search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kotagiri"

    • சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள்.
    • அதிக பட்சமாக அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு லாரிக்கு 9000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.

    கோத்தகிரி,

    போக்குவரத்து போலீசார் அடிக்கடி கோத்தகிரி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள்.

    அந்த வகையில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் கோத்தகிரி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா? என சோதனை செய்து விசாரித்தனர். உரிய ஆவணங்கள் இல்லாதவர்களிடம் அபராதமும் வசூலித்தனர்.

    அதன்படி, உரிய ஆவணம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றுதல், தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிகளை மீறிய 44 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 14,800 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    அதிக பட்சமாக அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு லாரிக்கு 9000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.

    150 ஆண்டுகள் பழமையான புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது.

    நீலகிரி கோத்தகிரி கோத்தகிரி பஸ் நிலையம் அருகே 150 ஆண்டுகள் பழமையான புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு அருகே 2 தனியார் பள்ளிகள் மற்றும் ஏராளமான குடியிருப்புக்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இங்குள்ள பள்ளி மற்றும் குடியிருப்புக்கு செல்லும் கான்கிரீட் நடைபாதையில் சிறுத்தை ஒன்று மெதுவாக நடந்து சென்றது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அங்கிருந்த ஒருவர் சற்று தொலைவில் இருந்து அந்த சிறுத்தையை தனது செல்போனில் படம் பிடித்தார். இது குறித்த தகவல் பரவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும் பள்ளிகள் மற்றும் குடியிருப்புக்கள் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் சிறுத்தை உலா வந்ததால், அவ்வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களை சிறுத்தை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சிறுத்தையின் நடமாட்டத்தைக் வனத்துறையினர் கண்காணித்து சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவோ அல்லது கூண்டு வைத்துப் பிடிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தொடர்ந்து நடமாடி வருகின்றன.
    • வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நீலகிரி கோத்தகிரி கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் உள்ள பெரியார் நகர் கிராமத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதி வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியாக உள்ளதால் இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலையில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அங்குள்ள சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் கரடிகள் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தொடர்ந்து நடமாடி வருகின்றன. இந்த காட்சிகள் அங்குள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதே பகுதியில் கடந்த மாதம் 2 சிறுத்தைகள், 2 கருஞ் சிறுத்தைகள் மற்றும் 2 கரடிகள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் அச்சமடைந்ததுடன், சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கட்டிடங்கள் பழுதடைந்து அடிக்கடி இடிந்து விழுவது வாடிக்கையாகி வருகிறது.
    • நீலகிரி மாவட்டத்திலும் பழுதடைந்த கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    கோத்தகிரி

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் பழுதடைந்து அடிக்கடி இடிந்து விழுவது வாடிக்கையாகி வருகிறது.

    கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் கட்டிடம் இடிந்து விழுந்து பள்ளிக்குழந்தைகள் காயம் அடைந்தனர்.இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள பழுதடைந்த பழைய கட்டிடங்களை ஆய்வு செய்து இடிக்க உத்தரவிடப்பட்டது.

    அதன்படி நீலகிரி மாவட்டத்திலும் பழுதடைந்த கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நீலகிரி கலெக்டரின் உத்தரவின் பேரில் கோத்தகிரியில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.

    • விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை.
    • அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது சடங்காக பின்பற்றுவது வழக்கம்.

    அரவேணு

    கோத்தகிரி உள்ள கோவில்களில் நவராத்திரியின் முக்கிய விழாவான விஜயதசமியை முன்னிட்டு கோவில்களிலும், பள்ளிகளிலும் நேற்று வித்யாரம்பம் நடைபெற்றது. விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது வித்யாரம்பம் எனப்படுகிறது.

    எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமாக குழந்தைகள் கற்கும்போது முதலில் அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது சடங்காக பின்பற்றுவது வழக்கம். குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கும் ஞானத்தின் தேடல் என்ற நிகழ்வானது இந்தியாவில் ஒரு பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது.

    • கோத்தகிரி போக்குவரத்து ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • 54 பேர் மீது போக்குவரத்து விதிகளை மீறுதலின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கோத்தகிரி

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோத்தகிரி போக்குவரத்து ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டியவர்கள், லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்தவர்கள்,உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் என 54 பேர் மீது போக்குவரத்து விதிகளை மீறுதலின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இவர்களிடமிருந்து அபராதமாக ரூ.57,500 வசூலிக்கப்பட்டது.

    • மாவட்டம் முழுவதும் 70 வாட்டர் ஏ.டி.எம்கள் திறக்கப்பட்டன.
    • வாட்டர் ஏ.டி.எம்.களில் தண்ணீர் பிடிக்கும் போது, பூச்சிகள் உள்ளிட்டவை சேர்ந்து வருகின்றன.

    கோத்தகிரி

    மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை ஒழிக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு அப்போதைய கலெக்டராக இருந்த ஜெ. இன்னசென்ட் திவ்யா முயற்சியின் பேரில் மாவட்டம் முழுவதும் 70 வாட்டர் ஏ.டி.எம்கள் திறக்கப்பட்டன.

