search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fisherman"

    • தூத்துக்குடி சுனாமி காலனியை சேர்ந்தவர் கணேசன் மீனவர்
    • இவருக்கு சமீபகாலமாக உடல்நலம் குறைவு ஏற்பட்டுள்ளது

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சுனாமி காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 58). மீனவர். இவருக்கு திரும ணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது.

    இவருக்கு சமீபகாலமாக உடல்நலம் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு கணேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வம்பாகீரப்பாளையத்தி ல் சண்டையை சமாதானம் செய்த மீனவரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அப்போது செல்லுபூச்சி நீ என்ன எங்களை சமாதானம் செய்வது என கூறி மதியழகனை கையால் தாக்கினார்.

    புதுச்சேரி:

    வம்பாகீரப்பாளையத்தில் சண்டையை சமாதானம் செய்த மீனவரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதி என்ற மதியழகன் (வயது26). மீனவர். இரவு இவர் கடற்கரைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் அருகே வந்த போது அதே பகுதியை சேர்ந்த செல்லுபூச்சி என்ற செல்வமுருகனும், அருள் என்பவரும் ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக்கொண்டி ருந்தனர். இதனை பார்த்த மதியழகன் சண்டையை சமாதானம் செய்ய முன்றார்.

    அப்போது செல்லுபூச்சி நீ என்ன எங்களை சமாதானம் செய்வது என கூறி மதியழகனை கையால் தாக்கினார். இதனை மதியழகன் தட்டிக்கேட்ட போது செல்லுபூச்சி அங்கு கிடந்த கல்லை எடுத்து மதியழகன் தலையில் தாக்கினார்.

    மேலும் அங்கு வந்த செல்லுபூச்சியின் மகன்களான காளியப்பன், அஜித் மற்றும் செல்லுபூச்சியின் மனைவி அஞ்சாலாட்சி ஆகியோரும் சேர்ந்து மதியழகனை தாக்கினர். இதனால் வலி தாங்காமல் மதியழகன் அலறவே செல்லுபூச்சி மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த மதியழகனை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் இதுகுறித்து மதியழகன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படகில் இருந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் படுகாயம் அடைந்துள்ளார்.
    • படுகாயமடைந்த மீனவரை கடற்படையினரே மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    படகை நிறுத்துமாறு கூறிய போது, நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த கடற்படையினர் படகை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.

    இதில், படகில் இருந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    படுகாயமடைந்த மீனவரை கடற்படையினரே மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் அடுத்த மாதம் நவம்பர் 4-ந்தேதி நடைபெற உள்ளது
    • கூட்டத்தில் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், ஊர்த்தலைவர்கள், பெரியவர்கள் பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் அடுத்த மாதம் நவம்பர் 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், ஊர்த்தலைவர்கள், பெரியவர்கள் பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும்.

    அப்பொருள் மீதான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

    • தொடர்ந்து பெய்துவரும் மழையால் வேதாரண்யத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது.
    • மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் உப்பு ஏற்றுமதி பணியும் அடியோடு பாதிக்கபட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்வே தாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது.

    இதனால் வயல்களில் ஒரு அடி தண்ணீர் தேங்கி உள்ளது.

    இதனால் மானாவாரி பகுதி விவசாயிகள் கோடை உழவு செய்ய முடியமாலும், நேரடி நெல் விதைப்பு செய்ய முடியாமல் உள்ளனர்.

    தொடர்ந்து பெய்துவரும் மழையால் வேதாரண்யத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது.

    அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு,கடிநெல்வயல், பகுதியில் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் உப்பு ஏற்றுமதி பணியும் அடியோடு பாதிக்கபட்டுள்ளது.

    மழையால்சுமார் 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குசெல்லவில்லை.

    தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது விட்டுவிட்டு மழை பெய்ததால்வியாபாரம் பாதிக்கப்பட்டு கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    • தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த எமில் லாரன்ஸ் (வயது36). மீனவர்.
    • தருவைகுளம் கடற்கரையிலிருந்து சுமார் 250 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்தபோது, படகில் இருந்து எமில் லாரன்ஸ் எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த எமில் லாரன்ஸ் (வயது36). மீனவர். இவர் கடலில் பல நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்து வருகிறார்.

    மீனவர் மாயம்

    இந்நிலையில் கடந்த 4-ந் தேதி எமில் லாரன்ஸ் தருவைக்குளம் கடற்கரையிலிருந்து சக மீனவர்கள் 11 பேருடன் கேரள மாநிலம் கொச்சின் கடற்கரை பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் இன்று கரை திரும்ப வேண்டும். இதற்கிடையே மீனவர்கள் மீன் பிடித்துவிட்டு தருவைக்குளம் கடற்கரைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்துள்ளனர்.

    தருவைகுளம் கடற்கரையிலிருந்து சுமார் 250 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்தபோது, படகில் இருந்து எமில் லாரன்ஸ் எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்துள்ளார். சகமீனவர்கள் நீண்டநேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    ஹெலிகாப்டர் உதவியுடன்

    இதைத்தொடர்ந்து கொச்சின் கடற்கரை போலீசார், எமில் லாரன்சை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கொச்சினில் இருந்து மீனவரை தேடும் பணிக்காக வரவழைக்கப்பட்டது. அதன்மூலம் மீனவரை தேடி வருகின்றனர். மேலும் கடலோர காவல்படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 9 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைப்படுத்தி உள்ளனர்.
    • இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதவது,

    கடந்த 10ம்தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 9 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைப்படுத்தி உள்ளனர்.

    இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இலங்கையின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியில் அவர்களுக்கு உதவியாக இந்தியா பல்வேறு நிதி உதவிகள், பெட்ரோலிய பொருட்கள், மருந்து பொருட்களை வழங்கி உதவிகரமாக உள்ளது.

    இப்படிப்பட்ட சூழலிலும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் தொடர்கிறது. இது தொடர்பாக எந்த அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது. தமிழக முதல்-அமைச்சர் இது சம்பந்தமாக மத்திய அரசை வலியுறுத்தி அந்த மீனவர்களையும், படகுகள், மீன்பிடி வலைகளையும் மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இலங்கையின் தற்போதைய சூழலை வைத்து கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த 7 மீனவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேவிக் கருவிகளை வழங்கி தொடக்கிவைத்தார். #EdappadiPalanisamy #ADMK
    சென்னை:

    ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீன்பிடி படகு குழுக்களுக்கு ஆழ்கடல் தகவல் தொடர்பு சாதனைங்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று 2018-19-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் துணை முதல்-அமைச்சர் அறிவித்தார். அதை செயல்படுத்தும் விதமாக, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நேவிக் என்ற செயற்கைகோள் மூலம் குறுஞ்செய்தி பெறும் ஆழ்கடல் தகவல் தொடர்பு கருவியை 80 மீன்பிடி படகு குழுக்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, சென்னை, நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த 7 மீனவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேவிக் கருவிகளை வழங்கி தொடக்கிவைத்தார்.

    நேவிக் கருவியானது, இந்திய மண்டல வழிகாட்டி செயற்கைகோள் அமைப்பின் உதவியுடன் செயல்படுகிறது. வானிலை எச்சரிக்கை, வானிலை முன்னறிவிப்பு, சுனாமி, நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கை இடர்பாடுகள் குறித்த குறுஞ்செய்திகளை பெற்று, புளூடூத் இணைப்பு மூலம் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் கொண்ட மீனவர்களின் கைப்பேசிக்கு அனுப்புகிறது.

    மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    வேதாரண்யம் அருகே நடுக்கடலில் நாகை மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர், மற்றும் இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீனவர்களை கண்மூடித்தனமாக தாக்கி இலங்கை மீனவர்கள் மீன்களை கடலில் வீசியும், வலைகளை அறுத்தும் சேதப்படுத்தினர்.

