என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » bengal warriors
நீங்கள் தேடியது "Bengal Warriors"
- ஜெய்ப்பூர் அணி 6-வது தோல்வியை தழுவியது.
- புனே அணி 11-வது வெற்றியை பதிவு செய்தது.
ஐதராபாத்:
புரோ கபடி 'லீக்' போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 41-38 என்ற கோல் கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தியது. பெங்கால் அணி பெற்ற 8-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 48 புள்ளியுடன் 5-வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 6-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 58 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.
மற்றொரு போட்டியில் புனேரி பல்தான் 39-32 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது. புனே அணி பெற்ற 11-வது வெற்றியாகும். அந்த அணி 64 புள்ளியுடன் முதல்இடத்தில் உள்ளது.
ஜெய்ப்பூர் அணி 6-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 54 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. இன்று ஓய்வு நாளாகும். நாளைய போட்டியில் குஜராத்-டெல்லி, தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர், அரியானா-பாட்னா அணிகள் மோதுகின்றன.
புரோ கபடி லீக் போட்டியில் மேற்கு வங்காளத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை 27 -24 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் வீழ்த்தியது. #ProKabaddi #BengalWarriors #TamilThalaivas
கொல்கத்தா:
12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 15 - 15 என சமனிலை வகித்தன.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணியினர் அபாரமாக ஆடினர். தமிழ் தலைவாஸ் அணியினரும் அவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.
இறுதியில், தமிழ் தலைவாஸ் அணியை 27 -24 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் பி பிரிவில் பெங்கால் வாரியர்ஸ் அணி 3வது இடத்துக்கு முன்னேறியது. #ProKabaddi #BengalWarriors #TamilThalaivas
புரோ கபடி லீக் போட்டியில் ஆந்திராவில் இன்று நடைபெற்ற இண்டர்ஜோன் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை 30 - 21 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது மும்பை அணி. #ProKabaddi #UMumba #BengalWarriors
விசாகப்பட்டினம்:
12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற இண்டர்ஜோன் ஆட்டத்தில் யு மும்பை அணியும் பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து மும்பை அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதியின் முடிவில் 14 - 9 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணி முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி வீரர்கள் போராடினர். ஆனாலும், மும்பை அணி வீரர்கள் அபாரமாக ஆடினர்.
இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணியை 30 - 21 என்ற கணக்கில் மும்பை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஏ பிரிவில் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. #ProKabaddi #UMumba #BengalWarriors

புரோ கபடி லீக் போட்டியில் டெல்லியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தின் பரபரப்பான கடைசி கட்டத்தில் பெங்கால் அணியை 35 -33 என்ற கணக்கில் வீழ்த்தி அரியானா அணி வெற்றி பெற்றது. #ProKabaddi #HaryanaSteelers #BengalWarriors
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 19 - 12 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா அணி முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் இறுதி வரை இரு அணி வீரர்களும் சளைக்காமல் ஆடினர். கடைசி கட்டம் வரை ஆட்டம் பரபரப்பாக சென்றது.
இறுதியில், ஆட்டம் முடியும் கடைசி நிமிடத்தில் அரியானா அணி வீரர்கள் அபாரமாக ஆடி பாய்ண்ட் எடுத்தனர். இதனால் அரியானா அணி 35 - 33 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் அரியானா அணி ஆறாவது வெற்றியை பெற்றது. #ProKabaddi #HaryanaSteelers #BengalWarriors
புரோ கபடி லீக் போட்டியில் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றனர். #ProKabaddi2018 #BengalWarriors #BengaluruBulls
புனே:
புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் புனே அணி 35-33 என்ற புள்ளிக் கணக்கில் (‘ஏ’ பிரிவு) அரியானா ஸ்டீலர்சையும், பெங்களூர் புல்ஸ் 34-26 என்ற கணக்கில் (‘பி’ பிரிவு) தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 87-வது ‘லீக்‘ ஆட்டத்தில் புனேரிபல்தான்- குஜராத் பார்ச்சுன் ஜெய்மைட்ஸ் அணிகள் மோதுகின்றன. புனே அணி 8-வது வெற்றிக்காகவும், குஜராத் அணி 11-வது வெற்றிக்காகவும் காத்திருக்கிறது.
இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூர் அணி 11-வது வெற்றி ஆர்வத்தில் இருக்கிறது. பெங்கால் வாரியர்ஸ் 7-வது வெற்றி வேட்கையில் இருக்கிறது. #ProKabaddi2018 #BengalWarriors #BengaluruBulls

புரோ கபடி லீக் போட்டியில் குஜராத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புனே பல்டன் அணியை வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ் அணி தனது ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
அகமதாபாத்:
12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. தற்போது இண்டர்ஜோன் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குஜராத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புனே பல்டன் அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 13 - 12 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு புனே பல்டன் அணி வீரர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.
இறுதியில், பரபரப்பான கட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 26 - 22 என்ற புள்ளிக்கணக்கில் புனே பல்டன் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் பெங்கால் அணி ஐந்தாவது வெற்றியை பெற்றது. #ProKabaddi
புரோ கபடி லீக் போட்டியில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்திய பாட்னா பைரேட்ஸ் அணி தனது ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
மும்பை:
12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பாட்னா பைரேட்ஸ் அணி சிறப்பாக ஆடியது. இதனால் அந்த அணியின் புள்ளிகள் மளமளவென உயர்ந்தன. இதனால் முதல் பாதியில் 22- 14 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா அணி முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் பாட்னா அணி தனது துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில், பெங்கால் அணியை 50 - 30 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பாட்னா அணி அபார வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு கிடைத்த ஐந்தாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddi

புரோ கபடி லீக் போட்டியில் பாட்னாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை 29-27 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி வீழ்த்தியது. #ProKabaddi
பாட்னா:
12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் விளையாடினர்.
இதனால் இரு அணிகளின் புள்ளிகள் சமனிலையில் இருந்து வந்தது.
ஆட்டத்தின் இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி சிறப்பாக விளையாடியது. இதையடுத்து, பெங்கால் வாரியர்ஸ் அணியை 29 - 27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் அணி நான்காவது வெற்றியை பெற்றது. #ProKabaddi
புரோ கபடி போட்டியின் உ.பி.யோத்தா-பெங்கால் வாரியர்ஸ் இடையேயான 25வது லீக் ஆட்டம் 40-40 என்ற புள்ளி கணக்கில் டையில் முடிந்தது. #ProKabaddi #UPYoddha #BengalWarrior
புனே:
12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேயில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா-பெங்கால் வாரியர்ஸ் (பி பிரிவு) அணிகள் மல்லுக்கட்டின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் சேர்த்தன.
முதல் பாதியில் 18-15 என்ற கணக்கில் முன்னிலை வகித்த உ.பி.யோத்தா அணியால் கடைசி வரை அந்த முன்னிலையை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. முடிவில் இந்த ஆட்டம் 40-40 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது. மற்றொரு திரிலிங்கான ஆட்டத்தில் புனேரி பால்டன் 33-32 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் யு மும்பா அணியை தோற்கடித்து 4-வது வெற்றியை பெற்றது. #ProKabaddi #UPYoddha #BengalWarrior

புரோ கபடி லீக் போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 30-25 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி வீழ்த்தியது. #ProKabaddi
சோனிபட்:
12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் அரியானா மாநிலம் சோனிபட்டில் நடந்த லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் விளையாடினர்.
இதனால் இரு அணிகளின் புள்ளிகள் சமனிலையில் இருந்து வந்தது. ஆட்டத்தின் இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டது. இதையடுத்து, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 30-25 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பெற்றது. #ProKabaddi
×

X