search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pro Kabaddi 2018"

    புரோ கபடி லீக் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நாளை பிளேஆப் சுற்று தொடங்குகிறது.#ProKabbadi

    கொச்சி:

    6-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டி கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி சென்னையில் தொடங்கியது.

    இதில் 12 அணிகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு அணியும் 22 லீக் ஆட்டங்களில் மோதின. 12 நகரங்களில் ‘லீக்‘ ஆட்டங்கள் நடந்தன. நேற்று முன் தினத்துடன் ‘லீக்‘ ஆட்டம் முடிவடைந்தன.

    ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்சுன் (93 புள்ளி), மும்பை (86 புள்ளி), தபாங் டெல்லி (68 புள்ளி) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களை பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. புனேரி பல்தான் (52 புள்ளி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (43 புள்ளி), அரியானா ஸ்டீலர்ஸ் (42 புள்ளி) ஆகியவை 4 முதல் 6-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ் 78 புள்ளியுடன் முதல் இடத்தையும், பெங்கால் வாரியர்ஸ் 69 புள்ளியுடன் 2-வது இடத்தையும், உ.பி. யோதா 57 புள்ளியுடன் 3-வது இடத்தையும் பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் (55 புள்ளி), தெலுங்கு டைட்டன்ஸ் (51 புள்ளி), தமிழ்தலைவாஸ் (42 புள்ளி) ஆகிய அணிகள் 4 முதல் 6-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ‘பிளே ஆப்’ சுற்று கொச்சியில் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது.

    இரவு 8 மணிக்கு நடை பெறும், ‘எலிமினேட்டர்-1’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த மும்பை ‘பி’ பிரிவில் 3-வது இடத்தை பிடித்த உ.பி. யோதா அணிகளும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ‘எலிமினேட்டர் 3’ ஆட்டத்துக்கு தகுதி பெறும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

    இரவு 9 மணிக்கு நடை பெறும் ‘எலிமினேட்டர் 2’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் 3-வது இடத்தை பிடித்த டெல்லி ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோது கின்றன. இதில் வெற்றி பெறும் அணி ‘எலிமினேட்டர்3’ ஆட்டத்துக்கு தகுதி பெறும் தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.

    31-ந்தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த குஜராத்- ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    தோல்வி அடையும்அணி ‘குவாலி பையர் 2’ ஆட்டத்தில் விளையாடும் ‘எலிமினேட்டர் 3’ ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் ஆடும்.

    எலிமினேட்டர்3’ ஆட்டம் 31-ந்தேதி இரவு 9 மணிக்கு நடக்கிறது. ‘குவாலிபையர் 2’ ஆட்டம் ஜனவரி 3-ந்தேதியும் இறுதிப்போட்டி ஜனவரி 5-ந்தேதியும் நடக்கிறது. #ProKabbadi

    புரோ கபடி லீக் போட்டியில் இன்று நடைபெறும் 110-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாட்னா பைரேட்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. #ProKabaddi2018 #TeluguTitans #PatnaPirates
    விசாகப்பட்டினம்:

    புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 110-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பாட்னா 10-வது வெற்றியும், தெலுங்கு டைட்டன்ஸ் 2-வது வெற்றியும் பெறும் ஆர்வத்தில் உள்ளன.

    பாட்னா அணி இந்த சீசனில் தெலுங்கு டைட்டன்சிடம் 2 முறை தோற்று இருந்தது. அதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தெலுங்கு அணி நம்பிக்கையுடன் விளையாடும். #ProKabaddi2018 #TeluguTitans #PatnaPirates
    புரோ கபடியில் நேற்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, டெல்லியிடம் போராடி வீழ்ந்தது. #ProKabadi2018 #DabangDelhi #TamilThalaivas
    புதுடெல்லி:

    6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். இதுவரை யு மும்பா, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்துள்ளன.

    இந்த நிலையில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 99-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, தபாங் டெல்லியுடன் கோதாவில் இறங்கியது. விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் பாதியில் 16-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்ற டெல்லி அணி அதை கடைசி வரை போராடி தக்க வைத்துக் கொண்டது. முடிவில் டெல்லி அணி 37-33 என்ற புள்ளி கணக்கில் தலைவாசை சாய்த்து 10-வது வெற்றியை பதிவு செய்தது. அதிகபட்சமாக தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்கூர் 14 புள்ளிகள் எடுத்தார். 17-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 10-வது தோல்வியாகும். தொடர்ச்சியான சறுக்கலால் தலைவாஸ் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலாகியுள்ளது.

    முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 30-29 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது. அரியானா அணியில் மோனு கோயட் ரைடு மூலம் 11 புள்ளிகள் சேர்த்த போதிலும் பலன் இல்லாமல் போய் விட்டது. 17-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணிக்கு இது 4-வது வெற்றியாகும்.

    இன்றைய ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்-குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), பாட்னா பைரட்ஸ்-புனேரி பால்டன் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. #ProKabadi2018 #DabangDelhi #TamilThalaivas
    புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும் தபாங் டெல்லி அணியும் மோதுகின்றனர். #ProKabaddi2018 #TamilThalaivas #DabangDelhi
    புதுடெல்லி;

    6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    இந்தப்போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். ஒவ்வொரு அணியும் 22 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.

    ‘ஏ’ பிரிவில் இருந்து மும்பை, குஜராத் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழைந்துவிட்டன. இந்த பிரிவில் இருந்து இன்னும் ஒரு அணி நுழைய வேண்டும். ‘பி’ பிரிவில் இதுவரை எந்த அணியும் இன்னும் தகுதி பெறவில்லை. பெங்களூர் அணி 59 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது.

    சென்னை நகரை மையமாக கொண்ட அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் உள்ளது. 16 ஆட்டத்தில் 5 வெற்றி, 9 தோல்வி, 2 டையுடன் 33 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது.

    தமிழ் தலைவாஸ் 17-வது ‘லீக்’ ஆட்டத்தில் டெல்லி டெபாங்கை இன்று இரவு 9 மணிக்கு சந்திக்கிறது.

    ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் தொடர்ந்து இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் தமிழ் தலைவாசுக்கு இருக்கிறது. தோற்றால் போட்டியில் இருந்து வெளியேறும். பலம் வாய்ந்த டெல்லி அணியை வீழ்த்துவது சவாலானதே. அஜய் தாகூர், மஞ்சித் சில்லரின் ஆட்டத்தை பொறுத்தே அணியின் நிலை உள்ளது. டெல்லி அணி 9 வெற்றி, 8 தோல்வி, 1டையுடன் 55 புள்ளிகள் பெற்று ‘ஏ’ பிரிவில் 3-வது இடத்தில் உள்ளது.

    முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்- உ.பி.யோதா அணிகள் மோதுகின்றன. அரியானா 7-வது வெற்றி ஆர்வத்திலும், உ.பி.யோதா 4-வது வெற்றி ஆர்வத்திலும் உள்ளன. #ProKabaddi2018 #TamilThalaivas #DabangDelhi
    புரோ கபடி லீக் போட்டியில் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றனர். #ProKabaddi2018 #BengalWarriors #BengaluruBulls
    புனே:

    புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் புனே அணி 35-33 என்ற புள்ளிக் கணக்கில் (‘ஏ’ பிரிவு) அரியானா ஸ்டீலர்சையும், பெங்களூர் புல்ஸ் 34-26 என்ற கணக்கில் (‘பி’ பிரிவு) தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 87-வது ‘லீக்‘ ஆட்டத்தில் புனேரிபல்தான்- குஜராத் பார்ச்சுன் ஜெய்மைட்ஸ் அணிகள் மோதுகின்றன. புனே அணி 8-வது வெற்றிக்காகவும், குஜராத் அணி 11-வது வெற்றிக்காகவும் காத்திருக்கிறது.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூர் அணி 11-வது வெற்றி ஆர்வத்தில் இருக்கிறது. பெங்கால் வாரியர்ஸ் 7-வது வெற்றி வேட்கையில் இருக்கிறது. #ProKabaddi2018 #BengalWarriors #BengaluruBulls
    புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 85-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி, அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. #ProKabaddi #PuneriPaltan #HaryanaSteelers
    புனே:

    6-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 85-வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) புனேரி பால்டன் அணி 35-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. முதல் பாதியில் 8-23 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த புனே அணி பிற்பாதியில் வியப்புக்குரிய வகையில் ஆடி பிரமாதப்படுத்தியது. புனே அணியில் அதிகபட்சமாக சந்தீப் நார்வல் 7 புள்ளிகள் சேர்த்தார். 17-வது லீக்கில் ஆடிய புனே அணிக்கு இது 7-வது வெற்றியாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் (பி பிரிவு) பெங்களூரு புல்ஸ் 34-26 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. இன்றைய ஆட்டங்களில் புனேரி பால்டன்- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), பெங்களூரு புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.
    புரோ கபடி லீக் தொடரில் புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி - தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 31-25 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. #Prokabbadi #TamilThalaivas #TeluguTitans
    புனே:

    6-வது புரோ கபடி லீக் தொடரில் புனேயில் நேற்று இரவு நடந்த 83-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் 18-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த தமிழ் தலைவாஸ் அணி முடிவில் 31-25 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.