    தொடர்ந்து இதுபோல் இலங்கை கடற்படையினரும், மீனவர்களும் நடத்தி வரும் தாக்குதலை மத்திய- மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் நாகை மீனவர்களை, இலங்கை மீனவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கீழையூர் அருகே விழுந்த மாவடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் இளம்பரிதி.

    நேற்று மாலை 3 மணியளவில் இவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் ராஜேந்திரன், காளிதாஸ், மணிமாறன், மற்றும் அக்கரைபேட்டையை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இந்த நிலையில் நள்ளிரவில் கோடியக்கரை தென் கிழக்கே நாகை மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அதிவேகமாக ஒரு விசைப்படகில் இலங்கை மீனவர்கள் சுமார் 10 பேர் வந்தனர். அவர்கள் திடீரென நாகை மீனவர்கள் படகை சுற்றி வளைத்து அதில் ஏறினர்.

    பின்னர் மீனவர்களை உருட்டுக்கட்டையால் தாக்கி படகில் இருந்த மீன்களை கடலில் கொட்டினர். அப்போது மீனவர் ராஜேந்திரனை அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. மேலும் மீன்வலைகளை அரிவாளால் அறுத்தும், ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தினர்.

    பிறகு சிறிதுநேரத்தில் இலங்கை மீனவர்கள் தங்களது படகில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதையடுத்து நாகை மீனவர்கள் இன்று அதிகாலை படகில் கரை திரும்பினர். பின்னர் இலங்கை மீனவர்கள் தாக்கிய சம்பவத்தை சக மீனவர்களிடம் தெரிவித்தனர். இதனால் மீனவ கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.


    இலங்கை மீனவர்கள் தாக்குதலில் காயம் அடைந்த இளம்பரிதி, ராஜேந்திரன், காளிதாஸ், மணிமாறன், சக்திவேல் ஆகிய 5 பேரும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் பற்றி நாகை கடலோர காவல் படையினரிடமும் புகார் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அவர்கள் நாகை மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகை மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுவை தேங்காய்த் திட்டில் மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை தேங்காய்த் திட்டில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து புதுவையை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்வது வழக்கம். மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் அடிக்கடி அடைப்பு ஏற்படும். இதனால் படகுகளில் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்படும்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வம்பாகீரப்பாளையம் முகத்துவாரம் மணல் மேடிட்டு அடைத்தது. இதனால் கடந்த 10-ந்தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    அதோடு துறைமுக முகத்துவாரத்தை உடனடியாக தூர்வார வேண்டும். கடல்பகுதியின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்திற்கு கற்களை கொட்டி ஆழப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    சில நாட்களுக்கு முன்பு விசைப்படகு, கன்னா படகு, எப்.ஆர்.பி. ஆகியவற்றில் கறுப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இந்நிலையில் இன்று தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் முன்பு மீனவர்கள் ஒன்று கூடினர். அங்கு வாசலில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். செயலாளர் கவி, பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் துறைமுகத்தில் உள்ள மீனவர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்ததால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    மீனவர்கள் போலீசார் தடையை மீறி உள்ளே புகுந்து மீன்வளத்துறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டால் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போராட்டம், 18 மீனவ கிராமங்களை இணைத்து பந்த் போரட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    கேரளா வெள்ள பாதிப்பின் போது பொது மக்களுக்கு உதவிய மீனவருக்கு மஹிந்திரா நிறுவனம் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. #Marazzo



    இந்தியாவின் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்ட கேரளா வெள்ள பாதிப்பு அம்மாநிலத்தில் பல உயிர்களை காவு வாங்கியதோடு, பொருட் சேதங்களையும் ஏற்படுத்தியது.

