search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "haryana"

    அரியானா மாநிலம் சோனிபட் தொகுதியில் முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா போட்டியிடுகிறார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #LokSabhaElections2019 #BhupinderSinghHooda
    சண்டிகர்:

    பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி தொடங்கியது. மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    அரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 10 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 6-வது கட்டமாக மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், அரியானா மாநிலத்தின் சோனிபட் பாராளுமன்ற தொகுதியில் முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா போட்டியிட உள்ளார். மேலும், முன்னாள் சட்டசபை சபாநாயகர் குல்தீப் சர்மா கர்னால் தொகுதியிலும், முன்னாள் முதல் மந்திரி பஜன் லாலின் பேரனான பாவ்யா பிஷோனி ஹிசார் தொகுதியிலும் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #LokSabhaElections2019 #BhupinderSinghHooda
    சம்ஜோதா ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்த் 4 பேரை விடுதலை செய்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. #Samjhautablastcase
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் பானிபட் அருகில் கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதுதொடர்பான வழக்கு பஞ்ச்குலாவில் உள்ள என் ஐ ஏ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த சிறப்பு நீதிபதி, இந்த வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட சாமியார் அசீமானந்த், லோகேஷ் சர்மா, கமல் சவுகான் மற்றும் ராஜிந்தர் சவுத்ரி உள்ளிட்ட 4 பேரை விடுவித்து உத்தரவிட்டார். #Samjhautablastcase
    அரியானா மாநிலம், பரிதாபாத் நகரில் 595 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். #PMdedicatesESICmedicalcollege #sESIChospital
    சண்டிகர்:

    அரியானா மாநிலம், பரிதாபாத் நகரில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் 595 கோடி ரூபாய் செலவில் இ.எஸ்.ஐ. (தொழிலாளர் வைப்பு நிதி) மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டுள்ளது.

    அவசர சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கான தனிப்பிரிவுகள், அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கங்கள், ரத்த மறுசுழற்சி சிகிச்சை வசதிகள், ஸ்கேன், நோய் குறியியல் பரிசோதனை கூடம், ரத்த வங்கி, தீவிர சிகிச்சைக்கான தனிப்பிரிவு, டாக்டர்கள், நர்சுகளுக்கான குடியிருப்புகள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கான தனித்தனி விடுதிகள் ஆகியவை இந்த மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இன்று அரியானா வந்த பிரதமர் நரேந்திர மோடி 510 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார்.



    நாட்டில் உள்ள அனைத்து மக்களும் உயர்தரமான மருத்துவ சிகிச்சை பெற்று ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயலாற்றி வருகிறது. இன்று திறக்கப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் மூலம் இந்த பிராந்தியத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயனடைவார்கள் என இந்த திறப்புவிழாவில் பேசிய பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    அரியானா மாநில முதல் மந்திரி மனோகர் லால் கத்தார், கவர்னர் சத்யடியோ நாராயண் ஆரியா மற்றும் மத்திய குடிநீர், வடிகால்துறை மந்திரி உமா பாரதி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். #PMdedicatesESICmedicalcollege #sESIChospital 
    அரியானாவின் ஜிந்த் சட்டசபை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதற்கு காரணமான வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். #Jindbypoll #BJP #KrishanLalMiddha #Modi
    சண்டிகர்;

    அரியானா மாநிலத்தில் ஜிந்த் தொகுதிக்கு கடந்த திங்கட்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க சார்பில் கிருஷ்ணா நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜித் வாலா நிறுத்தப்பட்டார். ஜனநாயக ஜனதா கட்சி சார்பில் திக்விஜய் சவுதாலா போட்டியிட்டார்.

    கடந்த திங்கட்கிழமை நடந்த ஓட்டுப் பதிவில் 76 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு அங்குள்ள அர்ஜுன் ஸ்டேடியத்தில் ஜிந்த் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டன. பாஜக சார்பில் போட்டியிட்ட கிருஷண் லால் மித்தா 50,566 வாக்குகள் பெற்று, 12,935 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 



    இந்நிலையில், அரியானாவின் ஜிந்த் சட்டசபை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதற்கு காரணமான வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அரியானாவில் பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைத்த ஜிந்த் தொகுதி மக்களுக்கு நன்றி. பாஜக வாக்குறுதி அளித்தபடி தொகுதியில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு சேவையாற்றும் அரியானா முதல் மந்திரி மற்றும் பாஜகவினருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #Jindbypoll #BJP #KrishanLalMiddha #Modi
    அரியானாவின் ஜிந்த் சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் கிருஷண் லால் மித்தா வெற்றி பெற்றார். #Jindbypoll #BJP #KrishanLalMiddha
    சண்டிகர்;

    அரியானா மாநிலத்தில் தற்போது மனோகர்லால் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள ஜிந்த் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த லோக்தளம் கட்சியைச் சேர்ந்த ஹரி சந்த் மித்தா மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    கடந்த திங்கட்கிழமை அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க சார்பில் கிருஷ்ணா நிறுத்தப்பட்டார். இவர் மறைந்த எம்.எல்.ஏ. ஹரிசந்த் மித்தாவின் மகன். லோக்தளம் கட்சியில் இருந்து விலகிய அவருக்கு பா.ஜ.க. வேட்பாளராக வாய்ப்பு அளித்து இருந்தது.

    அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜித் வாலா நிறுத்தப்பட்டார். ஏற்கனவே கைதால் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த இவரை திட்டமிட்டு ராகுல் இந்த தொகுதி இடைத்தேர்தலில் களமிறக்கி இருந்தார்.

    இந்திய தேசிய லோக்தளம் கட்சி உமத் என்பவரை வேட்பாளராக நிறுத்தி இருந்தது. இந்திய தேசிய லோக்தளம் கட்சியில் விலகிய அஜய்சிங் சவுதாலா சமீபத்தில் ஜனநாயக ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கி இருந்தார். அந்த கட்சி சார்பில் அவர் தனது மகன் திக்விஜய் சவுதாலாவை போட்டியிட வைத்தார்.



    இதனால் ஜிந்த் தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டது. கடந்த திங்கட்கிழமை நடந்த ஓட்டுப் பதிவில் 76 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு அங்குள்ள அர்ஜுன் ஸ்டேடியத்தில் ஜிந்த் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டன.

    இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிட்ட கிருஷண் லால் மித்தா 50,566 வாக்குகள் பெற்று, 12,935 வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

    ஜனநாயக ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட திக்விஜய் சவுதாலா 37,631 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். 

    காங்கிரஸ் சார்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரந்தீப்சிங் சுர்ஜித்வாலா 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் அரியானா மாநில காங்கிரசார் அதிர்ச்சி அடைந்தனர். #Jindbypoll #BJP #KrishanLalMiddha
    அரியானாவில்அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். #GurugramBuildingCollapse
    சண்டிகர்:

    அரியானாவில் உள்ள குருகிராமம் பகுதியை சார்ந்த உல்லவாஸ் கிராமத்தில் நான்கு மாடி கட்டிடம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    தகவலறிந்து அங்கு சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரை காயத்துடன் மீட்டனர்.

    இந்நிலையில், அரியானாவில்அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்தனர்.

    அடுக்குமாடி கட்டிட விபத்து பற்றி அறிந்த முதல் மந்திரி மனோகர் லால் கட்டார், விபத்தில் பலியானோருக்கு தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், பலியானோர் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். #GurugramBuildingCollapse
    அரியானாவில் உள்ள குருகிராமம் பகுதியில் இருந்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #gurugram #fourstoreybuildingaccident
    குருகிராமம்:

    அரியானாவில் உள்ள குருகிராமம் பகுதியை சார்ந்த உல்லவாஸ் கிராமத்தில் நான்கு மாடி கட்டிடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    எந்தவொரு முறையான தொழில்நுட்பத்துடனும் இல்லாமல் ஒரு ஒழுங்கற்ற முறையில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக குருகிராமம் சப்-கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கட்டிடத்தின் நான்காவது தளம் நேற்று தான் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    கட்டிடத்தின் உரிமையாளர் கண்டறியப்பட்டதாகவும், அவர் பெயர் தயாராம் எனவும் குருகிராமம் துணை ஆணையர் வினய் பிரதாப் சிங் கூறியுள்ளார். இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களின் எண்ணிக்கை சரியாக தெரியாத நிலையில், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மூன்று குழுக்களாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். #gurugram #fourstoreybuildingaccident

    வரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியினர் அறிவித்துள்ளனர். #ParlimentElection #AamAadmiParty
    புதுடெல்லி:

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மே மாதம் பாராளுமன்ற தேர்தலை நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில்,  வரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.



    இதுதொடர்பாக, அக்கட்சியை சேர்ந்த தொழிலாளர் துறை மந்திரி கோபால் ராய் டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் டெல்லி மற்றும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது என தெரிவித்துள்ளார். 

    கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளிலும் பாஜக வென்றது நினைவிருக்கலாம். #ParlimentElection #AamAadmiParty
    பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. #GurmeetRamRahim
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் சில்சாந் அகரில் வசித்து வந்த பத்திரிகையாளர் சத்ரபதி. இவர் மாலை நாளிதழ் ஆசிரியராக இருந்தார்.
     