    தமிழ் தலைவாஸ் அணியில் டேக்கிள் மூலம் மஞ்சித் ஷில்லார் 7 புள்ளியும், ரைடு மூலம் அஜய் தாகூர் 7 புள்ளியும் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். 15-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும்.

    மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 37-27 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தா அணியை தோற்கடித்தது. 14-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி பெற்ற 9-வது வெற்றி இதுவாகும். இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஹரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பால்டன் (இரவு 8 மணி), பெங்களூரு புல்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. #Prokabbadi #TamilThalaivas #TeluguTitans
    புரோ கபடி ‘லீக்’ போட்டியின் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. #Prokabbadi #TamilThalaivas #BengaluruBulls
    புனே:

    6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி புனேயில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் புல்சிடம் ஏற்கனவே 2 முறை தோற்று இருந்தது. இதனால் இதற்கு பதிலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தமிழ் தலைவாஸ் உள்ளது. பெங்களூர் அணி தமிழ்தலைவாசை மீண்டும் வீழ்த்தி 8-வது வெற்றி வேட்கையில் இருக்கிறது.

    முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை- டெல்லி அணிகள் மோதுகின்றன. மும்பை 11-வது வெற்றிக்காகவும், டெல்லி 6-வது வெற்றிக்காகவும் காத்திருக்கிறது. #Prokabbadi #TamilThalaivas #BengaluruBulls
    புரோ கபடி லீக் தொடரில் ஆமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 27-23 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. #ProKabaddi2018 #TamilThalaivas #TeluguTitans
    ஆமதாபாத்:

    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 72-வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) தமிழ் தலைவாஸ் அணி 27-23 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

    தமிழ் தலைவாஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் அஜய் தாக்கூர் 8 புள்ளிகளும், சுகேஷ் ஹெட்ஜ் 5 புள்ளிகளும் எடுத்து வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர். இதன் மூலம் ஏற்கனவே தெலுங்கு அணியிடம் 28-33 என்ற புள்ளி கணக்கில் அடைந்த தோல்விக்கு தலைவாஸ் அணி பழிதீர்த்துக் கொண்டது. 12-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 4-வது வெற்றியாகும். மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 29-26 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியை சாய்த்தது.

    இன்றைய ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்-தமிழ் தலைவாஸ் (இரவு 8 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- யு மும்பா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. #ProKabaddi2018 #TamilThalaivas #TeluguTitans 
    புரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் அணிகள் வெற்றியை ருசித்தது. #ProKabaddi #Bengaluru #Gujarat
    ஆமதாபாத்:

    6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஆமதாபாத்தில் அரங்கேறிய 70-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 45-32 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தி 7-வது வெற்றியை ருசித்தது.

    மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 32-37 என்ற புள்ளி கணக்கில் உள்ளூர் அணியான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சிடம் வீழ்ந்தது. குஜராத்துக்கு இது 8-வது வெற்றியாகும். போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.
    புரோ கபடி லீக் போட்டியில் 69-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டம் சமனில் முடிந்தது. #ProKabaddi
    ஆமதாபாத்:

    6-வது புரோ கபடி லீக் தொடரில் ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 68-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் புனே அணி 13-12 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. பின் பாதியில் முன்னிலை பெற்ற பெங்கால் அணி அதனை கடைசி வரை தக்க வைத்து கொண்டது.

    முடிவில் பெங்கால் அணி 26-22 என்ற புள்ளி கணக்கில் புனேவை வீழ்த்தியது. 69-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் சந்தித்தன. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 30-30 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது.

    இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 8 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-உ.பி.யோத்தா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
    புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அரியானாவை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியை பெறுமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர். #ProKabaddi2018 #TamilThalaivas
    மும்பை:

    6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் சென்னை நகரை மையமாக கொண்ட அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி 9 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்று உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 10-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘ஏ’பிரிவில் உள்ள அரியானா ஸ்டீலர்சை இன்று இரவு 8 மணிக்கு சந்திக்கிறது. அரியானாவை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியை பெறுமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

    அரியானா அணி 12 ஆட்டத்தில் 4 வெற்றி, 8 தோல்வியுடன் 23 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி 5-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் மும்பை- பெங்களூர் அணிகள் மோதுகின்றன. #ProKabaddi2018 #TamilThalaivas
    ×