என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pro Kabaddi league"

    • நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் 3 முறை மோதி இருக்கின்றன.
    • 3 தடவையும் சமனில் முடிந்ததால் ஆட்டத்தில் டைபிரேக்கர் மூலமே முடிவு கிடைத்தது.

    புதுடெல்லி:

    12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி தொடங்கியது. இதில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான தபாங் டெல்லி-புனேரி பால்டன் அணிகள் சந்திக்கின்றன. அஷூ மாலிக் தலைமையிலான தபாங் டெல்லி அணி லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 2-வது இடம் பெற்றதுடன், முதலாவது தகுதி சுற்றில் டைபிரேக்கரில் (6-4) புனேரி பால்டனை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. டெல்லி 2019-ம் ஆண்டில் 2-வது இடமும், 2021-22-ம் ஆண்டில் சாம்பியன் பட்டமும் வென்றிருந்தது.

    அஸ்லாம் இனாம்தார் தலைமையிலான புனேரி பால்டன் அணி லீக் சுற்று பிரிவில் முதலிடம் பிடித்தது. 2-வது தகுதி சுற்றில் சரிவில் இருந்து மீண்டு வந்து 50-45 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வெளியேற்றி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. புனே அணி 2022-ம் ஆண்டு 2-வது இடமும், 2023-ம் ஆண்டு சாம்பியன் பட்டமும் கைப்பற்றி இருந்தது.

    நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் 3 முறை மோதி இருக்கின்றன. 3 தடவையும் சமனில் முடிந்ததால் ஆட்டத்தில் டைபிரேக்கர் மூலமே முடிவு கிடைத்தது. இதில் டெல்லி 2 ஆட்டத்திலும், புனே ஒரு ஆட்டத்திலும் வெற்றி கண்டன. இன்றைய ஆட்டத்திலும் இரு அணிகளும் நீயா-நானா? என கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசாக வழங்கப்படும். இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் தபாங் டெல்லியை சந்திக்கும்.
    • இறுதிப்போட்டி வருகிற 31-ந்தேதி (வெள்ளிக் கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    புதுடெல்லி:

    12-வது புரோ கபடி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் குவாலிபயர்-2 (இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று) ஆட்டத்தில் புனேரி பல்தான்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் தபாங் டெல்லியை சந்திக்கும். தோற்கும் அணி வெளியேற்றப்படும். பாட்னாவின் ஆதிக்கத்துக்கு தெலுங்கு டைட்டன்ஸ் முடிவு கட்டியது. நேற்று நடந்த எலிமினேட்டர்-3 போட்டியில் அந்த அணி 46-39 என்ற கணக்கில் பாட்னாவை தோற்கடித்தது.

    இரு அணிகளும் இந்த தொடரில் மோதிய முதல் ஆட்டத்தில் புனேயும் (39-33),2-வது போட்டியில் தெலுங்கு டைட்டன்சும் ( 40-31) வெற்றி பெற்றன. இதனால் 2-வதாக இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இறுதிப்போட்டி வருகிற 31-ந்தேதி (வெள்ளிக் கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    • இதில் வெற்றி பெறும் அணி குவாலியர் 2 (இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று) ஆட்டத்தில் புனே அணியுடன் நாளை மோதும்.
    • பாட்னா அணி தொடர்ச்சியாக 8 ஆட்டத்தில் வெற்றி பெற்று முன்னேறி வருகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர்-3 ஆட்டத்தில் பாட்னா-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி குவாலியர் 2 (இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று) ஆட்டத்தில் புனே அணியுடன் நாளை மோதும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

    பாட்னா அணி தொடர்ச்சியாக 8 ஆட்டத்தில் வெற்றி பெற்று முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நட்சத்திர வீரர் அயனின் அபாரமான ஆட்டமே காரணம். அவர் இந்த தொடரில் இதுவரை 294 ரைடு புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

    • பிளே ஆப் சுற்றுக்கு இதுவரை 7 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
    • ஒரு அணி மட்டும் தகுதி பெற வேண்டும்.

    புதுடெல்லி:

    புரோகபடி 'லீக்' போட்டியின் 4-வது மற்றும் கடைசி கட்ட ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. 12 அணிகள் பங்கேற்று உள்ள இந்த போட்டியில் 'லீக்' முடிவில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு நுழையும்.

    புனே, டெல்லி (தலா 26 புள்ளிகள்) முதல் 2 இடங்களை பிடித்து 'பிளே ஆப்' சுற்றுக்கு நுழைந்தன. அதை தொடர்ந்து தெலுங்கு டைட்டன்ஸ், மும்பை (தலா 20 புள்ளி), பெங்களூரு (18) பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தன.

