என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grass cutting and maintenance work at Nehru Park"

    • உள்ளூர் பொது மக்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக சிறுவர் விளையாட்டுப் பூங்கா விளங்கி வருகிறது.
    • பூங்கா ஊழியர்கள் பூங்காவை பராமரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர்

    கோத்தகிரி

    கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் உள்ள நேரு பூங்கா முக்கியமான சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் அழகிய புல் தரைகள் ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியினர் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனார் அம்மனூர் கோவில் ஆகியவை அமைந்துள்ளன.

    வருடந்தோறும் கோடை விழாவையொட்டி மே மாதத்தில் தோட்டக்கலை துறை சார்பில் இரண்டு நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். காய்கறி கண்காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வது வழக்கம்.

    இது மட்டுமின்றி உள்ளூர் பொது மக்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக சிறுவர் விளையாட்டுப் பூங்கா விளங்கி வருகிறது. சமன்படுத்தும் பணி கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்ததால் பூங்காவில் உள்ள புல் தரைகளில் புற்கள் அதிக அளவு வளர்ந்து இருந்தன. மேலும் பூங்காவில் உள்ள மலர்செடிகளில் பூத்திருந்த மலர்கள் அழுகத் தொடங்கின.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாமல், இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. எனவே பூங்கா ஊழியர்கள் பூங்காவை பராமரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர். புல் தரைகளில் அதிகப்படியாக வளர்ந்த புற்களை எந்திரம் மூலம் வெட்டி சமப்படுத்தும் பணி, அழுகிய மலர் செடிகளை அகற்றி புதிய நாற்றுக்கள் நடும் பணி, களைச்செடிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ×