search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress president rahul gandhi"

    தெலுங்கானா மாநிலத்தில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்னும் சில நாள்களில் தெலுங்கானாவில் மாற்றத்துக்கான புயல் வரும் என தெரிவித்துள்ளார். #TelanganaAssemblyElections #Congress #RahulGandhi
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை தக்கவைக்க தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணியும், பாஜகவும் போட்டியிடுகின்றன.

    இன்றுடன் நிறைவடையும் பிரச்சாரத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் கோடாட் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.  இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

    தெலுங்கானா மாநிலத்தில் இன்னும் சில நாள்களில் மாற்றத்துக்கான புயல் தாக்கும். இந்த புயலால் ஏற்படும் மாற்றத்தை மக்கள் வழங்க உள்ளனர். இந்த மாற்றத்தின் மூலம் தெலுங்கானாவின் கனவுகள் நிறைவேறும்.



    மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் மோடியும், மாநிலத்தில் ஆட்சி செய்த சந்திரசேகர் ராவும் கூட்டணி வைத்து செயல்பட்டு வருகின்றனர். எனவேதான், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆதரவளித்து வருகிறது.

    மாநிலத்தில் சந்திரசேகர் ராவை முதலில் தோற்கடிப்போம். அதன்பின், காங்கிரசும், மற்ற கட்சிகளும் மத்தியில் நரேந்திர மோடியை நிச்சயம் தோற்கடிப்போம்.

    தற்போது உங்கள் உடைகள் மற்றும் மொபைல்களில் 'மேட் இன் சீனா' என உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதை 'மேட் இன் தெலுங்கானா' என மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என தெரிவித்தார்.
    #TelanganaAssemblyElections #Congress #RahulGandhi
    பிரதமர் நரேந்திர மோடி, அனில் அம்பானிக்கு ஒரு இந்தியாவையும், விவசாயிகளுக்கு ஒரு இந்தியாவையும் படைக்கிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #Modi #AnilAmbani #NasikFormer
    புதுடெல்லி:

    மகாரஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நிபாட் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் சாதே. விவசாயியான இவர், தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை அறுவடை செய்து நாசிக் மார்க்கெட் கொண்டு சென்றார். 
    வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் மனம் நொந்துபோன சஞ்சய், ஒரு கிலோவுக்கு 1.40 ரூபாய் என பேசி முடித்தார். தன்னிடம் இருந்த மொத்த வெங்காயத்தையும் விற்றார்.

    4 மாத காலம் கஷ்டப்பட்டு உழைத்தும் சரியான பலன் கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருந்த சஞ்சய் சாதே, வெங்காயம் விற்று கிடைத்த 1064 ரூபாய் பணத்தை தபால் அலுவலகம் மூலம் பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, மகாராஷ்டிரா விவசாயி வெங்காயம் விற்று பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அனுப்பிய செய்தியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.



    இந்நிலையில், இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது வலைத்தளத்தில் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி இருவிதமான இந்தியாவை உருவாக்குகிறார்.

    ரபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தத்தில் எந்த வேலையும் செய்யாமல் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளதன் மூலம் அனில் அம்பானிக்கு ஒரு இந்தியாவையும், 750 கிலோ வெங்காயத்தை வெறும் 1064 ரூபாய்க்கு விற்பதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு இந்தியாவையும் படைக்கிறார் என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #Modi #AnilAmbani #NasikFormer
    கேரள மாநிலத்தையே புரட்டி போட்ட மழை வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க உதவிய மீனவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #KeralaFloods #Congress #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசு அமைத்து இருந்த மீட்பு குழுக்கள் மற்றும் இராணுவ படையினர் மிகவும் கடுமையாக போராடினர்.

    இந்த போராட்டத்தில்,கேரள மீனவர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. தங்களது படகுகள் போன்ற பல்வேறு வழிகளில் மீனவர்கள் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தனர். இதையடுத்து கேரளாவில் மழை விடுத்த நிலையில், தற்போது சீரமைக்கும் பணியில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், கேரள மழை வெள்ள சேதங்களை பார்வையிட  இன்று கேரளா வந்தடைந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  ஹெலிகாப்டர் மூலம் செங்கனூர் பகுதிக்கு சென்றார். அங்குள்ள ஒரு முகாமுக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, அங்கு தங்கியிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.



