search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mamata"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடலில் குறிப்பிடும்படியாக சுவாச பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய ஒரு வகையை சேர்ந்தது.
    • ஒரு குழந்தைக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்துவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் பரவி வரும் அடினோவைரசின் பாதிப்புக்கு குழந்தைகள் அதிக இலக்காகின்றனர். அவர்களில் பலர் உயிரிழந்து உள்ளனர்.

    இதனை தொடர்ந்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறும்போது,

    குழந்தைகள் யாரும் பயப்பட வேண்டாம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார். அடினோவைரசின் பாதிப்புக்கு 19 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என கூறிய அவர், அவர்களில் 13 பேர் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர், ஒரு குழந்தைக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்துவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அந்த குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு எதுவும் காணப்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டியது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்த அடினோவைரசானது, லேசானது முதல் கடுமையான பாதிப்புகளை உடலில், குறிப்பிடும்படியாக சுவாச பகுதியில் ஏற்படுத்த கூடிய ஒரு வகையை சேர்ந்தது. அது எந்த வயது குழந்தையையும் பாதிக்க கூடியது. புதிதாக பிறக்கும் மற்றும் இளம் குழந்தைகளிடையே அது பரவலாக காணப்படும்.

    கடுமையான பாதிப்பின்போது அறிகுறிகளாக, பொதுவான ஜலதோஷம் போன்ற பாதிப்பையும், காய்ச்சல், வறண்ட தொண்டை, நுரையீரல் பாதிப்பு, நிம்மோனியா, கண்கள் பிங்க் வண்ணத்தில் நிறம் மாறுதல், வாந்தி, குமட்டல், வயிற்று போக்கு உள்ளிட்ட வயிறு மற்றும் குடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட கூடும் என தெரிவித்து உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலுக்குப் பின்னர், மேற்கு வங்க மாநில அமைச்சரவையில் மம்தா பானர்ஜி அதிரடி மாற்றங்களை செய்துள்ளார்.
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரசின் கோட்டையான மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 பாராளுமன்றத் தொகுதிகளில் 22 இடங்களை மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக 18 தொகுதிகளை கைப்பற்றி 2ம் இடத்தைப் பிடித்தது. அத்துடன், அக்கட்சியின் 2 எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு கவுன்சிலர்கள் இன்று பாஜகவில் சேர்ந்துள்ளனர்.

    இந்நிலையில் மேற்கு வங்க மாநில அமைச்சரவையில் மம்தா அதிரடி மாற்றங்களை செய்துள்ளார். போக்குவரத்து துறை அமைச்சர் சுவெந்து அதிகாரிக்கு நீர்ப்பாசனத் துறை மற்றும் நீர்வள விசாரணை மற்றும் மேம்பாட்டுத் துறை ஆகிய இரண்டு துறைகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பயோடெக்னாலஜி துறை அமைச்சர் பிரத்யா பாசுவுக்கு கூடுதல் பொறுப்பாக வனத்துறை வழங்கப்பட்டுள்ளது.

    தீயணைப்புத்துறை அமைச்சர் சுஜித் போஸ், வனத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நீர்வள விசாரணை மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சோமன் மகாபத்ரா, சுற்றுச்சூழல், மாசுபாடு மற்றும் பொது சுகாதார பொறியியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாலே காட்டக், தொழிலாளர் மற்றும் சட்டத்துறையையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ரஜீப் பானர்ஜி எஸ்சி,எஸ்டி மற்றும் பழங்குடியினர் நலத்துறையையும் கவனிப்பார்கள். திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர் சுபத்ரா முகர்ஜி, பஞ்சாயத்து துறை அமைச்சராக நீடிக்கிறார்.

    சந்திரமா பட்டாச்சாரியாவுக்கு பஞ்சாயத்து துறை இணை அமைச்சர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சர் பினய் கிருஷ்ண பர்மான், மேற்கு பிராந்திய வளர்ச்சித் துறை அமைச்சர் சாந்திராம் மகாட்டோ ஆகியோருக்கு துறைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. 
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றியின் பின்னால் வெளிநாட்டு சதி இருக்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பாரதீய ஜனதா 18 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வென்றுள்ளன.