    நேற்று நடந்த கடைசி 'லீக்' ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 50-32 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் அரியானா, 18 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் ஜெய்ப்பூர் அணியும் 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதுவரை 7 அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஒரு அணி மட்டும் தகுதி பெற வேண்டும்.

    8-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய கடும் போட்டி நிலவுகிறது.

    தமிழ் தலைவாஸ், பாட்னா, குஜராத், உ.பி., பெங்கால் ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகளுடன் உள்ளன.

    தமிழ் தலைவாசுக்கு போட்டிகள் முடிந்து விட்டன. பாட்னாவுக்கு 2 ஆட்டமும் குஜராத், உ.பி., பெங்காலுக்கு தலா ஒரு ஆட்டமும் எஞ்சியுள்ளன.

    இன்று நடைபெறும் போட்டிகளில் அரியானா-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 7.30), பெங்களூரு-பெங்கால் (இரவு 8.30), டெல்லி-பாட்னா (இரவு 9.30) அணிகள் மோதுகின்றன.

    • டெல்லி, புனே அணிகள் மட்டுமே இதுவரை தகுதி பெற்றுள்ளன.
    • இன்னும் 6 அணிகள் தகுதி பெற வேண்டும்.

    புதுடெல்லி:

    12 அணிகள் பங்கேற்கேற்றுள்ள புரோ கபடி 'லீக்'கின் 4-வது மற்றும் கடைசி கட்ட 'லீக்' ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இன்று 3 ஆட்டங்கள் நடக்கிறது. தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 7.30 மணி), ஜெய்ப்பூர்-புனே (8.30 மணி), தமிழ் தலைவாஸ்-குஜராத் (9.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் 6 வெற்றி, 9 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பை பெற எஞ்சிய 3 ஆட்டங்களிலும் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற வேண்டும்.

    டெல்லி, புனே அணிகள் மட்டுமே இதுவரை தகுதி பெற்றுள்ளன. இன்னும் 6 அணிகள் தகுதி பெற வேண்டும்.

    • புரோ கபடி லீக்கின் 3-வது கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.
    • புனே அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

    சென்னை:

    12 அணிகள் பங்கேற்று உள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டியின் முதல் 2 கட்ட ஆட்டங்கள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூரில் நடைபெற்றது. 3-வது கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

    முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெய்ன்ட்ஸ் 33-27 என்ற கணக்கில் உ.பி. யோதாசை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. உ.பி. அணி 5-வது தோல்வியை தழுவியது.

    அதைத் தொடர்ந்து தபாங் டெல்லி- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. இதில் டெல்லி 38-37 என்ற கணக்கில் அரியானாவை தோற்கடித்து 8-வது வெற்றியை பெற்றது. அரியானாவுக்கு 3-வது தோல்வி ஏற்பட்டது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-பாட்னா பைரேட்ஸ் மோதுகின்றன.

    தெலுங்கு டைட்டன்ஸ் அணி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது. 6-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. பாட்னா 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் புனேரி பால்டன்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    புனே அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. பெங்காலை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. புனே அணி கடந்த 3-ந் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 45-36 என்ற கணக்கில் பெங்காலை வீழ்த்தி இருந்தது.

    பெங்கால் 4-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. புனேக்கு பதிலடி கொடுத்து 5-வது வெற்றி பெறும் வேட்கையில் உள்ளது.

    • போட்டியின் முதல் பாதியிலேயே உ.பி. யோதாஸ் 15-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
    • நான்கு தொடர் தோல்விகளுக்குப் பிறகு உ.பி. யோதாஸ் பெற்ற இந்த வெற்றி அணிக்கு வலு சேர்த்துள்ளது.

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில், உ.பி. யோதாஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியை 39-22 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

    போட்டியின் முதல் பாதியிலேயே உ.பி. யோதாஸ் 15-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் தமிழ் தலைவாஸ் அணியை ஆல் அவுட் செய்து வெற்றி பெற்றது.

    உ.பி. யோதாஸ் அணியின் சுமித் சங்வான் 5 புள்ளிகள், மகேந்தர் சிங் மற்றும் அஷு சிங் ஆகியோர் தலா நான்கு புள்ளிகள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினர்.

    தமிழ் தலைவாஸ் அணியில், நிதேஷ் குமார் அதிகபட்சமாக ஏழு புள்ளிகள், அர்ஜுன் தேஷ்வால் குறைந்தபட்சமாக இரண்டு புள்ளிகள் எடுத்தனர் .