    செங்கனூர் பகுதியை பார்வையிட்ட பின்பு, ராகுல்காந்தி ஆலப்புழா சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், கேரள வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது உதவிய மீனவர்களுக்கு கேடயங்களை வழங்கி, வாழ்த்து கூறி கவுரவித்தார்.

    இதேபோல், நாளை கேரள முதல்மந்திரி பிணராயி விஜயன் தலைமையில் மீனவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நிசாகாந்தி அரங்கத்தில் நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை மந்திரி மெர்சி குட்டி அம்மா, சுற்றுலாத்துறை மந்திரி கடகம்பள்ளி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #Congress #RahulGandhi
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரைக்கான விண்ணப்பம் எதுவும் பெறவில்லை என வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார். #KailashMansarovarYatra #MEA #Rahulgandhi
    புதுடெல்லி:  

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரை செய்வதற்காக சிறப்பு அனுமதி கோரி மத்திய  வெளியுறவு துறை அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்திருந்ததாகவும், ராகுலின் விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலனை செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டது. கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது.


      
    இந்நிலையில், ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரைக்கான விண்ணப்பம் எதுவும் பெறவில்லை என வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வது தொடர்பான விண்ணப்பம் எதையும் நாங்கள் பெறவில்லை என தெரிவித்துள்ளார். #KailashMansarovarYatra #RaveeshKumar #Rahulgandhi
    கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை செல்ல முடிவு செய்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி கேட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    சீனாவின் கட்டுபாட்டில் உள்ள திபெத்தில் கைலாஷ் மலை உள்ளது. இங்கு மானசரோவர் புனித யாத்திரையை பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்து, புத்தமதம், ஜெயின் மற்றும் திபெத் மதம் ஆகிய 4 மதங்களை சேர்ந்த பக்தர்கள் கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை செல்கிறார்கள். பனி மற்றும் கடினமான பாதை காரணமாக புனித யாத்திரைக்கு குறிப்பிட்ட அளவே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இதற்கான முன்கூட்டியே பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த ஆண்டுக்கான யாத்திரைக்காக கடந்த பிப்ரவரி 20-ந் தேதி முதல் மார்ச் 20-ந்தேதி வரை பெயர்கள் பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி கேட்டு உள்ளார். மேலும் கைலாஷ் மலைக்கு ஹெலிகாப்டரில் செல்ல அவர் அனுமதியை எதிர்நோக்கி உள்ளதாக தெரிகிறது.

    ராகுல்காந்தியின் மானசரோவர் யாத்திரைக்கு அனுமதி பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    டெல்லியில் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட இப்தார் விருந்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்பட பலர் பங்கேற்றனர். #Congress #IftarParty #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் ராகுல் காந்தி. இவர் கட்சி தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு, முதல் முறையாக இன்று இப்தார் விருந்து அளித்தார். டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலில் இப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



    இந்த இப்தார்  விருந்தில் முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல்  மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

    இந்த விருந்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஷீலா தீட்சித், அகமது படேல்,  சீதாராம் யெச்சூரி, கனிமொழி, சரத் யாதவ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.



    மேலும், ரஷ்யா நாட்டு தூதர் நிகோலய் குகஷேவ் உள்பட பல வெளிநாட்டு பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர். #Congress  #Congress #IftarParty #RahulGandhi 
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். #Rahulgandhi #RamdasAthawale
    மும்பை:

    கர்நாடகம் மாநில சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றால் பிரதமராக பதவியேற்க தயார் என்றார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி பிரதமராக இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்ற ஆசை குறித்து பேசியுள்ளார். ஆனால், நான் என்ன நினைக்கிறேன் எனில், அவர் இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

    கர்நாடக தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி பாஜகவை தலித்களுக்கு எதிரான கட்சி என சித்தரிக்க முயலுகிறது. மக்களுக்கு உண்மை நிலை நன்கு தெரியும் என தெரிவித்துள்ளார். #Rahulgandhi #RamdasAthawale
    ×