    இந்த மாநிலத்தில் முன்னணி கட்சியாக இருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

    மேற்கு வங்காளத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த பாரதீய ஜனதா திடீர் எழுச்சி பெற்று 18 இடங்களை கைப்பற்றி இருப்பது திரிணாமுல் காங்கிரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து ஆராய்வதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது.

    அப்போது கட்சியின் பின்னடைவுக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். ஆனால், கட்சியினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

    கூட்டத்துக்கு பின்னர் பேசிய மம்தா பானர்ஜி, பாரதீய ஜனதா இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு பின்னால் வெளிநாட்டு சக்திகளின் சதி இருக்கலாம் என்று கருதுவதாக கூறினார்.

    ஆனால், இதற்கான ஆதாரம் எதுவும் என்னிடத்தில் இல்லை என்றார். மேலும் கூறிய அவர், ராஜஸ்தான், குஜராத், மற்றும் பல மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பாரதீய ஜனதாவுக்கு கிடைத்து இருப்பதற்கு கண்டிப்பாக சதி பின்னணி இருக்க வேண்டும் என்று கூறினார்.

    இதை சொல்வதற்கு மக்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன் என்று தெரிவித்தார்.

    மேற்கு வங்காளத்தில் 45 மந்திரிகள் உள்ளனர். இதில், 3-ல் ஒரு பங்கு மந்திரியின் சொந்த பகுதியிலேயே பாரதீய ஜனதா அதிக வெற்றிகளை பெற்று இருந்தது.

    இதனால் மம்தா பானர்ஜி அந்த மந்திரிகள் மீது கடுமையான அதிருப்தியில் இருந்தார்.

    மாநிலத்தில் நிலவும் ஊழல், ஆள் கடத்தல் பிரச்சினைகள் போன்றவை ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்தார்.

    உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் சரியாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

    மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களில் பெரும் பாலானோர் பாரதீய ஜனதாவுக்கே ஓட்டளித்து இருந்தனர். 60 சதவீத தபால் ஓட்டுகள் அந்த கட்சிக்கு கிடைத்து இருந்தது.


    மோடி பிரசாரத்தின் போது, மாநில அரசு ஊழியர்களுக்கு மம்தா ஆட்சியில் எதுவும் செய்ய வில்லை. விலைவாசி படியை கூட சரியாக கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

    இதுவும் அரசு ஊழியர்கள் பாரதீய ஜனதா பக்கம் சாய்வதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி இருந்த நிலையில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை இன்று சந்திரபாபுநாயுடு சந்திக்கிறார்.

    கொல்கத்தா:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு பா.ஜனதா மீண்டும் ஆட்சி வந்துவிடாமல் தடுக்கும் வகையில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை ஒரே அணியில் திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இதற்காக சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

    தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை 23-ந்தேதி நடைபெற இருக்கும் நிலையில் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் 2 முறை சந்தித்து பேசினார். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி பற்றி அவர் ஆலோசனை நடத்தினார். இதேபோல சரத்பவார், சரத்யாதவ், மாயாவதி, அகிலேஷ்யாதவ், சீதாராம்யெச்சூரி, கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்தார்.

    மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்தித்தும் ஆலோசனை நடத்தினார்.


    இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி இருந்த நிலையில் மேற்கு வங்காள முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாபானர்ஜியை கொல்கத்தாவில் இன்று பிற்பகல் சந்திரபாபு நாயுடு சந்திக்கிறார். அங்குள்ள தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நடக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி தொடர்பாக இருவரும் விவாதிப்பார்கள்.

    ஏற்கனவே சந்தித்த தலைவர்கள் பற்றிய விவரங்களை மம்தாவிடம் சந்திரபாபு நாயுடு எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.

    தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம். அது வாக்கு இயந்திரங்களை மாற்றி, தில்லுமுல்லு செய்யும் முயற்சி என மம்தா பானர்ஜி பானர்ஜி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் இன்று மாலை வெளியான சில ஊடகங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம். அது வாக்கு இயந்திரங்களை மாற்றி, தில்லுமுல்லு செய்யும் முயற்சி என மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, இன்றிரவு தனதுடுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் கருத்துக் கணிப்புகளை நான் நம்புவதில்லை. இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் எல்லாம் வாக்கு இயந்திரங்களை மாற்றவும் அவற்றில் தில்லுமுல்லு செய்யவும் ஆடப்படும் நாடகம்தான்.

