search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puneri Paltan"

    • இத்தொடரில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • 2-வது இடத்தை பிடித்த அரியானா அணிக்கு ரூ.1.8 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    ஐதராபாத்:

    10-வது புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்தான் சாம்பியன் பட்டம் பெற்றது. நேற்று நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் 28-25 என்ற புள்ளிக் கணக்கில் அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்தது.

    முதல் முறையாக கோப்பையை வென்ற புனே அணிக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்த அரியானா அணிக்கு ரூ.1.8 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.

    புனே அணி கேப்டன் அஸ்லம் மிக மதிப்புமிக்க வீரராக தேர்வு பெற்றார். அவர் 142 ரைடு புள்ளிகளும், 23 டேக்கிள் புள்ளிகளும் பெற்றார். அவருக்கு ரூ.20 லட்சம் கிடைத்தது.

    இந்தத் தொடரில் அதிக ரைடு புள்ளிகளை டெல்லி கேப்டன் அகமாலிக் பெற்றார். அவர் மொத்தம் 228 புள்ளிகளை எடுத்தார். சிறந்த ரைடராக தேர்வு பெற்ற அகமாலிக்குக்கு ரூ.15 லட்சம் பரிசு தொகை கிடைத்தது.

    வீரர்களை மடக்கி பிடிப்பதில் சிறந்த வீரராக புனே வீரர் முகமது ரேசா தேர்வு பெற்றார். அவர் 97 புள்ளிகள் பெற்றார். அவருக்கு ரூ.15 லட்சம் கிடைத்தது.

    • நேற்று நடந்த இறுதிப்போட்டியில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
    • இதில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.

    ஐதராபாத்:

    10-வது புரோ கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.

    லீக் சுற்று முடிவில் புனேரி பால்டன் (96 புள்ளி), நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (92 புள்ளி) ஆகிய அணிகள் முறையே முதல் 2 இடங்களைப் பிடித்து நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின.

    தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் முறையே 3 முதல் 6 இடங்களை பிடித்து 'பிளே-ஆப்' சுற்றுக்கு நுழைந்தன. வெளியேற்றுதல் சுற்றில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லியையும், அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயன்ட்சையும் வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறின.

    முதலாவது அரையிறுதியில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை சாய்த்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப்போட்டியில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

    விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் புனேரி பால்டன் அணி 28-25 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல் முறையாக புனேரி பால்டன் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

    • புரோ கபடி போட்டியின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது.
    • எலிமினேட்டர் ஆட்டங்கள் 26-ந் தேதி நடக்கிறது.

    பஞ்ச்குலா:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டியின் 12-வது மற்றும் இறுதிக்கட்ட லீக் ஆட்டங்கள் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்று வருகிறது.

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், தபாங் டெல்லி, குஜராத் ஜெய்ன்ட்ஸ், ஸ்ட்லர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய 6 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டன. பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ், யு மும்பா, உ.பி. யோதாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டன.

    புரோ கபடி போட்டியின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் புனே-உ.பி. அணிகளும், இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் அரியானா-பெங்களூரு அணிகளும் மோதுகின்றன.

    4 நாட்கள் ஓய்வுக்கு பிறகு பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் வருகிற 26-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. ஜெய்ப்பூர், புனே அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும். இன்றைய ஆட்டத்தில் உ.பி. அணியை வீழ்த்துவதன் மூலம் புனே அணி முதல் இடத்தை பிடிக்கும்.

    புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த அணியும், 6-வது இடத்தை பிடித்த அணியும் 'எலிமினேட்டர்' ஆட்டத்தில் விளையாடும். இதனபடி டெல்லி-பாட்னா அணிகள் மோதுகின்றன.

    எலிமினேட்டர் 2 போட்டியில் அரியானா குஜராத் அணிகள் மோதுகின்றன. எலிமினேட்டர் ஆட்டங்கள் 26-ந் தேதி நடக்கிறது.

    டெல்லி-பாட்னா இடையேயான ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி முதல் அரைஇறுதியில் விளையாடும். புனே அணியுடன் மோத வாய்ப்பு உள்ளது.

