search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுவீடனுடன் இன்று மோதல்- வெற்றி நெருக்கடியில் ஜெர்மனி
    X

    சுவீடனுடன் இன்று மோதல்- வெற்றி நெருக்கடியில் ஜெர்மனி

    உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சுவீடன் அணியும் ஜெர்மனி அணியும் மோதுகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் ஜெர்மனி அணி உள்ளது. #Fifa2018 #WorldCup2018
    சோச்சி:

    உலககோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனிக்கு முதல் ஆட்டத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது.

    4 முறை உலக கோப்பையை வென்ற அந்த அணி தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மெக்சிகோவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.

    ஜெர்மனி அணி 2-வது ஆட்டத்தில் சுவீடனை இன்று சந்திக்கிறது. இரவு 11.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஜெர்மனிக்கு உள்ளது. தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் ஜெர்மனி வீரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாடுவார்கள்.

    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஜெர்மனி தனது ஆக்ரோ‌ஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.

    சுவீடன் அணி ‘டிரா’ செய்யும் நோக்கில் விளையாடுவார்கள். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் தென்கொரியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. சுவீடன் வெற்றி பெற்றால் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

    இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ஜெர்மனி 15-ல், சுவீடன் 12-ல், வெற்றி பெற்றுள்ளன. 9 ஆட்டம் ‘டிரா’ ஆனது. கடைசியாக 2013-ல் மோதிய ஆட்டத்தில் ஜெர்மனி 5-3 என்ற கணக்கில் வென்று இருந்தது.

    இதே பிரிவில் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மெக்சிகோ- தென்கொரியா அணிகள் மோதுகின்றன. இதில் மெக்சிகோ வென்று 2-வது சுற்றில் நுழைய அதிக வாய்ப்பு உள்ளது. கொரியா தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

    மெக்சிகோ தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தி இருந்தது. தென்கொரியாவை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் மெக்சிகோ 6 முறையும், தென்கொரியா 2 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டிரா ஆனது.

    ‘ஜி’ பிரிவில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம்- துனிசியா அணிகள் மோதுகின்றன.

    பெல்ஜியம் தொடக்க ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தியது. இதனால் அந்த அணி துனிசியாவை வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெறும்.

    துனிசியா தொடக்க ஆட்டத்தில் 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோற்றது. இன்றும் தோல்வி அடைந்தால் அந்த அணி வெளியேற்றப்படும்.

    இரு அணிகளும் 3 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இரு அணிகளும் தலா 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டிரா’ ஆனது. #Fifa2018 #WorldCup2018
    Next Story
    ×