    இவரது நாளிதழில் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக செய்தி வெளியிட்டார். இதையடுத்து 2002ஆம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இதுதொடர்பாக, 2003ஆம் ஆண்டு சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

    பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏற்கனவே அவர் அனுபவித்து வருகிறார்.



    இதற்கிடையே, பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம்  ரஹீம் சிங் குற்றவாளி என அரியானா மாநிலத்தின் சிபிஐ நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.

    பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம்  ரஹீம் சிங் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கான தண்டனை வரும் 17-ம் தேதியன்று அறிவிக்கப்படும் என அரியானா பஞ்ச்குலா நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், மற்ற குற்றவாளிகளான குல்தீப் சிங், நிர்மல் சிங், கிரிஷன் லால் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

    மேலும், அவர்கள் நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. #GurmeetRamRahim
    அரியானாவில் இருந்து கேரளாவுக்கு லாரியில் எரிசாராயம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் நாமக்கல் மாவட்ட மது விலக்கு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில் மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரகசிய தகவலின் அடிப்படையில் ஆந்திரா வழியாக சென்னை நோக்கி வந்த குறிப்பிட்ட சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 338 பிளாஸ்டிக் கேன்களில் 11 ஆயிரத்து 830 லிட்டர் எரி சாராயம் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அரியானாவில் இருந்து கடத்தி வந்த எரிசாராயம் சென்னை வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்ல இருந்ததாக லாரியில் இருந்த 3 பேரும் தெரிவித்தனர்.

    மேலும் சென்னை போரூர் சுங்கச்சாவடி வரை சென்றதும் அங்கிருந்து மதுரவாயலை சேர்ந்த பாபு என்கிற ரமேஷ் என்பவரின் வழிகாட்டுதலின்படி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அந்த லாரி செல்ல இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து லாரி டிரைவர் திண்டிவனத்தை சேர்ந்த ரமேஷ், கிளீனராக இருந்த மேல்மலையனூர் முருகன், மாமண்டூர் சங்கர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, டெல்லியில் இருந்து இவ்வாறு எரிசாராயம் தொடர்ந்து திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களின் வழியே கடத்தப்பட்டு வருவதாகவும், இதே போல மற்றொரு லாரி சுமார் 6 மணி நேரம் கழித்து டெல்லியில் இருந்து புறப்பட்டதாகவும், அந்த லாரி எந்த வழியில் தமிழ்நாட்டிற்குள் வருகிறது என்பது தங்களுக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் கள்ள சாராயத்தால் ஏற்பட்ட பல உயிரிழப்புகளுக்கு பின்னணியில் இந்த கும்பல் தொடர்ந்து இருந்து வருவது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    எரிசாராயம் கடத்திவரும் மற்றொரு லாரியை பிடிக்கும் வகையில் வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளையும் தற்போது போலீசார் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து உள்ளனர்.

    இது தவிர ஆந்திர மாநிலம் நெல்லூரில், தமிழக போலீசார் மாறு வேடத்தில் முகாமிட்டு வடமாநிலத்தில் இருந்து அப்பகுதியை கடந்து தமிழக எல்லை பகுதிக்குள் நுழையும் எரிசாராய கடத்தல் லாரிகள் குறித்து ரகசியமாக தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

    அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் மேம்பாலத்தில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் ஏறியதில் 5 பேர் உயிரிழந்தனர். #HaryanaAccident
    ஹிசார்:

    அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நேற்று பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், இரவில் பாலத்தின் மீதுள்ள நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அதிவேகமாக வந்த ஒரு கார், கட்டுப்பாட்டை இழந்து தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறியது. அத்துடன் எதிரே வந்த மற்றொரு கார் மீதும் மோதிவிட்டு பாலத்தில் இருந்து கவிழ்ந்தது.



    அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமடைந்தனர். கார்  டிரைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #HaryanaAccident
    புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அரியானாவை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியை பெறுமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர். #ProKabaddi2018 #TamilThalaivas
    மும்பை:

    6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் சென்னை நகரை மையமாக கொண்ட அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி 9 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்று உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 10-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘ஏ’பிரிவில் உள்ள அரியானா ஸ்டீலர்சை இன்று இரவு 8 மணிக்கு சந்திக்கிறது. அரியானாவை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியை பெறுமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

    அரியானா அணி 12 ஆட்டத்தில் 4 வெற்றி, 8 தோல்வியுடன் 23 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி 5-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் மும்பை- பெங்களூர் அணிகள் மோதுகின்றன. #ProKabaddi2018 #TamilThalaivas
    ×