    குறிப்பாக கோத்தகிரி பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் இந்த வாட்டர் ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை முடித்துவிட்டு கோத்தகிரி மார்க்கமாக பயணம் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். இந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிக அளவு பயன்பட்டு வந்த இந்த வாட்டர் ஏ.டி.எம்.களில் உள்ள குடிநீர் அடிக்கடி சுத்தம் செய்வதில்லை.

    தண்ணீரை பாட்டில்களில் பிடிக்கும் போது சிறிய பூச்சிகள் அதனுள் இருந்து வருகிறது.

    இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூறும்போது, வாட்டர் ஏ.டி.எம்.களில் தண்ணீர் பிடிக்கும் போது, பூச்சிகள் உள்ளிட்டவை சேர்ந்து வருகின்றன. மேலும் கோத்தகிரி டானிங்டன் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் உள்ள வாட்டர் ஏ.டி.எம்.மின் பின் பகுதி சிறுநீர் கழிக்கும் இடமாகவே மாறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாட்டர் ஏ.டி.எம்.களை பார்வையிட்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றனர்.

    • காம்பாய் கடை காளவாய் பகுதியில் சுமார் 1000 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
    • கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 50 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

    கோத்தகிரி

    கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட காம்பாய் கடை காளவாய் பகுதியில் சுமார் 1000 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் தேவைக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 50 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக பெய்த மழையின் காரணமாக அந்த சிமெண்ட் சாலையின் அருகில் இருக்கும் நீரோடையில் குப்பைகள் அடைந்து அந்த நீர் சிமெண்ட் சாலையின் மேல் செல்கிறது.


    இதனால் அந்த சிமெண்ட் சாலை பழுதடைவதுடன் பொதுமக்களும் அந்த சாலையை பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் அந்த சிமெண்ட் சாலையின் அருகில் இருக்கும் நீரோடையை தூர் வாரி அந்த சாலையை காத்திட வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் குஞ்சப்பனை சோதனைச்சாவடி அருகே ரோந்து சென்றனர்.
    • அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் சோதனை செய்தனர்.

    கோத்தகிரி 

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி சிலர் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் குஞ்சப்பனை சோதனைச்சாவடி அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் சோதனை செய்தனர்.

    அவர் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதற்காக பையில் கொண்டு சென்றது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கவுரி சங்கர் (வயது 40) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 19 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுண்டட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
    • சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள கோடநாடு காட்சி முனையும் கண்டு களிக்கின்றனர்.

    அரவேணு

    கோத்தகிரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுண்டட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

    தற்போது விடுமுறை நாள் என்பதால் இயற்கை எழில் சூழ மிதமான காலம் வெப்பநிலை கொண்டு இருப்பதாலும் ஞாயிறு விடுமுறை நாள் என்பதாலும் தற்போது இப்பகுதியில் வெகுவாக சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களித்து ரசித்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளதால் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலா ்தலங்களையும் இயற்கைகளையும் கண்டு ரசிக்கும் காட்சியை காண முடிகிறது. சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள கோடநாடு காட்சி முனையும் கண்டு களிக்கின்றனர்.

    • சாலையோர புதரில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென வழிமறித்து தாக்கியது.
    • இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கெங்கரை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி(31). இவர் சம்பவத்தன்று கோவில்மட்டம் பகுதிக்கு மொபட்டில் சென்றார். பின்னர் அங்கு உறவினை சந்தித்து பேசி விட்டு மீண்டும், வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    ஒன்னட்டி-கோவில்மட்டம் செல்லும் சாலையில் வந்த போது, அங்கு சாலையோர புதரில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென வழிமறித்து தாக்கியது.

    இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • உள்ளூர் பொது மக்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக சிறுவர் விளையாட்டுப் பூங்கா விளங்கி வருகிறது.
    • பூங்கா ஊழியர்கள் பூங்காவை பராமரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர்

    கோத்தகிரி

    கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் உள்ள நேரு பூங்கா முக்கியமான சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் அழகிய புல் தரைகள் ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியினர் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனார் அம்மனூர் கோவில் ஆகியவை அமைந்துள்ளன.

    வருடந்தோறும் கோடை விழாவையொட்டி மே மாதத்தில் தோட்டக்கலை துறை சார்பில் இரண்டு நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். காய்கறி கண்காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வது வழக்கம்.

    இது மட்டுமின்றி உள்ளூர் பொது மக்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக சிறுவர் விளையாட்டுப் பூங்கா விளங்கி வருகிறது. சமன்படுத்தும் பணி கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்ததால் பூங்காவில் உள்ள புல் தரைகளில் புற்கள் அதிக அளவு வளர்ந்து இருந்தன. மேலும் பூங்காவில் உள்ள மலர்செடிகளில் பூத்திருந்த மலர்கள் அழுகத் தொடங்கின.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாமல், இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. எனவே பூங்கா ஊழியர்கள் பூங்காவை பராமரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர். புல் தரைகளில் அதிகப்படியாக வளர்ந்த புற்களை எந்திரம் மூலம் வெட்டி சமப்படுத்தும் பணி, அழுகிய மலர் செடிகளை அகற்றி புதிய நாற்றுக்கள் நடும் பணி, களைச்செடிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ×