search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelry"

    • தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் 42 கிராம் தங்க நகைகளை ஒப்படைத்தார்.
    • விலை மதிக்க முடியாத பொருட்கள் கிடந்தாலும் போலீசிடம்ன ஒப்படைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சிராஜ்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 45).

    இவர் தான் அடகு வைத்திருந்த 42 கிராம் (5 பவுன் ) நகைகளை மீட்டு பாக்கெட்டில் வைத்தார்.

    பின்னர் தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு பாக்கெட்டை பார்த்தபோது நகைகளை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தார்.

    அப்போது தஞ்சை மானம்புச்சாவடியை சேர்ந்த மெக்கானிக் காதர் (45) என்பவர் கீழே கிடந்த நகையை எடுத்தார்.

    இது யாருடைய நகை என விசாரித்தார்.

    அந்த நேரத்தில் அங்கு வந்த பிரபாகர் இது என்னுடைய நகை எனக் கூறினார்.

    இருந்தாலும் நான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விடுகிறேன்.

    நீங்கள் உரிய ஆவணங்களை காண்பித்து நகைகளைப் பெற்றுச் செல்லுங்கள் என காதர் கூறினார்.

    அதன் பேரில் காதர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் 42 கிராம் தங்க நகைகளை ஒப்படைத்தார்.

    பிரபாகர் உரிய ஆவணங்களை காண்பித்தார்.

    தொடர்ந்து காதர் முன்னிலையில் பிரபாகரிடம் போலீசார் 42 கிராம் தங்க நகைகளை ஒப்படைத்து கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தினர்.

    கீழே கிடந்த நகையை பத்திரமாக எடுத்து அதனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த மெக்கானிக் காதருக்கு சால்வை அணிவித்து போலீசார் பாராட்டினர்.

    இது குறித்து காதர் கூறும்போது, அடுத்தவர்கள் பொருட்களுக்கு நாம் ஆசைப்படக்கூடாது.

    கீழே நகை, பணம் என எந்த விலை மதிக்க முடியாத பொருட்கள் கிடந்தாலும் உடனடியாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    நேர்மையாக இருக்க வேண்டும்.

    அப்படி இருந்தாலே மனதிற்கு மன நிம்மதிதான் என்றார்.

    காத்ரின் இந்த மனித நேயமிக்க செயலை போலீசார் மட்டுமின்றி அனைவரும் மனதார பாராட்டினர்.

    • பெண்ணின் தலையில் சுத்தியலால் கடுமையாக தாக்குகியுள்ளார்.
    • அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட ஆறுமுக நாடார் தெருவை சேர்ந்தவர் ஜாஸ்மின் பேகம். இவருடைய கணவர் ஷாகுல் ஹமீது. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு 3 குழந்தைகள் இவர்கள் மூன்று பேரும் திருவாரூரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக சென்று விட்டு யாஸ்மின் பேகம் வீடு திரும்பியுள்ளார்.

    வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்ற போது 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உள்ளே மறைந்து இருந்து ஜாஸ்மின் பேகம் உள்ளே நுழைந்ததும் அவரின் தலையில் சுத்தியலால் கடுமையாக தாக்குகியுள்ளார்.

    இதில் மயக்கம் அடைந்து ஜாஸ்மின் பேகம் சம்பவ இடத்தில் கீழே விழுந்துள்ளார்.

    அப்போது அவர் கழுத்து மற்றும் காலில் அணிந்திருந்த 7 பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து அவர் தப்பி ஓடியுள்ளார்.

    ஜாஸ்மின் பேகத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • வீட்டுக்குள் மர்ம நபர்கள் இருப்பதை அறிந்து கத்தி கூச்சலிட்டார்.
    • பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் சாம் மரியலியானி.

    இவரது மனைவி அனிதா தனசீலி (வயது 35 ). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் கதவை பூட்டாமல் அருகே உள்ள வீட்டுக்கு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட 2 பேர் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகைகளை திருடினர்.

    அப்போது வந்த அனிதா தனசீலி வீட்டுக்குள் மர்ம நபர்கள் இருப்பதை அறிந்து கத்தி கூச்சலிட்டார்.

    உடனடியாக அவர்கள் இரண்டு பேரும் பின் வாசல் வழியாக தப்பி ஓட முயன்றனர்.

    உடனடியாக பொதுமக்கள் திரண்டு விரட்டி சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர் .

    தர்ம அடி கொடுத்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்தி விசாரணையில் சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தை சேர்ந்த வேடப்பன் (வயது 55), பட்டுக்கோட்டை கீழப்பாளையத்தை சேர்ந்த விஜய் (34) என்பது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து திருடி தப்பி ஓட முயன்ற வேடப்பன், விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காயம் அடைந்த வேடப்பனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பீரோவில் இருந்த 5 கிராம் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடு போனது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள களிமேடு கிராமத்தை சேர்ந்தவர் தன்மானன். இவரது மனைவி தெய்வ கன்னி (வயது 40).

    இந்த நிலையில் வெளியூர் செல்வதற்காக தெய்வகன்னி தனது மகன் விக்னேஸ்வரன், பாட்டி ஆகியோருடன் தஞ்சை ரயில் நிலையத்திற்கு சென்றார்.

    பின்னர் அவர்க ளை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு விக்னேஸ்வரன் மட்டும் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 முக்கால் கிராம் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகிய வற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது .

    உடனடியாக விக்னேஸ்வ ரன் தனது தாய் தெய்வ கன்னிக்கு தகவல் தெரி வித்தார்.

    அதன் பேரில் அவரும் உடனே வீடு திரும்பினார்.

    இது குறித்த அவர் கள்ளப் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயி வீட்டில் 20 பவுன் நகை களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    • வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சிறுகன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 47), விவசாயி. இவரது மனைவி தேவகி (40). இந்தநிலையில் கணவன்-மனைவி 2 பேரும் நேற்று காலை வழக்கம்போல் தங்களது வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றனர். பின்னர் வயலில் வேலையை முடித்து விட்டு மதியம் 2 மணியளவில் வீட்டிற்கு சென்றனர்.

    இதையடுத்து வீட்டின் அருகே உள்ள உறவினர் இல்ல திருமண விழாவுக்கு செல்வதற்காக தேவகி பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுக்க முயன்றார். அப்போது அங்கு வைத்திருந்த 20 பவுன் நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து தேவகி அளித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெண்கள் அணியும் ஆபரபணங்களில் வளையல்களுக்கு முக்கியபங்கு உண்டு.
    • வளையல்கள் கைகளில் இறுக்கமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இந்திய கலாசாரத்தில், பெண்கள் அணியும் ஆபரபணங்களில் வளையல்களுக்கு முக்கியபங்கு உண்டு. கண்ணாடி, செம்பு, வெள்ளி, தங்கம். வைரம் என்று பல்வேறு உலோகங்களால் தயாரிக்கப்ட்ட வளையல்கள் பண்டைய காலம் முதல் பழக்கத்தில் இருந்து வருகின்றன.

    பாதுகாப்பு மற்றும் பராமரிப்பதில் இருக்கும் சிரமம் காரணமாக, கண்ணாடி வளையல்களின் உபயோகம் குறைந்து வருகிறது. நவீன காலத்திற்கு ஏற்றவாறு ஸ்டெர்லிங் சில்வர், ரோஸ் கோல்ட் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் வளையல்களை தற்போது பலரும் அணிகிறார்கள். இத்தகைய உலோகங்களால் ஆன வளையல்களை பொலிவு மங்காமல் பராமரிப்பது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

    அனைத்து உலோக வளையல்களையும் மொத்தமாக ஒரே பெட்டியில் பாதுகாத்து வைப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு உலோகத்துக்கும் ஒரு தனிப்பட்ட பண்பு உண்டு. அவை ஒன்றோடொன்று சேரும்போது ரசாயன மாற்றங்கள் ஏற்படலாம். இதனால் வளையல்களின் பொலிவு குறையும்.

    எனவே எப்போதும் வளையல்களை அவற்றின் வகைக்கேற்ப பிரித்து பாதுகாத்து வைப்பது நல்லது. உலோகங்களால் ஆன ஆபரணங்கள் காற்றில் இருக்கும் ஆக்சிஜனுடன் சேர்ந்து ரசாயன மாற்றத்துக்கு (ஆக்சிடைஸ்டு) உள்ளாகும்.

    இவ்வாறு எளிதாக ரசாயன மாற்றத்திற்கு உள்ளாகும் நகைகள் மலிவான விலைக்கு கிடைக்கும். அவற்றை தவிர்த்து தரமான உலோகங்களால் தயாரிக்கப்பட்ட வளையல்களை வாங்குவது நல்லது.

    பல்வேறு உலோகத்தால் ஆன வளையல்களை அவற்றுக்காக கொடுக்கப்பட்ட பிரத்தியேக பெட்டிகளில் வைப்பது நல்லது. காற்று புகாதவாறு இறுக்கமான பெட்டி அல்லது அறையில் அவற்றை பத்திரப்படுத்தி வைத்தால் ஆக்சிடைஸ்டு ஆவதை தவிர்க்கலாம்.

    செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்ட வளையல்களை அவ்வப்போது பருத்தி துணியைக் கொண்டு துடைத்து பாலிஷ் செய்யலாம். செம்பு வளையல்களை எப்போதும் கைகளில் அணிந்து இருந்தால் சருமத்துடன் ஏற்படும் உராய்வு காரணமாக பொலிவு குறையாமல் இருக்கும். வியர்வைபடும்போது செம்பு நிறம் மாறும் தன்மை கொண்டது. எனவே செம்பு வளையல்கள் கைகளில் இறுக்கமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    ஸ்டெர்லிங் சில்வர் வளையல்கள் நேரடியாக சூரிய வெளிச்சத்தில் படும்போது அவற்றின் பொலிவு குறையும். எனவே, இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு இவ்வகை வளையல்களை அணிந்து செல்லலாம்.

    குளிப்பது, பாத்திரம் துலக்குவது. வீட்டை சுத்தம் செய்வது ஆகிய வேலைகளை செய்யும்போது வளையல்களை கழற்றி வைக்க வேண்டும். தண்ணீர் அடிக்கடி படும்போது வளையல்கள் அதன் பொலிவை இழக்கக்கூடும்.

    வளையல்களை பாதுகாத்து வைக்கும் இடத்தில் ஈரப்பதம் அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்ட சாக்பீஸ், சிலிகா ஜெல் ஆகியவற்றை வளையல் பெட்டிகளில் வைக்கலாம். வளையலில் கிளியர் நெயில் பாலிஷ் கோட்டிங் போட்டும் வைக்கலாம்.

    • இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் துபாயிலிருந்து தங்கம் கடத்தியது தெரியவந்தது.
    • கடத்தல்காரர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அடிக்கடி தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க ஆந்திர மாநில சங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் விஜயவாடா சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையிலிருந்து விஜயவாடா நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 4.3 கிலோ எடையுள்ள தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    கடத்தல் காரர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர்கள் இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் துபாயிலிருந்து தங்கம் கடத்தியது தெரியவந்தது.

    மேலும் கடத்தலை மறைக்க தங்க கட்டிகள் மீது இருந்த அடையாளங்களை அழித்து உள்ளனர்.

    சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 6.8 கிலோ எடையுள்ள தங்க நகைகள், குவைத், கத்தார் ரியால், ஓமன் ரியாஸ் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் ரூ.1.5 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தல்காரர்களை கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டில் புகுந்த மர்மநபர் பெண் அணிந்திருந்த 4 கிராம் நகையை திருடினார்.
    • மேலும், செல்போனை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார்.

    பேராவூரணி:

    பேராவூரணி ரயிலடி எதிரில் உள்ள வர்த்த சங்க கட்டிடத்தின் அருகில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் விக்னேஷ்.

    ஆட்டோ டிரைவர் .

    இவரது மனைவி பவித்ரா (வயது 25). இவர் நேற்று இரவு தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டில் புகுந்த மர்மநபர் பவித்ரா கழுத்தில் அணிந்திருந்த 4 கிராம் கொண்ட தாலி கயிறு மற்றும் இரண்டு வயது குழந்தை சுகன்யாஸ்ரீ அணிந்திருந்த வெள்ளி கொலுசு, அருணாகயிறு ஆகியவற்றை அறுத்துக் கொண்டும், மாமியார் இந்திராணி (53) வைத்திருந்த செல்போனை எடுத்து கொண்டும் தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து பேராவூரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பபேரில் ட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்விராஜ் சௌகான், பேராவூரணி இன்ஸ்பெக்டர் காவேரி சங்கர், சப்- இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார், வாகீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • நரிக்குடியில் ஆசிரியை ரோட்டில் தவற விட்ட 2½ பவுன் நகையை மீட்டுக்கொடுத்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
    • தமிழாசிரியை சசிகலா, தலைமையாசிரியர் சோனை முத்து ஆகியோர் பாராட்டினர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் சசிகலா. இவர் கமுதி அருகேயுள்ள மறைக் குளம் கிராமத்தை சேர்ந்த வர். இந்த நிலையில் நேற்று காலை சசிகலா பள்ளிக்கு செல்வதற்காக நரிக்குடி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது தனது கைப்பையில் உள்ள அவரது நகைகளை சரிபார்த்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் உலக்குடி பேருந்து வரவே அவசர அவசரமாக சசிகலா பஸ்சில் ஏறி பள்ளிக்கு சென்று விட்டார். அங்கு சென்று தனது கைப்பயை பார்த்தபோது அதில் இருந்த 2½ பவுன் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதனையடுத்து உடனடியாக நரிக்குடி பஸ் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் தேடிப்பார்த்தும் தனது செயின் கிடைக்காததால் நகை காணாமல் போனது குறித்து நரிக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

    இந்த நிலையில் நரிக்குடி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் நரிக்குடியை சேர்ந்த சரவண சாஸ்தா மகள் மோகனாஸ்ரீ, பள்ளப் பட்டியை சேர்ந்த விஜயன் மகள் சபர்ணா, மானூர் இந்திரா காலனியை சேர்ந்த சரவணக்குமார் மகள் தேவிகா ஆகியோர் நேற்று காலை பள்ளிக்கு செல்ல நரிக்குடி பஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது கீழே கிடந்த 2½ பவுன் தங்கச் செயினை எடுத்து அவர்கள் பள்ளிக்கு சென்று தலைமை யாசிரியர் சோணை முத்துவிடம் விவரத்தை கூறி நகைையை ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து அவர் நரிக்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். ேபாலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தியபோது ஆசிரியை சசிகலா பஸ் நிலையத்தில் தவற விட்ட 2½ பவுன் நகையை மாணவிகள் மீட்டு கொடுத்தது தெரியவந்தது.

    நகை கிடைத்தது குறித்து ஆசிரியை சசிகலாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நரிக்குடி போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர் தகுந்த அடையாளங்களை கூறி நகையை பெற்றுக் கொண்டார்.

    தொலைந்து போன தங்கசெயின் கிடைக்க காரணமாக இருந்த இளம்வயது மாணவிகளின் நேர்மையான செயலை கண்டு நரிக்குடி காவல் துறையினர் மற்றும் தமிழாசிரியை சசிகலா, தலைமையாசிரியர் சோனை முத்து ஆகியோர் பாராட்டி னர்.

    • சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • 5 கிராம் நகை, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே மணப்படையூர் பகுதியில் மர்ம நபர் ஒருவர் ஜோதிடம் பார்ப்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்த நபர்களை ஏமாற்றி நகைகளை திருடி சென்றதாக வந்த புகாரை யடுத்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் ஆசிஷ்ராவத் உத்தரவுப்படி , கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்கா ணிப்பாளர் கீர்த்திவாசன் மேற்பா ர்வையில், கும்பகோணம் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன் தலைமையிலான போலீசார்கள் செல்வகுமார், பாலசுப்ரமணியம், நாடிமுத்து, ஜனார்த்தனன், செந்தில்குமார், ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கபட்டது.

    இந்த தனிப்படையினர் குற்ற செயல் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை யும், செல்போன் எண்களை யும் கண்காணித்து விசா ரணையில் ஈடுப்ப ட்டனர். விசாரணையில் கிருஷ்ண கிரி பகுதியை சேர்ந்த சக்தி வேல் ( வயது 23) என்பவர் திருடியது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து தனிப்படை போலீ சார்அவரிடம விசாரணை நடத்தில் அவரிடம் இருந்து 5 கிராம் நகை, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்தனர். பின்னர் சக்திவேல் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனர்.

    • மதுரையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.6 லட்சம் நகை-பணம் திருட்டு சம்பவம் நடந்தது.
    • மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை தனக்கன்குளம் பைரவர் நகர் 6-வது குறுக்கு தெரு திருவள்ளுவர் நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது45). இவர் குடும்பத்து டன் வெளியூர் சென்றிருந் தார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 11 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 500-ஐ கொள்ளை யடித்து சென்று விட்டனர்.

    வெளியூரில் இருந்து பாஸ்கரன் திரும்பி வந்து பார்த்தபோது நகை-பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து திருநகர் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்ற னர்.

    அண்ணா நகர் மஸ்தான் பட்டி மீனாட்சிபட்டியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டவர் ஒன்று உள்ளது. இந்த டவரில் 24 பேட்டரிகள் பொருத்தப் பட்டிருந்தன. இங்கு காவலாளியாக சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சந்திரன் (40) என்பவர் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் டவரில் பொருத்தப்பட்டிருந்த 24 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து சந்திரன் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
    • மதியம் வீட்டுக்கு சென்று பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    பல்லடம்,ஆக.3-

    பல்லடம் அருகே உள்ள பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது மனைவி அனிதா (வயது 57). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை இவர் பள்ளிக்கு சென்று விட்டார். மதியம் வீட்டுக்கு சென்று பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை திருடு போனது தெரிய வந்தது.

    இது குறித்து அனிதா கொடுத்த புகாரின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×