என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி லீக்: ரைடு விட்ட உ.பி. யோதாஸ்.. திணறிய தமிழ் தலைவாஸ் - மீண்டும் தோல்வி
    X

    புரோ கபடி லீக்: ரைடு விட்ட உ.பி. யோதாஸ்.. திணறிய தமிழ் தலைவாஸ் - மீண்டும் தோல்வி

    • போட்டியின் முதல் பாதியிலேயே உ.பி. யோதாஸ் 15-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
    • நான்கு தொடர் தோல்விகளுக்குப் பிறகு உ.பி. யோதாஸ் பெற்ற இந்த வெற்றி அணிக்கு வலு சேர்த்துள்ளது.

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில், உ.பி. யோதாஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியை 39-22 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

    போட்டியின் முதல் பாதியிலேயே உ.பி. யோதாஸ் 15-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் தமிழ் தலைவாஸ் அணியை ஆல் அவுட் செய்து வெற்றி பெற்றது.

    உ.பி. யோதாஸ் அணியின் சுமித் சங்வான் 5 புள்ளிகள், மகேந்தர் சிங் மற்றும் அஷு சிங் ஆகியோர் தலா நான்கு புள்ளிகள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினர்.

    தமிழ் தலைவாஸ் அணியில், நிதேஷ் குமார் அதிகபட்சமாக ஏழு புள்ளிகள், அர்ஜுன் தேஷ்வால் குறைந்தபட்சமாக இரண்டு புள்ளிகள் எடுத்தனர் .

    நான்கு தொடர் தோல்விகளுக்குப் பிறகு உ.பி. யோதாஸ் பெற்ற இந்த வெற்றி அணிக்கு வலு சேர்த்துள்ளது. முன்னதாக கடைசி ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் தமிழ் தலைவாஸ் தோல்வி கண்டது குறிபிடத்தக்கது.

    Next Story
    ×