கமலக்கண்ணி அம்மன் கோவிலில் சிலை உடைப்பு செஞ்சி கோட்டை அலுவலகத்தில் பொது மக்கள் முற்றுகை

மர்ம நபர்கள் அந்த கோவிலில் உள்ள சிலையின் கை மற்றும் கால்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.யாரோ மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவோ நேற்று அதிகாலையோ கோட்டையில் உள்ள கமலக்கண்ணி அம்மன் சிலையை சேதப்படுத்தி உள்ளனர்.
பொதுமக்கள் முற்றுகையிட்டதை படத்தில் காணலாம்.
பொதுமக்கள் முற்றுகையிட்டதை படத்தில் காணலாம்.
Published on

செஞ்சி பிரசித்தி பெற்ற ராஜகிரி மற்றும் கிருஷ்ணகிரி கோட்டைகள் உள்ளன. ராஜகிரி கோட்டையின் மேல் பகுதியில் பிரசித்தி பெற்ற கமலக்கண்ணி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் கமலக்கண்ணி அம்மன் சிலை உள்ளது. நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அந்த கோவிலில் உள்ள சிலையின் கை மற்றும் கால்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.வழக்கம் போல் பூஜைக்கு சென்ற பூசாரி ராமச்சந்திரன் இதனை பார்த்து கோட்டை அலுவலருக்கும் அறங்காவலர் அரங்க ஏழுமலைக்கும் தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த செஞ்சி பீரங்கி மேடு பகுதி மக்கள் செஞ்சி கோட்டைக்கு திரண்டனர். அவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து செஞ்சி கோட்டை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.மேலும் இது குறித்து அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் செஞ்சி கோட்டை அலுவலர் நவீந்திரா ரெட்டி ஆகியோர் செஞ்சி போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில் யாரோ மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவோ நேற்று அதிகாலையோ கோட்டையில் உள்ள கமலக்கண்ணி அம்மன் சிலையை சேதப்படுத்தி உள்ளனர். எனவே அவர்களை கண்டுபிடித்து இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து செஞ்சி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். கோட்டை கோவிலில் உள்ள சிலை உடைக்கப்பட்டது இப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com