search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின் விக்கெட் வீழ்த்த முடியாத இயலாமையே தோல்விக்கு காரணம்- ஹர்பஜன் சிங் சொல்கிறார்
    X

    அஸ்வின் விக்கெட் வீழ்த்த முடியாத இயலாமையே தோல்விக்கு காரணம்- ஹர்பஜன் சிங் சொல்கிறார்

    அஸ்வின் விக்கெட் வீழ்த்த இயலாமல் போனதே தோல்விக்கு காரணம் என்று ஹர்பஜன் சிங் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு கொடுத்த இந்த ஆடுகளத்தில் மொயீன் அலி 9 விக்கெட்டுக்கள் அறுவடை செய்தார். ஆனால் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 3 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தினார்.

    ஆஃப் ஸ்பின்னருக்கு ஆடுகளம் ஒத்துழைத்த நிலையில், அஸ்வினின் விக்கெட் வீழ்த்த முடியாத இயலாமைதான் தோல்விக்கு காரணம் என்று ஹர்பஜன் சிங் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘சவுத்தாம்ப்டன் ஆடுகளம் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு கொடுத்தது. குறிப்பிட்ட கரடு முரடான பகுதியில் பந்தை பிட்ச் செய்தால் ஏராளமான விக்கெட்டுக்களை அறுவடை செய்திருக்க முடியும். அதை மொயீன் அலி சரியாக செய்தார். அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

    4-வது டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்தற்கு முக்கிய காரணம் அஸ்வினை விட மொயீன் அலி சிறப்பாக பந்து வீசியதுதான். முதல் முறையாக இந்திய சுழற்பந்து வீச்சாளரை விட, இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக பந்து வீசியதை நான் பார்த்தேன். அஸ்வினால் விக்கெட் வீழ்த்த இயலாததே இந்தியா 1-3 எனத் தொடரை இழக்க முக்கிய காரணம்.



    அஸ்வினின் காயம் எவ்வளவு சீரிஸானது என்று எனக்குத் தெரியாது. அது எவ்வளவு முக்கியமானது என்று அணி நிர்வாகத்திற்கு கட்டாயம் தெரிந்திருக்கும். அவர் உடற்தகுதி பெற்றிருந்தால், அவரிடம் எதிர்பார்த்ததை வெளிப்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டார்’’ என்றார்.
    Next Story
    ×