search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மம்தா"

    • பா.ஜனதா 200 இடத்தில் கூட வெற்றி பெறாது.
    • பிரதமர் மோடியின் உத்தரவாதம் தேர்தல் பொய்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஜால்பைகுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

    பா.ஜனதா 200 இடத்தில் கூட வெற்றி பெறாது. வடக்கு பெங்காலுக்கு அவர்கள் செய்தது என்ன?. பிரதமர் மோடியின் உத்தரவாதங்களுக்கு இரையாகிவிடாதீர்கள். அதெல்லாம் ஒன்றுமே இல்லை. தேர்தல் பொய். அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட நாட்டின் அரசமைப்பை பா.ஜனதா அழித்து விட்டது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற முழக்கத்தோடு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பா.ஜனதா 200 இடங்களில் கூட வெற்றி பெறாது எனக் கூறி வருகின்றனர்.

    அதேவேளையில் தேர்தல் கருத்துக் கணிப்பில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது.

    • லஞ்சம், ஊழலுக்கு எதிரான புகார்களை பொதுமக்கள் அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.
    • மாநில அரசின் நிர்வாகத்திலும், உரிமையிலும் தேவையில்லாமல் தலையிடும் செயலாகும்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்கத்தில் ஊழல் ஒழிப்புப் பிரிவு ஒன்றை கவர்னர் சி.வி.ஆனந்த் போஸ் தொடங்கி உள்ளார். இதற்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊழல் ஒழிப்புப் பிரிவு அமைக்கப்பட்டது. இதில் லஞ்சம், ஊழலுக்கு எதிரான புகார்களை பொதுமக்கள் அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    ஊழல் ஒழிப்புப் பிரிவு என்று ஒன்றை கவர்னர் உருவாக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது கவர்னர் மாளிகையின் வேலையல்ல. நாங்கள் கவர்னர் மீது மரியாதை வைத்துள்ளோம். அதே நேரத்தில் அவர் தன்னிச்சையாக ஒரு பிரிவை உருவாக்கி உள்ளார். இது மாநில அரசின் நிர்வாகத்திலும், உரிமையிலும் தேவையில்லாமல் தலையிடும் செயலாகும்.

    கவர்னர் என்ற முகமூடியை அணிந்துகொண்டு பா.ஜ.க.வின் உத்தரவுகளுக்கு இணங்க செயல்படுவதை ஏற்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தில் கவர்னருக்கான பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

    மேலும் தனது சொந்த மாநிலமான கேரளத்தில் இருந்து ஒருவரை மேற்கு வங்கத்தில் உள்ள பல்கலைக் கழக துணைவேந்தராக கவர்னர் ஆனந்த போஸ் நியமித்துள்ளார்.

    அவருக்கு கல்வித் துறையில் எந்த அனுபவமும் இல்லை. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

    • பெட்டியின் மேல் பிரதமர் மோடி, நம்பர் 7, லோக் கல்யாண்மார்க் என்ற முகவரி பொறிக்கப்பட்டு இருந்தது.
    • பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டு மம்தா பானர்ஜி 3 வகையான மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார்.

    கொல்கத்தா:

    அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும் பிரதமர் மோடியும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் தனிப்பட்ட முறையில் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள்.

    அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் வரும்போது எல்லாம் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசுவதும், அறிக்கை வெளியிடுவதும் உண்டு. என்றாலும் அவை அவர்களது நட்பை ஒருபோதும் சீர் குலைப்பது இல்லை.

    நட்பை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் விளையும் அதிக ருசிக்கொண்ட மாம்பழ வகைகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைப்பது வழக்கமாகும். கடந்த பல ஆண்டுகளாக மாம்பழம் அனுப்புவதை மம்தா பானர்ஜி மறக்காமல் செய்து வருகிறார்.

    அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று அவர் பிரதமர் மோடிக்கு மாம்பழம் பரிசு அனுப்பி வைத்தார். 4 கிலோ எடை கொண்ட பெட்டியில் அழகாக அலங்கரிக்கப்பட்டு அந்த மாம்பழங்கள் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    அந்த பெட்டியின் மேல் பிரதமர் மோடி, நம்பர் 7, லோக் கல்யாண்மார்க் என்ற முகவரி பொறிக்கப்பட்டு இருந்தது. அனுப்புபவர் முகவரியில் மம்தா பானர்ஜி , மேற்கு வங்காள முதல்-மந்திரி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டு மம்தா பானர்ஜி 3 வகையான மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார். கிம்சாகர், பஸ்லி, லட்சுமண் பாக் ஆகிய 3 வகை மாம்பழங்கள் இந்த ஆண்டு பரிசு பெட்டியில் இடம் பெற்றுள்ளன.