    உறுதியோடும், தைரியமாகவும், ஒற்றுமையாகவும் எதிர்த்துப் போராடி இந்த போர்க்களத்தில் நாம் வென்றாக வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
    திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கொடுங்கள் மோடி ஜி இல்லையெனில் சிறைக்கு செல்வீர் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கொல்கத்தா: 

    மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று மதுராபூரில் தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது மீண்டும் தேர்தல் ஆணையம் மற்றும் மோடி அரசை கடுமையாக தாக்கி பேசினார். 

    கொல்கத்தாவில் அமித்ஷாவின் சாலை பேரணி நிகழ்ச்சியில் ஏற்பட்ட வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை பிரதமர் நரேந்திர மோடி கொடுக்க வேண்டும். 

    ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டற்கு காரணம் திரிணாமுல் காங்கிரஸ் எனக் கூறும் பிரதமர் மோடி, அதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவரை நான் சிறையில் தள்ளுவேன். எதற்கும் நான் பயப்பட மாட்டேன் என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்.
    பா.ஜனதாவின் கட்டுப்பாட்டின் கீழ் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
    மேற்கு வங்கத்தில் 19-ம் தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் நடக்கிறது. மாநிலத்தில் அமித்ஷா ஊர்வலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்களிடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு பெரிய வன்முறை வெடித்தது. இதனையடுத்து அரசியல் சட்டப்பிரிவு 324-ஐ கையிலெடுத்த தேர்தல் ஆணையம் ஒரு நாள் முன்னதாகவே அதாவது மே 16-ம் தேதி இரவு 10 மணியுடன் அனைத்து பிரசாரங்களும் முடித்துக் கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார். 

    மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமித் ஷா தனது கூட்டத்தின் மூலம் வன்முறைகளை உருவாக்கியுள்ளார், வித்யாசாகர் சிலை சிதைக்கப்பட்டது. இதற்காக பிரதமர் மோடி வருத்தப்படவில்லை. மேற்கு வங்காள மக்கள் இதனை தீவிரமாக எடுத்துள்ளனர். அமித் ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்று அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார், தேர்தல் ஆணையத்திற்கு மிரட்டல் விடுத்தார். அதன் விளைவுதான் பிரசாரத்திற்கு ஒருநாள் தடையா? வங்க மக்கள் பயப்பட மாட்டார்கள். 

    நான் மோடிக்கு எதிராக பேசுவதால்தான் மேற்கு வங்கம் இலக்காக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தை பா.ஜனதா நடத்துகிறது. இது இதுவரையில் இல்லாத ஒருநடவடிக்கையாகும். நேற்று வன்முறையே அமித் ஷாவால் நடத்தப்பட்டது. தேர்தல் ஆணையம் அமித்ஷாவிற்கு நோட்டீஸ் விடுக்காதது ஏன்? பிரசாரம் செய்ய தடை விதிக்காதது ஏன்? குண்டர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தார்கள், அவர்கள் காவி நிறம் அணிந்துக்கொண்டு வன்முறையை நிகழ்த்தியுள்ளனர். 

    பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இருந்த வன்முறைகளை உருவாக்கியுள்ளனர். தேர்தல் கமிஷனின் முடிவு நியாயமற்றது, அரசியல் ரீதியாக ஒருசார்பானது. பிரதமர் மோடி நாளை தன்னுடைய இரண்டு பேரணிகளை முடிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். 

    மேலும் பேசுகையில், பிரதமர் மோடி உங்களால் உங்கள் மனைவியையே கவனித்துக் கொள்ளமுடியவில்லை, எப்படி நாட்டை கவனித்துக் கொள்வீர்கள்? எனக் கேள்வியையும் எழுப்பியுள்ளார் மம்தா பானர்ஜி. மாயாவதி இதுபோன்ற விமர்சனத்தை முன்வைத்ததால், தனிமனித தாக்குதலில் தரம் தாழ்ந்து விட்டார் என பா.ஜனதா விமர்சனம் செய்தது. இப்போது மம்தாவும் அதுபோன்று பேசியுள்ளார். 
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அமித் ஷா, நான் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குவேன். துணிச்சல் இருந்தால் கைது செய்து பாருங்கள் என மம்தா பானர்ஜிக்கு சவால் விடுத்துள்ளார்.
    கொல்கத்தா:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி ஆறுகட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலில்  வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் நடந்தன.
     
    பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.

    இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் மிக பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால் அம்மாநில பாஜகவினர் கொதிப்படைந்துள்ளனர்.



    இந்த பேரணி ரத்தான நிலையில் ஜாய்நகர் பகுதியில் நடைபெற்ற மற்றொரு பிரசார கூட்டத்தில் இன்று மம்தா பானர்ஜியை அமித் ஷா கடுமையாக தாக்கி பேசினார்.

    ‘இன்று இங்கு நான் 3 பிரசார கூட்டங்களில் பேச இருந்தேன். மம்தாவின் மருமகன் போட்டியிடும் தொகுதிக்கு நான் போனால் அவர் தோற்பது உறுதி என்பதால் அங்கு என்னுடைய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனது பிரசாரத்திற்கு மட்டும்தான் மம்தா தடை விதிக்க முடியும். ஆனால், பாஜகவின் வெற்றியை அவரால் தடுத்து நிறுத்திவிட முடியாது.

    மத்திய அரசு கொண்டுவந்த பல திட்டங்களின் பலன்கள் இங்குள்ள மக்களை வந்து சேராத வகையில் மம்தாவின் அரசு தடைக்கல்லாக நின்று தடுத்து விட்டது. அந்த திட்டங்களின் மூலம் இங்குள்ள மக்களிடையே பிரதமர் மோடி பிரபலமாகி விடக்கூடாது என்ற நோக்கத்தில் மம்தா இந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்து வருகிறார்.

    இந்த மாநிலத்தில் உள்ள மக்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொன்னால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்த மேடையில் இருந்து நான் ‘ஜெய் ஸ்ரீராம்’  என்று முழங்குகிறேன். நாளை வரை நான் கொல்கத்தாவில் இருப்பேன். முடிந்தால், துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று மம்தாவுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன்’ என அமித் ஷா பேசினார்.
    தேர்தல் பணிக்காக அனுப்பபுவதுபோல் துணை ராணுவப்படையினருக்கான சீருடையில் மேற்கு வங்காளத்தில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பாஜக தொண்டர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெற்கு 24-வது பர்கானா மாவட்டத்துக்குட்பட்ட பசந்தி பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் இன்று பங்கேற்று தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது நடைபெற்றுவரும் தேர்தலில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் பலர் மோடி அரசால் தேர்தல் பணிக்காக இங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது மனம்போன போக்கில் எல்லாம் செயல்படுகின்றனர்.

    பாஜகவுக்கும் மோடிக்கும் வாக்களியுங்கள் என்று வாக்குச்சாவடிக்கு வருபவர்களிடம் அங்கு காவலுக்கு நிற்கும் துணை ராணுவப் படையினர் வெளிப்படையாகவே பிரசாரம் செய்கின்றனர்.



    நான் மத்திய துணை ராணுவப்படைகளை அவமதிக்கவில்லை. ஆனால், அவர்களை கருவியாக வைத்து வாக்குச்சாவடிகளில் காத்திருக்கும் மக்களை பாஜகவுக்கு வாக்களிக்குமாறு நிர்பந்திப்பதை நான் எதிர்க்கிறேன்.

    இப்படி செய்ய இவர்களுக்கு வெட்கமாக இல்லையா? இன்று நீங்கள் மோடியின் ஆட்சியின்கீழ் இருக்கலாம். நாளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இன்னொருவரின்கீழ் நிற்கும்போது உங்கள் கதி என்னவாகும்?

    கட்டால் தொகுதியில் இன்று ஒரு வாக்குச்சாவடிக்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் எங்கள் கட்சி தொண்டர் படுகாயம் அடைந்துள்ளார். தேர்தல் பணிக்காக அனுப்பப்படுவதுபோல் துணை ராணுவப் படையினருக்கான சீருடையில் இங்கு ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பாஜக தொண்டர்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு  குவித்து வைத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பாரதீய ஜனதா தலைவர்கள் ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பில் பணப்பெட்டிகளை கடத்துகிறார்கள் என்று மம்தா பானர்ஜி புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரதமர் மோடி பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இதனால் அவருக்கும், மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது.

