாசன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், மோதிரம் உள்பட 12 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

    வீட்டிற்கு திரும்பிய சீனிவாசன் கதவு உடைக்க ப்பட்ட திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.இது குறித்து அவர் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாக இருந்த மர்மநபர்களின் கைேரகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • தனது மகள் அணிந்து செயின் மோதிரம் உள்ள 5 பவுன் தங்க நகைகளை கழற்றி பீரோவில் வைத்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பட்டணம் சிவன் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). வேன் டிரைவர்.

    சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் அந்த பகுதியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் அவர் தனது மகள் அணிந்து செயின் மோதிரம் உள்ள 5 பவுன் தங்க நகைகளை கழற்றி பீரோவில் வைத்தார். சம்பவத்தன்று அனைவரும் வீட்டை பூட்டி விட்டு சாவியை துணி துவைக்கும் எந்திரத்தில் மறைத்து வைத்து விட்டு சென்றனர்.

    இதனை நோட்ட மிட்ட யாரோ மர்மநபர் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மாலையில் வீட்டிற்கு திரும்பிய சக்திவேல் பீேராவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • அறையில் இருந்த லாக்கரில் வளையல், நெக்லஸ், கைசெயின், செயின் உள்பட 23 பவுன் தங்க நகைகளை வைத்து விட்டு சென்றார்.
    • பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன். நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர்.

    இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பாலச்சந்திரன் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று இவரது மகன் முகுந்த் சந்திரா (வயது 23). என்ஜினீயரிங் மாணவர். இவர் வீட்டை பூட்டி விட்டு தந்தையை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் வீட்டின் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின் , கைசெயின் தங்க மணி உள்பட 26½ பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.60 ஆயிரம் ரொக்க பணம், 2 போட்டோ காமராக்கள், கார் சாவி ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மறுநாள் வீட்டிற்கு திரும்பிய முகுந்த் சந்திரா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து ராமநாதபுரம் போலீசார் நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    பீளமேடு அருகே உள்ள பாரதி காலனியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 50). இவர் கத்தார் நாட்டில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். பரமேஸ்வரி கடத்த ஜூன் மாதம் தனது வீட்டிற்கு வந்தார்.

    அப்போது அறையில் இருந்த லாக்கரில் வளையல், நெக்லஸ், கைசெயின், செயின் உள்பட 23 பவுன் தங்க நகைகளை வைத்து விட்டு சென்றார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கோவைக்கு வந்தார். அப்போது லாக்கரை திறந்து பார்த்த போது அதில் இருந்த தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள். 

    • எல்.ஐ.சி. கணபதி கிளையில் வீட்டு லோன் வழங்கும் பிரிவில் மேலாளராக உள்ளார்.
    • 22 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.8 ஆயிரம் கொள்ளை ேபானது.

    கோவை,

    கோவை கணபதி வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி ரபீனா (44). இவர் எல்.ஐ.சி. கணபதி கிளையில் வீட்டு லோன் வழங்கும் பிரிவில் மேலாளராக உள்ளார். ரபீனா கடந்த 21-ந் தேதி குடும்பத்துடன் நெல்லைக்கு சென்றார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 22 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.8 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய ரபீனா கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ரபீனா கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செயின், வளையல், கைசெயின், கம்மல் உள்பட 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
    • மாலையில் வீடு திரும்பிய திலிப்குமார் வீட்டில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள தீத்திப்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 38). தனியார் நிறுவன ஊழியர்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீேராவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், கைசெயின், கம்மல் உள்பட 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மாலையில் வீடு திரும்பிய வெள்ளியங்கிரி கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் திலிப்குமார் (41).டிரைவர். சம்பவத்தன்று இவர் குழந்தையை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல் உள்பட 4 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மாலையில் வீடு திரும்பிய திலிப்குமார் வீட்டில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இந்த 2 கொள்ளை சம்பவங்கள் குறித்து பேரூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டபகலில் வீடுகளின் கதவை உடைத்து 14 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கைளை தேடி வருகிறார்கள். 

    • ஊட்டிக்கு குடும்பத்துடன் வந்த நாச்சிமுத்து, பர்ன்ஹில் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருக்கிறார்.
    • கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஊட்டி:

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து. என்ஜினீயர். இவரது மகன், ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இதற்காக ஊட்டிக்கு குடும்பத்துடன் வந்த நாச்சிமுத்து, பர்ன்ஹில் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருக்கிறார்.

    மேலும் அந்த வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று நாச்சிமுத்து, வீட்டில் வைத்திருந்த நகைகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்று சோதனை செய்தார்.

    அப்போது 8 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணை அதில், நாச்சிமுத்து தங்கி உள்ள வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டிலும் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    வீடுகளில் ஆளில்லா நேரங்களில் மர்ம ஆசாமிகள் புகுந்து பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையிலான போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்மநபர்கள் நகையை திருடி சென்று விட்டனர்.
    • மர பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகையை திருடி சென்று விட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை சிவன் புரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி விஜய ராணி(66). இவர் தனது தம்பி வீட்டுக்கு கடந்த 22-ந் தேதி மாலை 6 மணிக்கு சென்று விட்டு 23-ந் தேதி காலை 9 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு மர பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்கச்செயின், 9 பவுன் கம்மல் ஆகியவை மாயமாகி இருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நகையை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காரமடை இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹிம் வழக்கு பதிவு செய்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றார்.

    ×