என் மலர்
உள்ளூர் செய்திகள்

சரவணம்பட்டியில் எல்.ஐ.சி மேலாளர் வீட்டில் 22 பவுன் தங்க நகைகள் கொள்ளை
- எல்.ஐ.சி. கணபதி கிளையில் வீட்டு லோன் வழங்கும் பிரிவில் மேலாளராக உள்ளார்.
- 22 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.8 ஆயிரம் கொள்ளை ேபானது.
கோவை,
கோவை கணபதி வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி ரபீனா (44). இவர் எல்.ஐ.சி. கணபதி கிளையில் வீட்டு லோன் வழங்கும் பிரிவில் மேலாளராக உள்ளார். ரபீனா கடந்த 21-ந் தேதி குடும்பத்துடன் நெல்லைக்கு சென்றார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 22 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.8 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
வீட்டிற்கு திரும்பிய ரபீனா கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ரபீனா கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