    நான்கு தொடர் தோல்விகளுக்குப் பிறகு உ.பி. யோதாஸ் பெற்ற இந்த வெற்றி அணிக்கு வலு சேர்த்துள்ளது.  முன்னதாக கடைசி ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் தமிழ் தலைவாஸ் தோல்வி கண்டது குறிபிடத்தக்கது.

    • குஜராத் ஜெயண்ட்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் 28 புள்ளிகள் பெற்றது.

    ஜெய்ப்பூர்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

    அதன்படி முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் 28 -24 என்ற கணக்கில் குஜராத்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.

    • முதல் பாதி முடிவில், பெங்களூரு புல்ஸ் அணி 20-14 என்ற கணக்கில் வலுவான முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தியது.
    • அர்ஜுன் தேஷ்வால்லின் 'சூப்பர் 10' தமிழ் தலைவாஸ்க்கு கை கொடுத்தது.

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12வது சீசன் புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.

    நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய போட்டியில் தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் மோதின.

    தமிழ் தலைவாஸ் அணி 35-29 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது. ஆட்டத்தின் முதல் பாதி முடிவில், பெங்களூரு புல்ஸ் அணி 20-14 என்ற கணக்கில் வலுவான முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தியது.

    இரண்டாம் பாதி தொடங்கியதும், தமிழ் தலைவாஸ் அணி மீண்டு வந்து இறுதியில் வெற்றியை சுவைத்தது.

    இறுதியில் அர்ஜுன் தேஷ்வால்லின் 'சூப்பர் 10' தமிழ் தலைவாஸ்க்கு கை கொடுத்தது. இதன் மூலம் பெங்களூரு புல்ஸ்சின் தொடர் வெற்றிக்கு தமிழ் தலைவாஸ் புல் ஸ்டாப் வைத்துள்ளது.

    முன்னதாக நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 41-37 புள்ளிக்கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.     

    • இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி டெல்லியாகும்.
    • இன்றுடன் விசாகப்பட்டினத்தில் போட்டிகள் முடிகிறது.

    விசாகப்பட்டினம்:

    12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் 45-37 என்ற புள்ளிக் கணக்கில் மும்பையை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. மும்பை அணிக்கு 2-வது தோல்வி ஏற்பட்டது.

    மற்றொரு ஆட்டத்தில் புனே அணி 43-32 என்ற கணக்கில் உ.பி.யோத்தாசை தோற்கடித்தது. புனே 4 வெற்றியுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. உ.பி. அணிக்கு 2-வது தோல்வி ஏற்பட்டது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட் டியில் மும்பை-பாட்னா அணிகள் மோதுகின்றன. மும்பை அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. பாட்னா அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தபாங் டெல்லி-குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி டெல்லியாகும். அந்த அணி தான் மோதிய 4 ஆட்டத்திலும் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. டெல்லி அணி பெங்களூருவை 41-34 என்ற கணக்கிலும், புனேவை கோல்டன் ரைடிலும், ஜெய்ப்பூரை 36-35 என்ற கணக்கிலும், பெங்களூருவை 45-34 என்ற கணக்கிலும் தோற்கடித்தது.குஜராத்தை வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    குஜராத் அணி 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. அந்த அணி 1 வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் உள்ளது.

    இன்றுடன் விசாகப்பட்டினத்தில் போட்டிகள் முடிகிறது. நாளை முதல் 2-வது கட்ட போட்டிகள் ஜெய்ப்பூரில் தொடங்குகிறது.

    • இந்த தொடரில் இதுவரை டெல்லி அணி தோல்வி அடையவில்லை.
    • பெங்கால் 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    விசாகப்பட்டினம்:

    புரோ கபடி 'லீக்' போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தபாங் டெல்லி-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த தொடரில் இதுவரை டெல்லி அணி தோல்வி அடையவில்லை. தான் மோதிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. அந்த அணி பெங்காலை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    பெங்கால் 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 2-வது வெற்றிக்காக காத்திருக்கின்றன.

    • 12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.
    • இதில் இன்று நடந்த ஒரு ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின.

    விசாகப்பட்டினம்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஒரு ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின.

    இதில் முதலில் பாட்னா அணி ஆதிக்கம் செலுத்தியது. பின்னர் உ.பி.யோத்தாஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் 34- 31 என்ற கணக்கில் வெற்றி த்ரில் வெற்றி பெற்றது.

    உ.பி.யோத்தாஸ் தரப்பில் ககன் கவுடா 7 புள்ளிகளை கைப்பற்றினார்.

    ×