search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "germany"

    உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சுவீடன் அணியும் ஜெர்மனி அணியும் மோதுகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் ஜெர்மனி அணி உள்ளது. #Fifa2018 #WorldCup2018
    சோச்சி:

    உலககோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனிக்கு முதல் ஆட்டத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது.

    4 முறை உலக கோப்பையை வென்ற அந்த அணி தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மெக்சிகோவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.

    ஜெர்மனி அணி 2-வது ஆட்டத்தில் சுவீடனை இன்று சந்திக்கிறது. இரவு 11.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஜெர்மனிக்கு உள்ளது. தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் ஜெர்மனி வீரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாடுவார்கள்.

    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஜெர்மனி தனது ஆக்ரோ‌ஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.

    சுவீடன் அணி ‘டிரா’ செய்யும் நோக்கில் விளையாடுவார்கள். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் தென்கொரியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. சுவீடன் வெற்றி பெற்றால் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

    இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ஜெர்மனி 15-ல், சுவீடன் 12-ல், வெற்றி பெற்றுள்ளன. 9 ஆட்டம் ‘டிரா’ ஆனது. கடைசியாக 2013-ல் மோதிய ஆட்டத்தில் ஜெர்மனி 5-3 என்ற கணக்கில் வென்று இருந்தது.

    இதே பிரிவில் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மெக்சிகோ- தென்கொரியா அணிகள் மோதுகின்றன. இதில் மெக்சிகோ வென்று 2-வது சுற்றில் நுழைய அதிக வாய்ப்பு உள்ளது. கொரியா தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

    மெக்சிகோ தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தி இருந்தது. தென்கொரியாவை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் மெக்சிகோ 6 முறையும், தென்கொரியா 2 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டிரா ஆனது.

    ‘ஜி’ பிரிவில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம்- துனிசியா அணிகள் மோதுகின்றன.

    பெல்ஜியம் தொடக்க ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தியது. இதனால் அந்த அணி துனிசியாவை வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெறும்.

    துனிசியா தொடக்க ஆட்டத்தில் 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோற்றது. இன்றும் தோல்வி அடைந்தால் அந்த அணி வெளியேற்றப்படும்.

    இரு அணிகளும் 3 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இரு அணிகளும் தலா 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டிரா’ ஆனது. #Fifa2018 #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் நடப்பு சாம்பியனான ஜெர்மனியை 1-0 என மெக்சிகோ அணி வீழ்த்தியது. #WorldCup2018 #FIFA2018 #GERMEX

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் செர்பியா அணி கோஸ்டா ரிகா அணியை வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் ஜெர்மனி - மெக்சிகோ அணிகள் மோதின.

    முதல் பாதி நேர ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் ஹிர்விங் லொசானோ கோல் அடித்தார். இதனால் மெக்சிகோ அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.



    இதைத்தொடர்ந்து நடைபெற உள்ள மூன்றாவது ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #WorldCup2018 #FIFA2018 #GERMEX
    உலக கோப்பை கால்பந்து போட்டியையொட்டி தனியார் அமைப்பு ஆன்லைன் மூலம் ஓட்டெடுப்பு நடத்தியதில் ஜெர்மனிக்கு அதிகமானோர் வாக்களித்துள்ளனர். #FIFA2018 #WorldCup #Germany
    உலக கோப்பை போட்டியையொட்டி தனியார் அமைப்பு ஆன்லைன் மூலம் ஓட்டெடுப்பு நடத்தியது. 63 ஆயிரம் பேர் வாக்களித்ததில் ஜெர்மனிக்கு கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    27.9 சதவீதம் பேர் ஜெர்மனி உலக கோப்பையை கைப்பற்றும் என்று தெரிவித்து உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக அர்ஜென்டினா (25.5 சதவீதம்), பிரேசில் (23.9), ஸ்பெயின் (8.8), பிரான்ஸ் (6.7) ஆகிய அணிகள் உள்ளன. 7.2 சதவீதம் பேர் யாருக்கும் வாக்களிக்கவில்லை.

    சிறந்த வீரருக்கான தங்க ஷூ விருது பிரேசிலை சேர்ந்த நெய்மருக்கு கிடைக்கும் என்று 26.8 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக மெஸ்சி (26.2), ரொனால்டோ (20.9) உள்ளனர்.

    ஆசிய கண்டத்தில் உள்ள அணிகளில் தென்கொரியா சிறந்தது என்று 38.2 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். ஜப்பான் (36.4), ஈரான் (18.4), சவுதி அரேபியா (6.7) ஆகியவை அதற்கு அடுத்த நிலையில் உள்ளன. #FIFA2018 #WorldCup #Germany
    கனடாவில் நடந்து முடிந்த ஜி7 உச்சி மாநாட்டில் கருத்து வேறுபாடு காரணமாக டிரம்ப் வெளியேறி காட்டமாக ட்வீட் செய்ததற்கு, ஜெர்மனி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. #G7 #G7Summit
    முனீச்:

    கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் ஜி-7 உச்சி மாநாடு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் கடந்த 8, 9 தேதிகளில் நடந்தது. 

    உக்ரைனின் ஒரு பகுதியாக விளங்கிய கிரிமியாவை தன்னோடு இணைத்துக்கொண்டதால் இந்த அமைப்பில் இருந்து ரஷியா நீக்கப்பட்டது. ஆனால் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷியா விரும்பியது. இதை டிரம்ப் பேசும்போது வெளிப்படுத்தினார். அப்போது அவர், ரஷியா மீண்டும் இந்த அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

    ஆனால், இதில் ரஷியா பங்கேற்கக்கூடாது என்று பிற உறுப்பு நாடுகள் கருத்து கொண்டு உள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் திட்டவட்டமாக தெரிவித்தார். 

    மேலும், உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது டிரம்ப் இறக்குமதி வரியை விதித்து இருப்பதும் அவருக்கு எதிரான நிலையை பிற நாடுகள் எடுக்க வைத்து விட்டன. டிரம்பின் இந்த முடிவு சட்ட விரோதமானது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவிக்க, கடுப்பான டிரம்ப் கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே அங்கிருந்து வெளியேறி, சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார்.

    இதனை அடுத்து, அனைத்து தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கூட்டறிக்கை வெளியிட்டனர். விமானத்தில் இருந்த படியே ஜி7 மாநாடு குறித்து காரசாரமாக டிரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டார். மேலும், ஜி7 கூட்டறிக்கைக்கு தான் அளித்த ஒப்புதலை டிரம்ப் திரும்பப்பெற்றார்.

    மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கடுமையான விமர்சனத்தையும் டிரம்ப் முன்வைத்திருந்தார். இந்நிலையில், டிரம்ப் ட்வீட் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜெர்மனி வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ், “அளவுக்கு அதிகமாக வைத்திருந்த நம்பிக்கையை ஒற்றை ட்வீட் மூலம் குறுகிய நேரத்தில் நீங்கள் உடைத்து விட்டீர்கள். அமெரிக்காவே முதன்மை என்பதற்கு ஐரோப்பிய ஒன்றியமே பதிலாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

    ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டதற்கு, தற்போதைய அதிபர் ப்ராங் ஸ்டெய்ன்மெய்ர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
    பெர்லின்:

    ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் ஓரிணச்சேர்க்கை கடும் குற்றமாக கருதப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். குறிப்பாக இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் பலர் தேடித்தேடி கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் நடந்த இந்த தவறுகளுக்கு தற்போதைய அதிபர் ப்ராங் ஸ்டெய்ன்மெய்ர் ஓரினச்சேர்க்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.  ‘அப்போது அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தற்போது ஜெர்மனியில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்’ என அவர் தெரிவித்துள்ளார்.
    ஜெர்மனியில் மாசு கட்டுப்பாட்டை தடுக்க வருகிற 31-ந்தேதி முதல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #DieselVehicles
    பிராங்பர்ட்:

    ஜெர்மனியின் துறைமுக நகரம் ஹாம்பர்க் இங்கு ஏராளமான கண்டெய்னர் லாரிகளில் சரக்கு எடுத்து செல்லப்படுகிறது. துறைமுகத்துக்கு அதிக அளவில் வந்து செல்லும் டீசல் வாகனங்களால் நகரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாசு, ஏற்பட்டுள்ளது.

    எனவே அதை தடுக்க வருகிற 31-ந்தேதி முதல் இங்கு டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு 31-ந் தேதிக்கு பிறகு யூரோ- 6 புகை தரச்சான்று இல்லாத டீசல் வாகனங்களை இயக்க முடியாது.

    இதனால் 90 சதவீத டீசல் வாகனங்கள் ஹாம்பர்க் நகருக்குள் இயங்க முடியாத நிலை உள்ளது. எனினும், உள்ளூர்வாசிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு சிறிது காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #DieselVehicles
    ஜெர்மனியின் பிரிபாக்-பெச்சின்கென் பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    பெர்லின்:

    ஜெர்மனியின் பிரிபாக்-பெச்சின்கென் மாவட்டத்துக்கு உட்பட்ட சார்ப்ரூச்கென் நகரில் நேற்று ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதியில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், அவரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர் தான் எனவும் கூறப்படுகிறது. #tamilnews
    ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கெல் இன்று ஆலோசனை நடத்தினார். #IranNuclearDeal #Putin #Merkel
    மாஸ்கோ:

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.

    ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்டதாகும்.

    இதற்கிடையே, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்க பாசம் கொண்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    அதேவேளையில் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் ரஷியா, சிரியா உள்ளிட்ட சில நாடுகள் டிரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகியவை அறிவித்துள்ளன.

    இந்நிலையில், ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கெல் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இன்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஏஞ்சலா மெர்க்கெல் ஆலோசனை மேற்கொண்டார். #IranNuclearDeal #Putin #Merkel
    ×