    பிரதமர் மோடிக்கு அனுப்பியது போல ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோருக்கும் மம்தா பானர்ஜி இந்த ஆண்டு மாம்பழ பெட்டிகளை பரிசாக அனுப்பி உள்ளார். ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது பற்றி கடுமையாக விமர்சனம் செய்த மம்தா பானர்ஜி அடுத்த நாளே மாம்பழம் பரிசு அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மம்தா பானர்ஜி போல வங்கதேச பிரதமர் ஷேக் ஹஜினாவும் ஆண்டு தோறும் இந்திய தலைவர்களுக்கு மாம்பழம் அனுப்புவதை வழக்கத்தில் வைத்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களுக்கு 2,600 கிலோ மாம்பழங்கள் அனுப்பி இருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடலில் குறிப்பிடும்படியாக சுவாச பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய ஒரு வகையை சேர்ந்தது.
    • ஒரு குழந்தைக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்துவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் பரவி வரும் அடினோவைரசின் பாதிப்புக்கு குழந்தைகள் அதிக இலக்காகின்றனர். அவர்களில் பலர் உயிரிழந்து உள்ளனர்.

    இதனை தொடர்ந்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறும்போது,

    குழந்தைகள் யாரும் பயப்பட வேண்டாம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார். அடினோவைரசின் பாதிப்புக்கு 19 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என கூறிய அவர், அவர்களில் 13 பேர் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர், ஒரு குழந்தைக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்துவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அந்த குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு எதுவும் காணப்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டியது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்த அடினோவைரசானது, லேசானது முதல் கடுமையான பாதிப்புகளை உடலில், குறிப்பிடும்படியாக சுவாச பகுதியில் ஏற்படுத்த கூடிய ஒரு வகையை சேர்ந்தது. அது எந்த வயது குழந்தையையும் பாதிக்க கூடியது. புதிதாக பிறக்கும் மற்றும் இளம் குழந்தைகளிடையே அது பரவலாக காணப்படும்.

    கடுமையான பாதிப்பின்போது அறிகுறிகளாக, பொதுவான ஜலதோஷம் போன்ற பாதிப்பையும், காய்ச்சல், வறண்ட தொண்டை, நுரையீரல் பாதிப்பு, நிம்மோனியா, கண்கள் பிங்க் வண்ணத்தில் நிறம் மாறுதல், வாந்தி, குமட்டல், வயிற்று போக்கு உள்ளிட்ட வயிறு மற்றும் குடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட கூடும் என தெரிவித்து உள்ளது.

    • காமன்வெல்த் விளையாட்டில் அவர் பங்கேற்றது யாருக்கும் தெரியாது.
    • அரசின் ஆதரவு தேவை என அச்சிந்தா சகோதரர் கோரிக்கை.

    காமன்வெல்த் போட்டி பளு தூக்குதலில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார். ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 313 கிலோ எடையை தூக்கிய அவர், இந்தியாவிற்கு 3வது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

    இந்நிலையில் அச்சிந்தா ஷூலி இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று மூவர்ணக் கொடியை உயரப் பறக்க வைத்தார், ஒரே முயற்சியில் முதலிடத்தை பிடித்த நீங்கள் தான் வரலாறு படைத்த சாம்பியன் என்றும் கூறியுள்ளார். 


    இதேபோல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காமன்வெல்த் விளையாட்டுகளில் திறமை மிகுந்தக அச்சிந்தா தங்கப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, அமைதியான இயல்பு மற்றும் மனஉறுதிக்கு அவர் பெயர் பெற்றவர், தனது சிறப்பு சாதனைக்காக அவர் மிகவும் கடுமையாக உழைத்தார், அவரது எதிர்கால முயற்சிகளுக்காக எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    மேலும் காமன்வெல்த் விளையாட்டுகளுக்காக நமது அணி இங்கிலாந்து புறப்படுவதற்கு முன் அச்சிந்தாவுடன் நான் கலந்துரையாடினேன். அவரது தாய் மற்றும் சகோதரரின் ஆதரவு பெற்றது குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று கூறியுள்ள பிரதமர், இது குறித்து புகைப்படத்தையும் டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். 

    மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தை சேர்ந்த அச்சிந்தா ஷூலிக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் வாழ்த்துக் கூறியுள்ளார். அவரது சாதனை, எண்ணற்ற நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும், உண்மையிலேயே நாம் அனைவருக்கும் பெருமையான தருணம் இது என்றும் தமது டுவிட்டர் பக்கத்தில் மம்தா தெரிவித்துள்ளார். 


    இதனிடையே அச்சிந்தாவின் சொந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.



    தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் காமன்வெல் விளையாட்டில் பங்கேற்றது யாருக்கும் தெரியாது, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் கூட அவரை அறியவில்லை என்றும், எங்களுக்கு அரசு ஆதரவு தேவை என்றும் அச்சிந்தா சகோதரர் அலோக் ஷூலி குறிப்பிட்டுள்ளார்.

    ×