search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆழ்கடல்"

    • உச்சிப்புளி அருகே ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
    • முகாமை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே அரியமான் கிராமத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயல லிதா மீன்வளப் பல்கலைக்க ழகத்தில் மீன்வளத்தொழில் காப்பகம், தொழில்சார் பயிற்சி இயக்குனரகம் மற்றும் ராமநாதபுரம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழில்நுட்பம் குறித்த ஒரு வாரகால உள்வளாக பயிற்சியை தொடங்கியது.

    அதற்கான தொடக்க விழா நேற்று அரியமான் கிராமத்தில் நடந்தது. விழா விற்கு மீன்வளத் தொழில் காப்பக இயக்குநர் முனை வர் நீதிச்செல்வன், தலைமை தாங்கினார். உத விப் பேராசிரியர் கலைய ரசன் வரவேற்றார். ராமநா தபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசு கையில், மீனவர்கள் படகு ஓட்டுநர் உரிமம் பெற வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். ராமேசுவரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானி ஆழ்கடல் மீன்பிடிப்பு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக கூறினார்.

    பயிற்சியில் ராமேசுவரம் பகுதியை சார்ந்த 20 மீனவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு திறன் மேம்பாட் டுக் கழகம், உதவி இயக்குநர் குமரவேல், உதவி இயக்குநர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கேப் டன் சகாயரெக்ஸ் இயக்கு னரக ஊழியர்களுடன் இணைந்து விழா ஏற் பாட்டை செய்தார். மாணவி கிருத்திகா நிகழ்ச்சியை தெகுத்து வழங்கினார். தானி யங்கி பொறியாளர் சிவ சுடலைமணி நன்றி கூறினார்.

    • ஆழ்கடல் மீன்களின் குகை கண்காட்சிைய காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைக்கிறார்.
    • இதற்கான ஏற்பாடுகளை பொருட்காட்சி அமைப்பா ளர்கள் பாபு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மிகப்பிரமாண்டமான ஆழ்கடல் மீன்களின் குகை கண்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்காட்சி நாளை (7-ந்தேதி) தொடங்கு கிறது.

    இக்கண்காட்சியினை ராமநாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைக்கிறார். பொழுது போக்கு பூங்கா, ஷாப்பிங் திருவிழா, நுகர்வோர் ஸ்டால், உணவு திருவிழா உள்ளிட்ட ஏராளமான அரங்குகளுடன் பெரிய வர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த பொருட்காட்சி தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.இப்பொருட்காட்சி திறப்பு விழா ராமநாதபுரம் நகர சபை தலைவர் ஆர்.கே. கார்மேகம், துணைத் தலை வர் டி.ஆர்.பிரவீன் தங்கம், ராஜா நாகேந்திர சேதுபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை பொருட்காட்சி அமைப்பா ளர்கள் பாபு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • ஆழ்கடல் அழகை ரசித்திட படகின் இருபுறத்திலும் நீர் புகாத 14 கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    • ஒரே நேரத்தில் 50 பேர் பயணிக்கும் வகையில் விசைப்படகு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    கடல் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள், தங்கள் பயணங்களில் கப்பல் அல்லது படகின் மேல்தளத்தில் இருந்து கடலின் அழகை ரசிப்பர்.

    ஆழ்கடல் அழகை ரசிக்க நீர்மூழ்கி கப்பலில் செல்ல வேண்டும். இதற்கு அதிக செலவாகும். தற்போது இதற்கு மாற்றாக செமிசப் மெரின்' என் றழைக்கப்படும் விசைப் படகுகள் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் அமர்ந்தபடி கடல் அழகை ரசிக்கலாம்.

    கடலை காணும் வகையில் இரு புறமும் நீர் புகாத கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது. கடலில் செல்லும் போது படகில் கீழடுக்கு 1.4 மீட்டர் அளவில் ஆழ்கடலில் பயணிப்பதால் கீழ் அடுக்கில் உள்ளவர்கள் ஆழ்கடல் அதிசயங்கள், பவளப் பாறைகள் மற்றும் அரிய வகை நீர் வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கலாம்.

