search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harbhajan singh"

    • அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்கு கிடைத்த தங்கம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
    • நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது.

    மும்பை:

    ஆசியக் கோப்பை டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்றிரவு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது.

    அதிகபட்சமாக விராட் கோலி 60 (44) ரன்கள் எடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கினர்.

    பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 182 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சும், பீல்டிங் சொதப்பல்களும் முக்கிய காரணமாக அமைந்தது. ஹர்திக் பாண்டியா, சாஹல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் 40 ரன்களுக்கு மேல் பந்துவீச்சில் விட்டு கொடுத்தனர்.

    பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் பாகிஸ்தான் வெற்றிக்கு தேவைப்பட்டது.

    அப்போது, ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் ஆசிப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார். இது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டன.

    இந்நிலையில் யாரும் வேண்டுமென்றே கேட்ச்சை விடுவதில்லை... அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:-

    யாரும் வேண்டுமென்றே கேட்சை விடுவதில்லை. எங்கள் வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. அர்ஷ்தீப் சிங் மற்றும் இந்திய அணி பற்றி கீழ்தரமாக விமர்சிக்கும் செயல் அவமானத்திற்குறியது.

    அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்கு கிடைத்த தங்கம் என்று ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார். இதே போல பாகிஸ்தான் அணி வீரர் முகமது ஹபிஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் இர்பான் பதான் ஆகியோரும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்திய அணிக்கு என்னை அழைத்தால் எப்போதும் தயாராக இருக்கிறேன் என மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். #IPL2019 #CSK
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். அனில் கும்ப்ளேவுக்குப் பின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருந்தார். அஸ்வின் வந்த பின் இந்திய அணியில் ஹர்பஜன் சிங்குக்கு இடம் கிடைக்கவில்லை. கடந்த 2015-ம் ஆண்டுக்குப்பின் சர்வதேச போட்டிக்கான இந்திய அணியில் விளையாடவில்லை.

    ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் மூன்று போட்டிகளில் மட்டுமே களம் இறங்கிய ஹர்பஜன் சிங், இரண்டு முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் விளையாட அழைத்தால், நான் எப்போதுமே தயார்தான் என்று தெரிவித்துள்ளார்.



    இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் முதன்மை பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகின்றனர். டெஸ்டில் மட்டுமே அஸ்வின் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர் ஹர்பஜன்சிங், ‘தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்’ என்று உருக்கமாக கூறியுள்ளார். #IPL2019 #HarbhajanSingh
    சென்னை:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனை நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் ஆட்டத்தின் போக்கு தான் சொத்தையாக அமைந்து விட்டது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.1 ஓவர்களில் 70 ரன்னில் சுருண்டது. பார்த்தீவ் பட்டேல் (29 ரன்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. சென்னை தரப்பில் மூத்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்த எளிய இலக்கையும் சென்னை அணி திக்கித் திணறி வெற்றி கண்ட விதம் குழுமியிருந்த ரசிகர்களை எரிச்சல் அடையச் செய்தது.

    இந்த இலக்கை சென்னை அணி 17.4 ஓவர்களில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணி தொடர்ச்சியாக ருசித்த 7-வது வெற்றி இதுவாகும்.

    போட்டிக்கு பிறகு சேப்பாக்கம் ஆடுகளம் (பிட்ச்) குறித்து அதிருப்தி வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறுகையில், ‘இந்த ஆடுகளத்தன்மை எந்த மாதிரி ஒத்துழைக்கும் என்பதை உறுதியாக கணிக்க முடியவில்லை. இதே ஆடுகளத்தில் எங்களுக்குள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய போது பந்து இந்த அளவுக்கு அதிகமாக சுழன்று திரும்பவில்லை. ஆடுகளம் மிகவும் மெதுவான தன்மையுடன் இருக்கும் என்று ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. பந்து பேட்டுக்கு ஏதுவாக வரவில்லை. இது எனக்கு, 2011-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டுக்குரிய ஆடுகளத்தை நினைவூட்டியது. ஆடுகளத்தன்மை ஒரே மாதிரியாக நீடித்தால், ரன் எடுப்பது கஷ்டம் என்பதை உணர்ந்தோம். இந்த ஆடுகளத்தை நிச்சயம் மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்கள் எடுக்கும் விதத்தில் இருக்க வேண்டும்’ என்றார்.

    பெங்களுரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘எந்த ஒரு அணியும் இந்த மாதிரியான தொடக்கத்தை விரும்பமாட்டார்கள். ஆனாலும் பீல்டிங்கில் வீரர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளித்தது. குறைந்த இலக்கு என்றாலும் 18 ஓவர்கள் வரை ஆட்டத்தை நகர்த்தி சென்றோம்.

    இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. 140 முதல் 150 ரன்கள் எடுத்தால் நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தேன். பேட்டிங்கில் நாங்கள் நன்றாக செயல்பட்டிருக்க வேண்டும். குறைந்தது 110 முதல் 120 ரன்கள் எடுத்திருந்தால் சவாலான ஸ்கோராக இருந்திருக்கும்’ என்றார்.

    ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட சென்னை சுழற்பந்து வீச்சாளர் 38 வயதான ஹர்பஜன்சிங் கூறுகையில், ‘பந்து சுழன்று திரும்பியதுடன், பவுன்சும் ஆனதால் ஆடுகளம் பேட்டிங்குக்கு கடினமாக இருந்தது உண்மை தான். ஆனால் விளையாட முடியாத அளவுக்கு இருந்ததாக சொல்ல முடியாது. ஒரு ஆடுகளத்தில் 170 அல்லது 180 ரன்கள் குவிக்கும் போது யாரும் புகார் கூறமாட்டார்கள். சுழற்பந்து வீச்சுக்கோ அல்லது வேகப்பந்து வீச்சுக்கோ ஆடுகளம் சாதகமாக இருக்கும் போது ஒவ்வொருவருக்கும் பிரச்சினை வந்து விடும். பந்து வீச்சாளர்களுக்குரிய பணியை மக்கள் மறந்து விடுகிறார்கள். பேட்ஸ்மேன்கள் சில நேரம் இது மாதிரி தடுமாறுவது இயல்பு தான். ஏனெனில் இது பேட்டுக்கும், பந்துக்கும் இடையிலான போட்டியாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெங்களூரு வீரர்கள் அவசரகதியான சில ஷாட்டுகளை அடித்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இது 70 ரன்களுக்குரிய ஆடுகளம் அல்ல. பெங்களூரு பேட்ஸ்மேன்கள் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் ஆடியிருந்தால் 120 ரன்கள் வரை எடுத்திருக்கலாம். ஆனாலும் இந்த ஆடுகளம் இந்த அளவுக்கு சுழலுக்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை’ என்றார்.

    ஹர்பஜன்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘என்னுடைய சீருடையின் எண் 27. இன்றைய ஆட்டத்தில் எனது பந்து வீச்சு 4-0-20-3 என்று அமைந்தது. இதன் கூட்டுத்தொகை 27. எனது மகள் ஹினாயாவின் பிறந்த நாள் தேதி 27. இவையாவும் தற்செயல். ஆனால் நான் சம்பாதித்த உங்களோட அன்பும், ஆதரவும் இது போன்ற தற்செயலையும் தாண்டிய மாறா நிரந்தரம். வெகு நாட்கள் கழித்து தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன் இன்று’ என்று குறிப்பிட்டுள்ளார். #IPL2019 #HarbhajanSingh

    இந்தியாவிற்கு எதிராக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி ரஞ்சி டிராபி பிளேட் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறுமா? என ஹர்பஜன் சிங் கிண்டல் செய்துள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 9 விக்கெட் இழப்பிற்பு 649 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பிஷூ அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 94 ரன்கள் அடிப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து தத்தளித்து வருகிறது.

    இந்தியா 555 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஏறக்குறைய இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தற்போதுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ரஞ்சி டிராபி தொடரில் பிளேட் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறுமா? என்று ஹர்பஜன் சிங் கிண்டல் செய்துள்ளார்.

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் ‘‘வெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நாம் எல்லோரும் மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால், அனைவருக்கும் என்னுடைய கேள்வி என்னவென்றால், இந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பிளேட் பிரிவில் இருந்து ரஞ்சி டிராபி காலிறுதிக்கு தகுதிபெறுமா?. எலைட் பிரிவில் இருந்து முடியாது’’ என்று பதவிட்டுள்ளார்.
    ஒரு வீரருக்கு ஒரு விதி, மற்றொரு வீரருக்கு இன்னொரு விதி என்பது நியாயம் அல்ல என்று இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு மீது ஹர்பன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். #INDvWI
    இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் தேர்வு குறித்து சமீப காலமாக விமர்சனம் எழுந்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவிற்கும், கருண் நாயருக்கும் வாய்ப்பு கொடுக்காதது குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் எழுப்பி வரும் நிலையில் ஒரு வீரருக்கு ஒரு விதி, மற்றொரு வீரருக்கு இன்னொரு விதி என்பதில் நியாயம் இல்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘மூன்று மாதங்களான ஒரு வீரரை பெஞ்ச் வைத்து விட்டு அதன்பின் அணியில் தேர்வு செய்யாதது மிகவும் மோசமானது. இது வினோதமாக உள்ளது.



