search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "statue damage"

    • மர்ம நபர்கள் அந்த கோவிலில் உள்ள சிலையின் கை மற்றும் கால்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
    • யாரோ மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவோ நேற்று அதிகாலையோ கோட்டையில் உள்ள கமலக்கண்ணி அம்மன் சிலையை சேதப்படுத்தி உள்ளனர்.


    செஞ்சி பிரசித்தி பெற்ற ராஜகிரி மற்றும் கிருஷ்ணகிரி கோட்டைகள் உள்ளன. ராஜகிரி கோட்டையின் மேல் பகுதியில் பிரசித்தி பெற்ற கமலக்கண்ணி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் கமலக்கண்ணி அம்மன் சிலை உள்ளது. நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அந்த கோவிலில் உள்ள சிலையின் கை மற்றும் கால்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.வழக்கம் போல் பூஜைக்கு சென்ற பூசாரி ராமச்சந்திரன் இதனை பார்த்து கோட்டை அலுவலருக்கும் அறங்காவலர் அரங்க ஏழுமலைக்கும் தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்த செஞ்சி பீரங்கி மேடு பகுதி மக்கள் செஞ்சி கோட்டைக்கு திரண்டனர். அவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து செஞ்சி கோட்டை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.மேலும் இது குறித்து அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் செஞ்சி கோட்டை அலுவலர் நவீந்திரா ரெட்டி ஆகியோர் செஞ்சி போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில் யாரோ மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவோ நேற்று அதிகாலையோ கோட்டையில் உள்ள கமலக்கண்ணி அம்மன் சிலையை சேதப்படுத்தி உள்ளனர். எனவே அவர்களை கண்டுபிடித்து இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து செஞ்சி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். கோட்டை கோவிலில் உள்ள சிலை உடைக்கப்பட்டது இப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கொடுங்கள் மோடி ஜி இல்லையெனில் சிறைக்கு செல்வீர் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கொல்கத்தா: 

    மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று மதுராபூரில் தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது மீண்டும் தேர்தல் ஆணையம் மற்றும் மோடி அரசை கடுமையாக தாக்கி பேசினார். 

    கொல்கத்தாவில் அமித்ஷாவின் சாலை பேரணி நிகழ்ச்சியில் ஏற்பட்ட வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை பிரதமர் நரேந்திர மோடி கொடுக்க வேண்டும். 

    ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டற்கு காரணம் திரிணாமுல் காங்கிரஸ் எனக் கூறும் பிரதமர் மோடி, அதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவரை நான் சிறையில் தள்ளுவேன். எதற்கும் நான் பயப்பட மாட்டேன் என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்.
    காடையாம்பட்டி பகுதியில் நேற்று இரவு இடி மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது கோவில் கோபுரத்தின் மீது இடி தாக்கியதில் சிலைகள் சேதம் அடைந்தன.
    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அருகே  ராக்கிபட்டி காலனி உள்ளது. இந்த பகுதியில்  300-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதன் மத்தியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பெரியாண்டிச்சியம்மன் கோவில் கட்டப்பட்டு கும்பா பிஷேகம் நடைபெற்றது. கோவிலுக்கு பூசாரி ராஜா தினமும் பூஜை செய்து வருகிறார். 

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு காடையாம்பட்டி பகுதியில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது கோவில் கோபுரத்தின் மீது இடி தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த சிலைகள் சேதம் அடைந்தன. தகவல் அறிந்த வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர். கோவில் மீது இடி தாக்கி சிலை சேதம் அடைந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. 

    இதே போல் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ன நிலை நிலவி வருகிறது. இதனால் சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக செல்வதால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் கூட்டடம் அலை மோதுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை பாதையில் ஆங்காங்கே நீர் வீழ்ச்சி தோன்றியுள்ளது. 

    இந்த நீர் வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் சிலர் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
    ×