    மோடி மீதும், பா.ஜனதா மீதும் மம்தாபானர்ஜி தினமும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். அந்த வரிசையில் நேற்று அவர் புதிய குற்றச்சாட்டு ஒற்றை வெளியிட்டார். பர்கானாஸ் மாவட்டம் அசோக் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

    மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பண பட்டுவாடா நடக்கிறது. வாக்காளர்களுக்கு பா.ஜனதாவினர் ஏராளமான பணத்தை அள்ளி கொடுக்கிறார்கள்.

    சமீபத்தில் பா.ஜனதா வேட்பாளர் பாரதிகோசின் காரில் இருந்து ஏராளமான பணத்தை கைப்பற்றி உள்ளனர். ஆனால் பா.ஜனதா மூத்த தலைவர்கள் பலர் தங்களுக்கு வழங்கப்படும் இசட்பிளஸ், ஒய் பிளஸ் பாதுகாப்பு படையை பயன்படுத்தி பணப்பெட்டிகளை கடத்தி செல்கிறார்கள்.

    தங்களது வாகனத்திலேயே கட்டு கட்டாக பணத்தை அடுக்கி பாதுகாப்புடன் கொண்டு செல்கிறார்கள். தேர்தல் சமயத்தில் ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றுவதற்காக இந்த பணம் பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. பாரதீய ஜனதா கட்சியினர் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வருகிறார்கள்.

    பிரதமர் மோடியும், பாரதீய ஜனதா தலைவர்களும் பிரசாரத்துக்கு வரும் போது அவர்களது ஹெலிகாப்டர்களையோ, கார்களையோ பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுக்க அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த கார்களில் இருந்து பெட்டி பெட்டியாக பணத்தை கடத்துவதே இதற்கு காரணம் ஆகும்.


    பிரதமர் மோடி வந்த விமானத்தில் இருந்து ஒரு பெட்டி எடுத்து செல்லப்படுவதை சில தினங்களுக்கு முன்பார்த்தோம். அதன் பிறகு படம் எடுக்க தடை செய்து விட்டார்கள். எனவே பா.ஜனதா தலைவர்களால் இதுபோல எத்தனை பெட்டிகளில் பணம் கொண்டு செல்லப்பட்டதோ? யாருக்கு தெரியும்.

    பணத்தால் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று பா.ஜனதா தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அதை தடுத்து நிறுத்துவோம். எப்போது பணம் கொண்டு சென்றாலும் கண்டுபிடித்து விடுவோம்.

    இரவில் பணத்தை பட்டு வாடா செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த பணத்தை எல்லாம் விழித்திருந்து பிடிக்கும்படி உத்தரவிட்டு இருக்கிறேன். பிரசாரம் ஓய்ந்து விட்டதால் எளிதாக பணம் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது.

    இவ்வாறு மம்தாபானர்ஜி கூறினார்.

    இலங்கையின் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். #SriLankanblasts #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    இலங்கையின் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 

    அப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். #SriLankanblasts #VenkaiahNaidu
    பாராளுமன்ற தேர்தலில் வெளிநாட்டினர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக இங்கு தேர்தல் பிரசாரம் செய்வது வெட்கக்கேடானது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #LSpolls2019 #Mamata #TMC #Modi
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள புனியாட்பூரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

    அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலத்தில் ஆளும்  திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்த மோடி, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் இங்குள்ள மக்களை வந்தடையாதவாறு உங்கள் முதல் மந்திரி தடைக்கல்லாக இருந்து வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.



    மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக தொண்டர்களுக்கு எதிரான அராஜகத்தை மம்தா கட்டவிழ்த்து விடுவதாக குறிப்பிட்ட அவர், குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.

    மேலும், அண்டைநாடான வங்காளதேசத்தில் மிகவும் பிரபலமான நடிகர்கள் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ததை சுட்டிக்காட்டிய மோடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக வெளிநாட்டினர் இங்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்வது வெட்கக்கேடானது என்றும் குறிப்பிட்டார்.

    இங்கு நடந்து முடிந்த இருகட்ட வாக்குப்பதிவால் மம்தா தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார். எனவே, வெளிநாட்டில் பிரபலமானவர்களை வைத்து சிறுபான்மையினத்தவர்களின் ஓட்டுகளை கவர்ந்து விடலாம் என்ற கற்பனையில் மம்தா மிதக்கிறார் என்றும் மோடி தெரிவித்தார். #LSpolls2019 #Mamata #TMC #Modi
    ×