    இவ்வகை படகுகளில் செல்ல, பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், இந்த படகுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, அந்தமான் தீவுகளில் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது, அந்தமானில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திற்காக நாட்டிலேயே முதல்முறையாக புதுவையில் உள்ள பி.என்.டி.படகு கட்டும் தனியார் நிறுவனம், உப்பளம் துறைமுகத்தில் ரூ.4 கோடி செலவில் 'டிரை மரான்' எனும் செமி சப் மெரின் விசைப் படகு தயாரித்து வருகிறது. சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலுமினியத்தால் 16 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில், ஒரே நேரத்தில் 50 பேர் பயணிக்கும் வகையில் விசைப்படகு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    இதில், மேல் தளத்தில் 25 பேரும், கீழ் தளத்தில் 25 பேரும் பயணிக்கலாம். ஆழ்கடல் அழகை ரசித்திட படகின் இருபுறத்திலும் நீர் புகாத 14 கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் செல்லும்போது படகு ஆடாமல் பயணிக்க இருபுறமும் இறக்கை போன்ற அமைப்புடன் படகு கட்டப்பட்டு வருவதால் இதன் பெயர் 'டிரை மரான்' என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    • காற்றழுத்த தாழ்வு கன்னியாகுமரியை நெருங்கி வருவதையடுத்து குமரி கடலோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
    • சின்னமுட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுகங்களிலும், கடற்கரை கிராமங்களிலும் நாட்டுப்புற படகுகள் மற்றும் விசைப்படகுகளை பத்திரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில், டிச.25-

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்ட லம் நாளை குமரியை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு கன்னியாகுமரியை நெருங்கி வருவதையடுத்து குமரி கடலோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மீனவர் கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    காற்றின் வேகம் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலை யில் இதற்கான அறிவிப்பு குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராம மக்களுக்கு அந்தந்த பங்கு தந்தைகள் மூலமாகவும், மீனவ பிரதிநிதிகள் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் கரை திரும்புமாறும் அறிவு றுத்தப்பட்டு உள்ளனர்.

    ஏற்கனவே கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் ஒரு சில மீனவர்கள் மட்டுமே ஆழ்கடலில் மீன் பிடித்து வருகிறார்கள். அவர்களும் கரை திரும்புமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தங்களது படகுகளை பாது காப்பான இடங்களில் நிறுத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    சின்னமுட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுகங்களிலும், கடற்கரை கிராமங்களிலும் நாட்டுப்புற படகுகள் மற்றும் விசைப்படகுகளை பத்திரமாக நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது.

    • கடந்த மாதம் 29-ந் தேதி தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மேத்யூ கில்பர்ட் மற்றும் சிலர் விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர்.
    • மீன் பிடித்துக்கொண்டிரு க்கும்போது எதிர்ப்பாராமல் மேத்யூ கில்பர்ட் தவறி கடலில் விழுந்தார்.

    கன்னியாகுமரி :

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் வள்ளித்து றையை சேர்ந்தவர் மேத்யூ கில்பர்ட் (வயது39).

    மீன்பிடித் தொழிலாளி கடந்த மாதம் 29-ந் தேதி தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மேத்யூ கில்பர்ட் மற்றும் சிலர் விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர். 2 ம் தேதி இவர்களது படகு தேங்காய்பட்டணம் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிரு க்கும்போது எதிர்ப்பாராமல் மேத்யூ கில்பர்ட் தவறி கடலில் விழுந்தார்.

    இதனை பார்த்த உடன் சென்ற மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்டனர். அதற்குள் மேத்யூ கில்பர்ட் மூச்சு திணறி இறந்து விட்டார். ஆழ்கடல் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால் உடனே படகு கரை திரும்ப முடியவில்லை. 3 நாட்கள் படகை கரை நோக்கி செலுத்தி நேற்று மதியம் தேங்காய்பட்டணம் துறைமுகம் வந்து சேர்ந்தனர்.

    இது குறித்து அவரது அண்ணன் ரமேஷ் குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். மரைன் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து மேத்யூ கில்பர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கடலில் தவறிவிழுந்து பலியான மேத்யூ கில்பர்ட்க்கு ஜினி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×