search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை கணபதியில் பேக்கரி அதிபர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை
    X

    கோவை கணபதியில் பேக்கரி அதிபர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

    • இதுகுறித்து ஆரோக்கியசாமி சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
    • இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கணபதி, தெய்வநாயகி நகர், 3-வது வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (56). இவர் தனது மனைவி மற்றும் மகன்கள் பிரேம், ஸ்டீபன் ஆகியோருடன் வசித்து வரு கிறார்.

    ஆரோக்கியசாமி கணபதி பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மகன்கள் வெள்ளக்கிணறு பகுதியில் டைல்ஸ் வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆரோக்கியசாமி சனிக்கிழமை வியாபாரம் முடித்து அன்று வசூலான பணத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து உள்ளார். அதன்பிறகு குடும்பத்தினருடன் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    பின்னர் இன்று அதிகாலை ஊர் திரும்பியபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். எனவே அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தார். அங்கு துணிமணிகள் இறைந்து கிடந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியசாமி பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த ரூ.1.72 லட்சம் மற்றும் 30 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஆரோக்கியசாமி சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆரோக்கியசாமி வீட்டில் கைரேகை பதிவுகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேக்கரி அதிபர் வீட்டுக்குள் எத்தனை பேர் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×