    அவர்கள் தேசிய அணிக்கு எப்படி தேர்வு செய்கிறார்கள், அதற்கான அளவுகோல் என்ன போன்றவற்றின் தேர்வுக்குழுவின் சிந்தனையை பற்றி புரிந்து கொள்வது வேதனையளிக்கிறது.

    ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறை இருப்பதாக அறிகிறேன். சில வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. சில வீரர்கள் திறமையை காண்பிக்க தவறிவிட்டால், அதன்பிறகு ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. இது நியாயமானது அல்ல’’ என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்தியா அணியில் ரோகித் சர்மாவிற்கு இடம் கிடைக்காததால் தேர்வுக்குழு மீது ஹர்பஜன் சிங் சாடியுள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விரைவில் நடக்க இருக்கிறத. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து தொடரில் சொதப்பிய ஷிகர் தவானுக்கு இடம் அளிக்கப்படவில்லை. உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயாங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ரோகித் சர்மாவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா இடம் பெறாததற்கு முன்னாள் வீரர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்வுக்குழு மீது சாடியுள்ளார். ரோகித் சர்மா அணியில் இடம்பெறாதது குறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இல்லை. உண்மையிலேயே தேர்வாளர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?. யாராவது எனக்கு தடயம் (Clue) கொடுக்க முடியாமா? தயது செய்து எனக்கு தெரிவியுங்கள், என்னால் ஜீரணிக்க முடியவில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.
    மயாங்க் அகர்வாலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காததற்கு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கடும் விமர்சனம் செய்துள்ளார். #HarbhajanSingh
    இந்தியா ஒருநாள் கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் 15-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் அணி களம் இறங்க இருக்கிறது. இதற்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    இதில் ரஞ்சி டிராபி மற்றும் உள்ளூர் ஒருநாள் தொடர், இந்தியா ஏ அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மயாங்க் அகர்வாலுக்கு இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

    ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மயாங்க் அகர்வாலை எங்கே? ஏகப்பட்ட ரன்களைக் குவித்த பின்னரும், அவரை இந்திய தேசிய அணிக்காக வீரர்கள் பட்டியலில் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறை என்று நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
    அஸ்வின் விக்கெட் வீழ்த்த இயலாமல் போனதே தோல்விக்கு காரணம் என்று ஹர்பஜன் சிங் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு கொடுத்த இந்த ஆடுகளத்தில் மொயீன் அலி 9 விக்கெட்டுக்கள் அறுவடை செய்தார். ஆனால் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 3 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தினார்.

    ஆஃப் ஸ்பின்னருக்கு ஆடுகளம் ஒத்துழைத்த நிலையில், அஸ்வினின் விக்கெட் வீழ்த்த முடியாத இயலாமைதான் தோல்விக்கு காரணம் என்று ஹர்பஜன் சிங் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘சவுத்தாம்ப்டன் ஆடுகளம் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு கொடுத்தது. குறிப்பிட்ட கரடு முரடான பகுதியில் பந்தை பிட்ச் செய்தால் ஏராளமான விக்கெட்டுக்களை அறுவடை செய்திருக்க முடியும். அதை மொயீன் அலி சரியாக செய்தார். அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

    4-வது டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்தற்கு முக்கிய காரணம் அஸ்வினை விட மொயீன் அலி சிறப்பாக பந்து வீசியதுதான். முதல் முறையாக இந்திய சுழற்பந்து வீச்சாளரை விட, இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக பந்து வீசியதை நான் பார்த்தேன். அஸ்வினால் விக்கெட் வீழ்த்த இயலாததே இந்தியா 1-3 எனத் தொடரை இழக்க முக்கிய காரணம்.



    அஸ்வினின் காயம் எவ்வளவு சீரிஸானது என்று எனக்குத் தெரியாது. அது எவ்வளவு முக்கியமானது என்று அணி நிர்வாகத்திற்கு கட்டாயம் தெரிந்திருக்கும். அவர் உடற்தகுதி பெற்றிருந்தால், அவரிடம் எதிர்பார்த்ததை வெளிப்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டார்’’ என்றார்.
    மெட்ராஸ் தினத்தை ஒட்டி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #MadrasDay #HarbhajanSingh @ChennaiIPL @harbhajan_singh

    சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அணியில் இணைந்தது முதலே தமிழில் அவ்வப்போது ட்விட் செய்து ரசிகர்களை அதிர வைப்பார். ஒவ்வொரு போட்டி முடிவிலும் அவரின் தமிழ் ட்வீட்டுக்கு லைக்ஸ்கள் குவியும்.

    இந்நிலையில், மெட்ராஸ் தினத்தை ஒட்டி ஸ்பெஷல் வாழ்த்து ஒன்றை அவர் தெரிவித்துள்ளார். அதில், 

    கல கல னு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு
    பரபரப்ப பாரு இங்க மக்கள் கூட்டம் ஜோரு
    ஐபில் னு அந்த பக்கம் வந்தோம் ஒரு நாளு அது செம தாறு மாறு 
    என்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்
    இன்னக்கி ஊருக்கு 379வது பிறந்தநாள் 
    வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன் 

    என ஹர்பஜன் சிங் ட்வீட்டியுள்ளார். 




    ஹர்பஜன் சிங்கின் ஆட்டத்தை விட அவரது தமிழ் ட்வீட்டுகள் அனைவரையும் கவர்ந்த நிலையில், அவருக்கு சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ள பிறந்த நாள் வாழ்த்து வியக்க வைத்துள்ளது.

    சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இம்முறை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அணியில் இணைந்தது முதலே தமிழில் அவ்வப்போது ட்விட் செய்து ரசிகர்களை அதிர வைத்தார். ஒவ்வொரு போட்டி முடிவிலும் அவர் தமிழில் என்ன பதிவிட உள்ளார் என பலர் எதிர்பார்க்க தொடங்கினர்.

    ஹர்பஜன் சிங்கின் ஆட்டத்தை விட அவரது தமிழ் ட்வீட்டுகள் அனைவரையும் கவர்ந்தது. தனது தமிழ் ரசிகர் ஒருவரின் மூலமே அவர் தமிழில் ட்வீட் செய்து வந்தாலும், அவரது இந்த செயல் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தது. இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹர்பஜன் சிங்குக்கு சச்சின் டெண்டுல்கர் சிறப்பு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.



    ‘விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, @harbhajan_singh! ஹவ் எ ப்ளாஸ்ட்’ என சச்சின் ட்வீட் செய்துள்ளார். சச்சின் தெரிவித்த பிறந்தநாளை விட அவர் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது இன்றைய இணையத்தை வைரலாக்கியுள்ளது.
    தெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா உன் அன்பிற்கு முன்னே என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தந்தையர் தின வாழ்த்துக்களை தமிழில் டுவிட் போட்டு அசத்தியுள்ளார். #HarbhajanSingh ‏#FathersDay
    மும்பை:

    இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வானவர் ஹர்பஜன் சிங். இதையடுத்து, ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் போட்டு ரசிகர்களை அசத்தி வருகிறார். தமிழில் அசத்தலாக பல டுவீட்களை பதிவு செய்து கலக்கி வருகிறார். 

    இன்று நாடு முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பிரபலங்கள் தங்கள் அப்பாக்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஹர்பஜன் சிங்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் தந்தையர் தின வாழ்த்துக்களை உருக்கத்துடன் தமிழில் டுவிட் போட்டு அசத்தியுள்ளார். அத்துடன், சிறு வயதில் தனது தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். 

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், தெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா உன் அன்பிற்கு முன்னே. ஈடு இணை இல்லா அற்புதம் நீ!! வாழ்க்கையின் அர்த்தம் புரியவைத்த தீர்க்கதரிசி நீ!! சுயநலம் என்ற வார்த்தை தெரியாத வள்ளல் நீ!! உலகின் அனைத்து தந்தையர்க்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் நான் உட்பட  அப்பா... என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

    ஹர்பஜனின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் ஹர்பஜனுக்கு தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    #HarbhajanSingh ‏#FathersDay
    சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2018 சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் ரோகித் சர்மா சாதனையுடன் ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு இணைந்துள்ளனர். #IPL2018
    மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற அணியில் இடம்பிடித்த வீரர் என்ற பெருமை பெற்றிருந்தார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒரு முறையும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மூன்று பேரையும் இடம்பிடித்துள்ளார்.

    இவர்தான் அதிக கோப்பையை வென்ற வீரராக இருந்தார். இவருடன் தற்போது அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங் ஆகியோர் இணைந்துள்ளனர். இருவரும் நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தனர். அப்போது மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்ஸ் பட்டம் வென்றிருந்தது.



    இந்த முறை இரண்டு பேரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்கள். 2018 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அம்பதி ராயுடும், ஹர்பஜன் சிங்கும் நான்கு முறை கோப்பையை வென்ற ரோகித் சர்மா சாதனையுடன் இணைந்துள்ளனர்.

    2009-ம் ஆண்டு டெக்கார் சார்ஜர்ஸ் அணியும், 2013, 2015 மற்றும் 2017-ல் மும்பை இந்தியன்ஸ் அணியும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
    ×