    அரியானா-குஜராத் இடையேயான ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி 2-வது அரை இறுதியில் விளையாடும். ஜெய்ப்பூர் அணியுடன் மோதும் வாய்ப்பு இருக்கிறது. வருகிற 28-ந் தேதி அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. மார்ச் 1-ந் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.

    புரோ கபடி லீக் போட்டியில் அரியானாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியை 36 - 23 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி. #ProKabaddi #JaipurPinkPanthers #PuneriPaltan
    சண்டிகர்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 

    அரியானா மாநிலம் பஞ்சகுலா நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஜெய்ப்பூர் அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் ஜெய்ப்பூர் அணி 21 - 9 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் ஜெய்ப்பூர் அணியினர் சிறப்பாக விளையாடினர். புனே அணி வீரர்களால் அவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை.

    இறுதியில், ஜெய்ப்பூர் அணி 36 - 23 என்ற கணக்கில் புனே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு கிடைத்த 5வது வெற்றி ஆகும். #ProKabaddi #JaipurPinkPanthers #PuneriPaltan
    புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 85-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி, அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. #ProKabaddi #PuneriPaltan #HaryanaSteelers
    புனே:

    6-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 85-வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) புனேரி பால்டன் அணி 35-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. முதல் பாதியில் 8-23 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த புனே அணி பிற்பாதியில் வியப்புக்குரிய வகையில் ஆடி பிரமாதப்படுத்தியது. புனே அணியில் அதிகபட்சமாக சந்தீப் நார்வல் 7 புள்ளிகள் சேர்த்தார். 17-வது லீக்கில் ஆடிய புனே அணிக்கு இது 7-வது வெற்றியாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் (பி பிரிவு) பெங்களூரு புல்ஸ் 34-26 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. இன்றைய ஆட்டங்களில் புனேரி பால்டன்- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), பெங்களூரு புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.
    புரோ கபடி லீக் போட்டியில் குஜராத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புனே பல்டன் அணியை வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ் அணி தனது ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
    அகமதாபாத்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. தற்போது இண்டர்ஜோன் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    குஜராத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புனே பல்டன் அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 13 - 12 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு புனே பல்டன் அணி வீரர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.

    இறுதியில், பரபரப்பான கட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 26 - 22 என்ற புள்ளிக்கணக்கில் புனே பல்டன் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் பெங்கால் அணி ஐந்தாவது வெற்றியை பெற்றது. #ProKabaddi 
    புரோ கபடி லீக் போட்டியில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பல்டன் அணியை வீழ்த்திய தெலுங்கு டைடன்ஸ் அணி தனது ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
    மும்பை:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று  நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைடன்ஸ் அணியும், புனேரி பல்டன் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயெ தெலுங்கு டைடன்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 11 - 17 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைடன்ஸ் அணி முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் தெலுங்கு டைடன்ஸ் அணி துடிப்பாக விளையாடியது. புனேரி பல்டன் அணியும் சளைக்காமல் புள்ளிகளை எடுத்தது.

    இறுதியில், பரபரப்பான கட்டத்தில் தெலுங்கு டைடன்ஸ் அணி 28 - 25 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பல்டன் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் தெலுங்கு டைடன்ஸ் அணி ஐந்தாவது வெற்றியை பெற்றது. #ProKabaddi 
    புரோ கபடி லீக் போட்டியில் உபியில் நேற்று நடந்த ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்திய மும்பை அணி தனது ஆறாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
    லக்னோ:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் உபி மாநிலத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனேரி பல்டன் அணியும், யு மும்பா அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மும்பை அணி சிறப்பாக விளையாடியது. இதனால் முதல் பாதியில் அந்த அணி 19 - 10 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் மும்பை அணி அபாரமாக ஆடியது.

