search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹர்பஜன்சிங்"

    • நாக்பூர் டெஸ்டில் 36 வயதான அஸ்வின் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார்.
    • 31-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார். சொந்த மண்ணில் 25 தடவை 5 விக்கெட் எடுத்துள்ளார்.

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் அவரது பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.

    நாக்பூர் டெஸ்டில் 36 வயதான அஸ்வின் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 42 ரன் கொடுத்து 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 37 ரன் கொடுத்து 5 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    அவர் 89 டெஸ்டில் விளையாடி 457 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 31-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார். சொந்த மண்ணில் 25 தடவை 5 விக்கெட் எடுத்துள்ளார். இதன் மூலம் கும்ப்ளேயின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார். இலங்கையின் முரளீதரன் 45 முறையும், ஹெராத் 26 தடவையும் 5 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக அஸ்வின், கும்ப்ளே உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் 97 விக்கெட் கைப்பற்றி ஹர் பஜன்சிங் சாதனையை முறியடித்தார்.

    ஹர்பஜன்சிங் 18 டெஸ்டில் 95 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்தில் இருந்தார். நாக்பூர் டெஸ்டில் 8 விக்கெட் எடுத்தன் மூலம் அஸ்வின் அவரை முந்தினார். அஸ்வின் 19 டெஸ்டில் 97 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்தை பிடித்தார். ஹர்பஜன்சிங் 3-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். கும்ப்ளே 111 விக்கெட் வீழ்த்தி (20டெஸ்ட்) முதல் இடத்தில் உள்ளார்.

    ×