கிணத்துக்கடவு அருகே வேன் டிரைவர் வீட்டில் 5 பவுன் நகைகள் கொள்ளை

தனது மகள் அணிந்து செயின் மோதிரம் உள்ள 5 பவுன் தங்க நகைகளை கழற்றி பீரோவில் வைத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிணத்துக்கடவு அருகே வேன் டிரைவர் வீட்டில் 5 பவுன் நகைகள் கொள்ளை
Published on

கோவை,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பட்டணம் சிவன் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). வேன் டிரைவர்.

சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் அந்த பகுதியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் அவர் தனது மகள் அணிந்து செயின் மோதிரம் உள்ள 5 பவுன் தங்க நகைகளை கழற்றி பீரோவில் வைத்தார். சம்பவத்தன்று அனைவரும் வீட்டை பூட்டி விட்டு சாவியை துணி துவைக்கும் எந்திரத்தில் மறைத்து வைத்து விட்டு சென்றனர்.

இதனை நோட்ட மிட்ட யாரோ மர்மநபர் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மாலையில் வீட்டிற்கு திரும்பிய சக்திவேல் பீேராவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com