    இறுதியில், புனே அணியை 31 - 22 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இது மும்பை அணிக்கு கிடைத்த ஆறாவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddi 
    புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியை 31-27 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணி வீழ்த்தியது. #ProKabaddi
    புனே:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியும், புனேரி பால்டன் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர்.
    இதனால் இரு அணிகளின் புள்ளிகள் சமனிலையில் இருந்து வந்தது.

    ஆட்டத்தின் இறுதியில், புனேரி பால்டன் அணி சிறப்பாக செயல்பட்டது. இதையடுத்து, தபாங் டெல்லி அணியை 31 - 27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி புனேரி பால்டன் அணி ஆறாவது வெற்றியை பெற்றது. #ProKabaddi 

    மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி பாட்னா பைரேட்ஸ் அணியை 43 - 41 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பரபரப்பான நிலையில் வெற்றி பெற்றது. #ProKabaddi
    புரோ கபடி தொடரில் நேற்றைய ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் அணிகள் வெற்றி பெற்றன. #ProKabaddi2018 #Gujarat #PuneriPaltan #TeluguTitan #PatnaPirates
    பாட்னா:

    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சுடன் (ஏ பிரிவு) மோதியது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் பாதியில் 16-12 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற குஜராத் அணி அந்த முன்னிலையை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டு 37-27 என்ற புள்ளி கணக்கில் புனேயை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. 6 புள்ளிகளை எடுத்த புனே அணியின் நட்சத்திர வீரர் நிதின் தோமர், இந்த சீசனில் 100 ரைடு புள்ளிகளை (மொத்தம் 102 புள்ளி) கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 11-வது லீக்கில் ஆடிய புனே அணிக்கு இது 5-வது தோல்வியாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 53-32 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை தோற்கடித்து 4-வது வெற்றியை சுவைத்தது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியில், ரைடு செல்வதில் கில்லாடியான ராகுல் சவுத்ரி 17 புள்ளிகள் எடுத்து அசத்தினார்.

    இன்றைய லீக் ஆட்டங்களில் தபாங் டெல்லி-புனேரி பால்டன் (இரவு 8 மணி), பாட்னா பைரட்ஸ்- பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
    புரோ கபடி லீக் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புனேரி படான் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. #ProKabaddi #PuneriPaltan #TamilThalaivas
    புனே:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணியும் தமிழ் தலைவாஸ் அணியும் மோதின. 

    தமிழ் தலைவாஸ் அணி ஏற்கனவே 5 ஆட்டங்களில் தோற்றுப் போனதால், ஆட்டத்தின் தொடக்கத்தில் அவர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். இதனால் அந்த அணியின் புள்ளிகள் உயர்ந்து வந்தது.

    சொந்த மண்ணில் விளையாடுவதால் புனே அணி தமிழ் தலைவாஸ் அணிக்கு கடும் நெருக்கடியை தந்தது.

    அஜய் தாக்கூர் சிறப்பாக ஆடி 12 ரெய்டு பாய்ண்ட்கள் பெற்றுத் தந்தார். ஆட்டத்தின் இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக செயல்பட்டதால், 36-31 என்ற புள்ளி கணக்கில் புனேவை வீழ்த்தியது.

    இதையடுத்து, கடந்த ஐந்து போட்டிகளில் பெற்ற தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது தமிழ் தலைவாஸ் அணி. #ProKabaddi #PuneriPaltan #TamilThalaivas
    புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை புனேரி படான் அணி வீழ்த்தியது. #ProKabaddi #PuneriPaltan #BengaluruBulls
    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் அரியானா மாநிலம் சோனிபட்டில் நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணியும் பெங்களூரு அணியும் மோதின. 

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் சிறப்பாக விளையாடினர். ஆனாலும், முதல் பாதியில் பெங்களூரு அணி 13-10 என்ற புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் இருந்தது.

    ஆட்டத்தின் இறுதியில் புனே அணி சிறப்பாக செயல்பட்டது. கடைசி ஐந்து நிமிடத்தில் புனே அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். இதனால் 27 -25 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. புனே அணிக்கு இது 5-வது வெற்றியாகும். #ProKabaddi #PuneriPaltan #BengaluruBulls
    ×