கோத்தகிரியில் மது விற்றவர் கைது

கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் குஞ்சப்பனை சோதனைச்சாவடி அருகே ரோந்து சென்றனர்.அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் சோதனை செய்தனர்.
கோத்தகிரியில் மது விற்றவர் கைது
Published on

கோத்தகிரி 

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி சிலர் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் குஞ்சப்பனை சோதனைச்சாவடி அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் சோதனை செய்தனர்.

அவர் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதற்காக பையில் கொண்டு சென்றது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கவுரி சங்கர் (வயது 40) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 19 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com