    இயற்கை சீற்றத்தால் மாநிலமே சீரழிந்த போதும், மனம் தளராமல் களத்தில் இறங்கி பொது மக்களுக்கு உதவி செய்ய பலர் முன்வந்தனர். அவ்வாறு உதவ வந்தவர்களில் ஒருவர் தான் ஜெய்சல் கே.பி. இதேபோன்று ஏராளமான மீனவர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களை காப்பாற்றினர்.



    இவர்கள் சேவையை பாராட்டி மாநில அரசு சார்பில் பாராட்டுச் சான்றிதழ்களை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வழங்கினார்.

    மீனவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்ட போது மழை வெள்ளத்தில் சிக்கிய சில பெண்களை காப்பாற்றி படகில் ஏற்றினார்கள். அப்போது சில பெண்கள் படகில் ஏற சிரமப்பட்டனர். 

    இதை பார்த்த ஜெய்சால் என்ற மீனவர் வெள்ள நீரில் படுத்து தனது முதுகையே படியாக்கி பெண்கள் படகில் ஏற உதவினார். மனிதாபிமானமிக்க இவரது இந்த செயலை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதைப்பார்த்ததும் அந்த மீனவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது.



    இந்த நிலையில் மீனவர் ஜெய்சாலின் சேவையை பாராட்டி மஹிந்திரா நிறுவனம் ஜெய்சலுக்கு புதிய காரை பரிசாக வழங்கி உள்ளது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள மந்திரி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு காரை மீனவரிடம் வழங்கினார்.

    இதுபற்றி மீனவர் ஜெய்சால் கூறும்போது நான், எதையும் எதிர்பார்க்காமல் மனிதாபிமான அடிப்படையில்தான் வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் ஈடுபட்டேன். எனக்கு இது போன்ற பரிசு, பாராட்டுக்கள் கிடைக்கும் என்று நினைக்க வில்லை. இந்த காரையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்துவேன் என்றார்.

    மஹிந்திரா சார்பில் வழங்கப்பட்டு இருக்கும் மராசோ கார் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரூ.9.99 லட்சம் எனும் துவக்க விலையில் கிடைக்கும் மராசோ தற்சமயம் டீசல் வேரியன்ட் மட்டுமே கிடைக்கிறது. மஹிந்திரா மராசோ மாடலில் 1.5 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 



    இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. மஹிந்திரா மராசோ லிட்டருக்கு 17.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொன் பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

    இந்தியாவில் புதிய மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    கேரள மாநிலத்தையே புரட்டி போட்ட மழை வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க உதவிய மீனவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #KeralaFloods #Congress #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசு அமைத்து இருந்த மீட்பு குழுக்கள் மற்றும் இராணுவ படையினர் மிகவும் கடுமையாக போராடினர்.

    இந்த போராட்டத்தில்,கேரள மீனவர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. தங்களது படகுகள் போன்ற பல்வேறு வழிகளில் மீனவர்கள் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தனர். இதையடுத்து கேரளாவில் மழை விடுத்த நிலையில், தற்போது சீரமைக்கும் பணியில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், கேரள மழை வெள்ள சேதங்களை பார்வையிட  இன்று கேரளா வந்தடைந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  ஹெலிகாப்டர் மூலம் செங்கனூர் பகுதிக்கு சென்றார். அங்குள்ள ஒரு முகாமுக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, அங்கு தங்கியிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.



    செங்கனூர் பகுதியை பார்வையிட்ட பின்பு, ராகுல்காந்தி ஆலப்புழா சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், கேரள வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது உதவிய மீனவர்களுக்கு கேடயங்களை வழங்கி, வாழ்த்து கூறி கவுரவித்தார்.

    இதேபோல், நாளை கேரள முதல்மந்திரி பிணராயி விஜயன் தலைமையில் மீனவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நிசாகாந்தி அரங்கத்தில் நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை மந்திரி மெர்சி குட்டி அம்மா, சுற்றுலாத்துறை மந்திரி கடகம்பள்ளி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #Congress #RahulGandhi
    ×